பாகற்காய் பிட்லே

தேதி: November 12, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (1 vote)

பிட்லே என்பது கடலைப்பருப்பை வைத்து செய்யும் ஒரு வகை குழம்பு.

 

பாகற்காய் - ஒன்று (சிறியது)
புளி - எலுமிச்சை அளவு
மிளகாய்த்தூள், சாம்பார் தூள் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
கடலைப்பருப்பு - அரை கப்
துவரம்பருப்பு - கால் கப்
கடுகு, எண்ணெய் - தாளிக்க
தேங்காய் - சிறிதளவு (2 தேக்கரண்டி)


 

பாகற்காயை மெல்லியதாக நறுக்கி, ஒரு மணி நேரம் வரை உப்பில் ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும். தேங்காயை துருவிக் கொள்ளவும். புளியை ஊற வைக்கவும்.
கடலைப்பருப்பையும், துவரம்பருப்பையும் சேர்த்து ஒரு மணி நேரம் வரை ஊற வைத்து குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்ததும், பாகற்காயை போட்டு நன்கு பொரிய விடவும்.
பாகற்காயில் புளியை கரைத்து ஊற்றி மிளகாய்த்தூள், சாம்பார்த்தூள், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
தேங்காய் துருவலில் சிறிதளவு சர்க்கரை கலந்து அரைத்து, கொதிக்கும் புளிக்கரைசலில் அரைத்த விழுதை சேர்த்து கொதிக்க விடவும்.
நன்கு கொதிக்கும் போது, வேகவைத்த பருப்பை நன்கு மசித்து கலந்து கொதிக்க விடவும்.
சுவையான பாகற்காய் பிட்லே ரெடி. கொத்தமல்லி, பெருங்காயம் தூவி பரிமாறவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

குறிப்பை வெளியிட்ட அட்மின் மற்றும் குழுவிற்கு நன்றி

அன்புடன்
பவித்ரா

பவித்ரா, பாகற்காய் பிட்லே வித்தியாசமான பேராக இருக்கின்றது.நான் இதுவரை இப்படி செய்ததில்லை.

எனக்கு பாவற்காய் என்றால் மிகவும் விருப்பம்.உங்கள் முறைப்படியும் செய்து பார்த்திட வேண்டியதுதான்.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

உங்க பதிவிற்கு ரொம்ப நன்றிப்பா. ரொம்ப நல்லாருக்கும், அம்மாவின் ஸ்பெஷல் இது, அம்மா நான் ஊருக்கு வரும் போது என்ன வேணும்னு கேட்டா, நான் இது தான் சொல்லுவேன். இப்ப கூட செய்வதற்கு முன்னாடி அம்மாக்கிட்ட கேட்டுட்டு தான் செய்தேன்.

நன்றி ராணி. தொடர்ந்து வாங்க.

அன்புடன்
பவித்ரா

பவித்ரா எப்படி இருக்கீங்க?
நான் சில நாடகங்களில் சொல்லி கேள்வி பட்டதுண்டு.
சுவையானதாக சொல்லுவாங்க.நான் கூட நினைப்பேன்.இந்த பாகற்காய் பிட்லே எப்படி இருக்கும்னு?இப்ப உங்க குறிப்பை பார்த்து தெரிஞ்சுகிட்டேன்.
பார்க்கவே நன்றாக உள்ளது.
என்ன என் கணவருக்கு பாகற்காய் பிடிக்காததால் நான் ஊருக்கு போன பின்புதான் ட்ரை செய்யணும்.ஹூம்...நீங்க பக்கத்தில் இருந்தால் ஒரு வாய் வாங்கி டேஸ்ட் செய்திருப்பேன்.
வாழ்த்துக்கள் பவித்ரா.

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

பவி, பாகற்காய் பிட்லே. இந்த மாதிரி குறிப்பை இப்ப தான்பா கேள்விப்படுறேன். உண்மையாவே வித்யாசமான குறிப்புதான். சமீபமாக வந்த குறிப்புகள் அத்துணையும் வித்தியாசமானவை தான். அறுசுவை வித்தியாசங்களை புகுத்த ஆரம்பிச்சுடுச்சி போல இருக்கு. மாம்சுக்கு, பாகற்காய்னா ரொம்ப பிடிக்கும். கண்டிப்பா இந்த முறையில் செய்து தந்து மாம்சை அசத்திடறேன். வாழ்த்துக்கள் பவி :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

பவி,
பாகற்காய் பிட்லே,நான் கேள்விப்பட்டதே இல்லை.செய்முறையும் எளிமையா இருக்கு.ஒரு முறை ட்ரை பண்ணிட்டு சொல்றேன்.வாழ்த்துக்கள்.

பவி கொண்டைக்கடலைப் பிட்லே சாப்பிட்டு இருக்கேன். சாம்பார் பொடிக்கு தேவையான பொருட்கள வறுத்து பொடி பண்ணி சேர்த்து செய்வாங்க. அது ரொம்ப நேரம் எடுத்து செய்யற மாதிரி இருக்கும். இது ஈஸியான முறையான மாதிரி இருக்கு. நாளைக்கு சண்டே வீட்டுல எல்லோரும் இருப்பாங்க அப்ப செஞ்சு கொடுக்க வேண்டியதுதான். நேரம் கிடைக்கும்போது அம்மா கைமணத்த மிஸ் பண்ணாம எங்களுக்கும் இப்படி செஞ்சி காண்பிங்க.

