வேர்க்கடலை போண்டா. | arusuvai


வேர்க்கடலை போண்டா.

food image
வழங்கியவர் : mrs.komu
தேதி : புதன், 03/11/2010 - 20:26
ஆயத்த நேரம் : 5 நிமிடங்கள்.
சமைக்கும் நேரம் : 20 நிமிடங்கள்.
பரிமாறும் அளவு : 8 நபர்களுக்கு.

 

  • வறுத்த வேர்க்கடலை - ஒரு கப்
  • முந்திரி பருப்பு - அரை கப்
  • பிரட் துண்டுகள் - 2 கப்
  • பால் - ஒரு கப்
  • வெங்காயம் - ஒன்று
  • பச்சை மிளகாய் - 4
  • இஞ்சி - ஒரு சிறிய துண்டு
  • கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு
  • உப்பு - தேவையான அளவு
  • பொரிப்பதற்கு எண்ணை - 400 கிராம்

 

  • வேர்க்கடலை,முந்திரி பருப்பு, வெங்காயம், மிளகாய், இஞ்சி,எல்லாவற்றையும் மிக்சியில் கரகரப்பாக அரைத்து எடுக்கவும்.
  • பிரட் துண்டுகளை உதிர்த்து,கறிவேப்பிலை, கொத்துமல்லி சேர்த்து, பால் விட்டு கெட்டியாகப்பிசையவும்.
  • தேவையான உப்பைக்கடைசியாகச்சேர்த்து நன்கு கலக்கவும்.
  • கடாயில் எண்ணை ஊற்றி நன்கு காய்ந்ததும், செய்துவைத்திருக்கும் கலவையை போண்டாக்களாக கிள்ளி எண்ணையில் போடவும்.
  • நன்கு சிவந்து மொறு, மொறுப்பானதும் வடிகட்டியில் போடவும்.
  • ஒருதட்டில் வைத்து சூடாகப்பரிமாறவும்.
கடலை மாவு சேர்ப்பதில்லை ஆதலால் குழந்தைகள், பெரியவர்கள் எல்லாருக்குமே கொடுக்கலாம்.



இந்தப் பிரிவில் மேலும் சில குறிப்புகள்..