எக் சிக்கன் நூடுல்ஸ்

தேதி: November 8, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (8 votes)

 

எக் நூடுல்ஸ் பாக்கெட் - சிறியதாக ஒன்று
சிக்கன் - ஒரு துண்டு (எலும்பில்லாதது)
வெங்காயம் - ஒன்று
பச்சைமிளகாய் - இரண்டு
சிகப்பு குடைமிளகாய் - கால் பகுதி
ஆரஞ்சு குடைமிளகாய் - கால் பகுதி
பச்சை குடைமிளகாய் - கால் பகுதி
முட்டைகோஸ் - சிறிதளவு
கேரட் - பாதியளவு
சோயா சாஸ் - 2 மேசைக்கரண்டி
எண்ணெய் - 5 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு


 

காய்களை நீளவாக்கில் நறுக்கி வைத்துக் கொள்ளவும். சிக்கனை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு லிட்டர் அளவு தண்ணீரை அடுப்பில் வைத்து நன்கு கொதிக்க ஆரம்பிக்கும் போது நூடுல்ஸை சேர்த்து இரண்டு நிமிடம் வேக வைக்கவும். பின்பு வடிக்கட்டி விட்டு அதில் குளிர்ந்த தண்ணீரை தாராளமாக ஊற்றி குலுக்கி வைக்கவும்.
ஒரு வாயகன்ற வாணலியில் எண்ணெயை ஊற்றி காய்ந்ததும், சிக்கனை போட்டு இரண்டு நிமிடம் வதக்கவும்.
அதன் பின் வெங்காயம், முட்டை கோஸ், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
லேசாக வதங்கியது, குடைமிளகாய்களையும் தேவையான அளவு உப்பும் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
பிறகு சோயாசாஸ் சேர்த்து சிறிது நேரம் கிளறவும்.
பின் நூடுல்ஸை சேர்த்து நன்கு கிளறி விட்டு எல்லாம் ஒன்று சேர வந்ததும் இறக்கவும். விரும்பினால் கொத்தமல்லி தூவி பரிமாறவும். நல்ல சுவையுடன் கூடிய எக் சிக்கன் நூடுல்ஸ் ரெடி.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

Hai appufar, nan abudhabila irukken, en paiyanuku noodles roamba pidikum plain noodles la egg searthu kodupen but neenga kudaimilakai serthu iruppathu parkka and udambuku nallathu so nan try panniparkiren thanks.

சிக்கனை இப்படி பொறித்து சேர்த்ததில்லை. மாறாக 65 செய்து அதை போடுவேன். உங்கள் குறிப்பு படி செய்தால் சுலபமாக வேலை முடியும்!

வாழ்த்துக்கள்

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

குறிப்பை வெளியிட்ட அட்மின் அவர்களுக்கு முதலில் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

கலையரசி நீங்கள் அபுதாபியா?
நான் துபாயில் தான் இருக்கின்றேன்.
உங்களுடைய பின்னூட்டம் எனக்கு மிகவும் சந்தோஷம் தந்தது.
செய்து பார்த்து விட்டு சொல்லுங்கள் சரியா....

ஆமினா எப்படி இருக்கீங்க?
உங்கள் பின்னூட்டம் கண்டு மிக்க மகிழ்ச்சி.
நிச்சயம் இந்த முறையில் செய்வது மிகவும் சுலபமாக உள்ளது.
உடம்பிற்க்கும் நல்லது.டேஸ்ட்டும் நன்றாகவே இருக்கும்.
செய்து பார்த்துட்டு சொல்லுங்க.நன்றி.

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

அப்சரா, எப்படியிருக்கீங்க? எக் சிக்கன் நூடுல்ஸ் ரொம்ப சூப்பரா இருக்குப்பா. என் ஆத்துக்காரருக்கு நூடுல்ஸ் மேல ஒரு காதல்னே சொல்லலாம். இதை பார்த்தா உடனே செய்துட்டு தான் அடுத்த வேலையே பார்ப்பார். விளக்கப் படங்களும், செய்முறை குறிப்பும் அருமை. வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் நளபாகம் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

ரொம்ப நல்ல டிஷ்.படங்கள் அழகா வந்திருக்கு, நூடுல்ஸ் எனக்கு ரொம்ப பிடிக்கும்.

ஹாய் கல்பனா...நலமா...?
பிஸியான சூழ்நிலையிலும் வந்து பின்னூட்டம் தந்ததற்க்கு மிகவும் நன்றிங்க.
(பட்டிமன்றம் நடுவர்னா சும்மாவா....)
செய்து பார்த்துட்டு சொல்லுங்க.

ஹாய் ரீம் எப்படி இருக்கீங்க?
எனக்கும் நூடுல்ஸ்_னா மிகவும் பிடிக்கும்.
உங்கள் கருத்துக்கு மிகவும் நன்றீங்க.

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

அப்சரா assalamu alaikum உங்க noodlesரொம்ப சூப்பர், நானும் இப்படி தான் செய்வேன் ஆனால் சிக்கனை இப்படி சேர்ப்படில்லை அடுத்தமுறை இன்ஷா அல்லாஹ் டிரை செய்து பார்கிறேன்.ஒரே ஒரு உதவி துபாயில் எங்கே hakka noodles கிடைக்கும் என்று தெரியுமா.ஊரிலிருந்து வரும்போது வாங்கிவந்து செய்தேன் ஆனால் இங்கே லுலு,சன்ரைஸ் என்று எல்லா கடையிலும் தேடிபார்தேன்.உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்களேன்.

sohara rizwana
SMILING IS A GUD MEDICINE 2 ALL

வ அலைக்கும் சலாம் ரிஜ்வானா.
உங்களுடைய கருத்துக்கு மிகவும் நன்றிமா....
ஹக்கா நூடுல்ஸ்னா என்னன்னே தெரியலையே.....
ராகியோட நூடுல்ஸா...?
நம்ம ஊரு ப்ராடக்ட்டெல்லாம் அல் ஆதில் சூப்பர்மார்கெட்டில் கிடைக்கும்.
அங்கே வேணும்னா முயற்ச்சி செய்து பாருங்களேன்.
கராமாவில் இருக்கும் தமிழ் சந்தை கடையிலும் முயற்ச்சி செய்து பாருங்க.

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

I like so much for this recepi