ADVICE PLEASE

எனக்கு திருமணம் ஆகி 2 ஆண்டு ஆகின்றது.ஆனா நாங்க குழந்தை வானம்னு இருந்தோம்.இப்ப 3 மாசமா குழந்தைக்கு முயற்சி பண்ணிடு இருக்கோம்.போன மாசம் 5 நாள் தள்ளிபோச்சு,டெஸ்ட் பண்ணினா நெகடிவ்னு வந்தது,6வது நாள் மாதவிடாய் வந்திடுச்சு.நான் ஒல்லியா இருக்கிறேன்.நான் கருவுற ஏதாவது டிப்ஸ் சொல்லுங்க.நான் வேய்ட் போடவும் டிப்ஸ்சொல்லுங்க.தமிழ்ல ஏழுத சொன்னவங்களுக்கு நன்றி.

மதுமதி இப்போ மூணு மாசமாத்தானே முயற்சி பண்றீங்க. கவலைப்பட்டு அதையே யோசிச்சுகிட்டு இருக்காமல் இயல்பா இருங்க.

முதலில் நல்ல மகப்பேறு மருத்துவரை ஆலோசியுங்க. உடனே நமக்கு குறை இருக்கான்னு டெஸ்ட் பண்ணச் சொல்றாங்களோன்னு தப்பா நினைக்காதீங்க. குழந்தைக்காக திட்டமிடும் முன் நாம நல்ல மகப்பேறு மருத்துவரை அணுகுவது முக்கியம். அது நமக்கு பல விஷயங்களைத் தெளிவுபடுத்தும். நல்ல ஆலோசனைகளும் கிடைக்கும். இது பிறக்கப் போகும் குழந்தைக்கும் உங்களுக்கும் மிகவும் நல்லது.
இது ஒரு பொதுவான செக்கப்தான். விரைவில் தாயாக வாழ்த்துக்கள்!

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

உங்க பதிலுக்கு நன்றி,kavisiva

மேலும் சில பதிவுகள்