கிரில்டு சிக்கன்

தேதி: November 9, 2010

பரிமாறும் அளவு: 4 persons

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.3 (4 votes)

 

கோழி முழு தொடை - 4
ஆலிவ் ஆயில் - 5 டேபிள்ஸ்பூன்
மிளகு தூள் - 3 டீஸ்பூன்
பூண்டு தூள் - 3 டீஸ்பூன்
உப்பு - 1 1/2 டீஸ்பூன்


 

முதலில் கோழியை தோலுடன் சுத்தம் செய்து மேலே கத்தியால் கீரிவிட்டு,தண்ணீர் இல்லாமல் வடிகட்டி வைக்கவும்,எல்லா மசாலாக்களையும் ஒரு பெரிய பேசினில் போட்டு ஒன்றாக குழைத்து அதில் கோழிகளை போட்டு பிரட்டி வைக்கவும்.
பிரட்டிய கோழிகளை 200° சூட்டில் அவனில் வைத்து சுடவும்.ஒரு பக்கம் வெந்ததும் திருப்பிபோட்டு மறுபக்கமும் சுட்டெடுக்கவும்.
மிகவும் சுவையான & ஈஸியான கிரில்டு சிக்கன் தயார்.இதனுடன் சாலட் கீரை வைத்து சாப்பிடலாம்.


பிறட்டிய கோழிகள் சுமார் 6 மணி நேரங்கள் ஊற வேண்டும்.காலையில் ஊற வைத்து இரவு செய்வதென்றால் இன்னும் நல்லா இருக்கும்.அவனில் கோழிகளை அடுக்கிய பின் அதன் அடியில் ஒரு ட்ரேயை வையுங்கள்.ஏனென்றால் கோழியில் உள்ள கொழுப்பு,எண்ணெய் மற்றும் தண்ணீர் எல்லாம் வடிந்துவிடும்.சிறிய உருளைகிழங்குகள் இருந்தால் அந்த ட்ரேயில் போட்டு வைத்தால் அந்த மசாலா நீரில் வெந்து அதுவும் கோழியுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.இது என் favorite dish.

மேலும் சில குறிப்புகள்