உருளைக்கிழங்கு டாஃபி.

தேதி: November 3, 2010

பரிமாறும் அளவு: 10 நபர்களுக்கு.

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

உருளைக்கிழங்கு துருவல் - 3 கப்
சர்க்கரை - ஒன்றரை கப்
நெய் - ஒன்றரை கப்
முந்திரிபருப்பு - 15
ஏலக்காய் - 3


 

உருளைக்கிழங்கை மண்போக நன்கு அலம்பி தோல் நீக்கவும்.
கிழங்குகளை கேரட் சீவியில் துருவிக்கொள்ளவும்.
இந்தத்துருவலை வாணலியில் சிறிது நெய் விட்டு நன்கு வதக்கவும்.
இன்னொரு வாணலியில் சர்க்கரையைப்போட்டு அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி கெட்டி பாகு காய்ச்சவும்.
காய்ந்ததும் உருளைத்துருவலை கொட்டிக்கொண்டே கிளறவும்.
இடையில் கொஞ்சம், கொஞ்சமாக நெய்யைச்சேர்க்கவும்.
எல்லாம்சேர்ந்து நன்கு கெட்டியாகி சட்டியில் ஒட்டாமல் சுருண்டு வரும் சமயம் முந்திரியை நெய்யில்வறுத்துமேலாகப்போட்டு ஏலப்பொடியும் போட்டு இறக்கவும்.
ஒரு தம்பாளத்தில் நெய் தடவி அதில் கலவையைக்கொட்டவும்.
ஆறிய பிறகு துண்டுகள் போடவும்.


இது ஒரு வித்யாசமான இனிப்பு. குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

மேலும் சில குறிப்புகள்


Comments

பேர் பாத்ததுமே கண்டுபிடிச்சிட்டேன் நீங்களாதான் இருக்கும்னு;)

உங்க உருளைக்கிழங்கு காரசேவுடன் இதுவும் பண்ணிடறேன்.

குறிப்புக்கு நன்றி;-)

Don't Worry Be Happy.

எப்படி அவ்வளவு கரெக்டா கண்டு பிடிச்சீங்க. பெரிய ஆளுதான் நீங்க.