அப்சரா, நான் நலம்ப்பா, நீங்க நல்லாருக்கீங்க தானே:))சுவை ரொம்ப வித்தியாசமா இருக்கும் அப்சரா:) ஊருக்கு போய் ட்ரை பண்ணி பாருங்க:)பக்கத்தில் இல்லாட்டி என்ன, பார்சல் அனுப்பிடறேன். நன்றி அப்சரா

கல்ப்ஸ், எல்லா குறிப்பிலும் வந்து எனக்கு பின்னூட்டம் கொடுக்கறீங்க, ரொம்ப சந்தோஷமா இருக்கு கல்ப்ஸ். எப்பவுமே துவரம் பருப்பு போட்டு தானே சாம்பார் செய்வோம், அதனால் இதன் சுவை எல்லாருக்கும் பிடிக்கும். மிதி பாகற்காய்ன்னு சொல்லுவாங்க, குட்டி குட்டியா கோவக்காய் மாதிரி இருக்கும், அதில் விதையோடு செய்யலாம், சாதா பாகற்காய் விட அதில் செய்தால் சுவை இன்னும் அருமையா இருக்கும்.

அன்பு, நன்றி அன்பரசி. ஒவ்வொரு முறை குறிப்பை அனுப்பும் போது அறுசுவையில் தேடிபார்த்துட்டு அது இல்லை என்றால் தான் அனுப்புவேன் அன்பு, ஆனா இந்த முறை தேட நேரம் இல்லை, அப்படியே அனுப்பிட்டேன். வாழ்த்துக்கு நன்றி. ட்ரை பண்ணி பாருங்க:))

வினோ, வாங்க வினோ. கொண்டைக்கடலையிலும் செய்வாங்களா, நான் ட்ரை பண்ணி பார்க்கிறேன். வறுத்தும் செய்யலாம் வினோ, ஆனா சுவை கிட்டத்தட்ட சாம்பார் மாதிரியே இருக்கும், அதனால நான் வறுப்பதில்லை. உங்க பின்னூட்டத்திற்கு நன்றி. வீட்டில் செய்து யாரும் எங்க வினோவை அடிக்க வந்திடாதீங்க :)) (சும்மா சொன்னேன் வினோ, நல்லாருக்கும், ட்ரை பண்ணிட்டு அம்மா என்ன சொன்னாங்கன்னு சொல்லனும்). அம்மாவோட கை மணம் வந்துகொண்டே இருக்கும் வரிசையாக:))

அன்புடன்
பவித்ரா

pavi

உங்க பிட்லே தான் அடுப்புல கொதிக்குது சாய்திரம் வந்து எப்படி இருந்ததுனு சொல்றேன்

மீரா கிருஷ்ணன்

யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா

என்ன மீரா, பிட்லே கொதிக்க லேட் ஆச்சா, இன்னும் எப்படி இருந்ததுங்கற பதிவை காணோமே!! சீக்கிரம் வந்து, எப்படி இருந்ததுனு சொல்லுங்க மீரு:))

அன்புடன்
பவித்ரா

பாகற்காயில் பருப்பு சேர்த்து செய்தது இதுவே முதல் முறை. சுவை வித்தியாசமாக இருந்தது ..நன்றி பவித்ரா...

வாழு, வாழவிடு..

ஹாய் பவி,
இன்று லன்ச்க்கு உங்க பாகற்காய் பிட்லே செய்தேன். நான் வழக்கமாக செய்யும் பிட்லே, கொண்டைக்க‌டலை எல்லாம் வேகவைத்து, மிளகாய் வறுத்து அரைத்துவிட்டு செய்ய கொஞ்சம் நேரம் எடுக்கும். ஆனால், இது செய்வதற்கு ரொம்ப சிம்பிளா, டேஸ்டும் ‌சூப்பரா இருந்தது. சுவைமிகு குறிப்புக்கு மிக்க‌ ந‌ன்றி பவி! குறிப்பை என்னோட விருப்பப் பட்டிய‌ல்ல‌ சேர்த்தாச்சு!

அன்புடன்
சுஸ்ரீ

மிக்க நன்றி ருக்சானா

அன்புடன்
பவித்ரா

உங்க பதிவை பார்த்து மகிழ்ச்சி. உங்க செய்முறையை குறிப்பாக கொடுத்திருந்தால் நானும் செய்து பார்ப்பேனே?? ஏற்கனவே இருந்தாலும் சொல்லுங்க. வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி

அன்புடன்
பவித்ரா

நான் துவரம்பருப்புல மட்டும் செய்வேன். உங்க முறை செய்வதற்கு சுலபமாவும் சுவையாகவும் இருந்தது. மிக்க நன்றி;-)

Don't Worry Be Happy.

dear pavithra

valakamaga naan (milagai, thaniya, kadalaiparuppu, perungayam, thengai) intha porutkalai ellam ennaiyil varuthu viluthaka araithu, vega vaitha thuvaramparuppudan seiven. anal ithu konjam romba sulabamaka irukkirathu

nandri

muyarchi sei , valvil munneru nermaiyana vazhiyil, lanjathirku NO sollu