இஞ்சி குழம்பு

தேதி: November 12, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.4 (7 votes)

 

இஞ்சி - 50 கிராம்
பூண்டு - 50 கிராம்
வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
பச்சை மிளகாய் - 2
புளி - எலுமிச்சை அளவு
மிளகாய் - தூள் - அரை தேக்கரண்டி
மிளகு - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை - தாளிக்க
நல்லெண்ணெய் - ஒரு தேக்கரண்டி
நெய் - ஒரு தேக்கரண்டி


 

ஒரு பாத்திரத்தில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ளதை போட்டு தாளித்து பூண்டு மற்றும் கீறிய பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும்.
அதனுடன் நறுக்கின வெங்காயம் சேர்த்து நன்கு சிவக்க வதக்கவும்.
இப்பொழுது அரைத்து வைத்திருக்கும் இஞ்சி (தோல் சீவிய பின்) மற்றும் மிளகு கலவையை சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.
பின்னர் தக்காளி சேர்த்து குழையும் வரை வதக்கவும்.
புளியை 3 கப் தண்ணீர் சேர்த்து கரைத்து அதை வதக்கியவற்றுடன் சேர்த்து கொதிக்க விடவும்.
ஒரு கொதி வந்ததும் மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்க்கவும்.
மிளகாய் தூள் பச்சை வாசம் போகும் வரை கொதிக்கவிட்டு எண்ணெய் மேலே வந்ததும் இறக்கி சூடு சாதம் இல்லை இட்லி தோசையுடன் பரிமாறவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

இஞ்சி குழம்பு குறிப்பு பார்த்தேன் பா.. இஞ்சி மிளகு மிளகாய் மூன்றும் போட்டால் காரம் அதிகமாய் இருக்காதா..

லாவண்யா, இஞ்சி குழம்பு உடம்புக்கு கெல்தியான ஒரு உணவு.

சிலசமையம் ரசத்திற்கு பதிலாக இந்த முறைப்படி செய்து சாப்பிடுவோம்.
எனது வீட்டுக்காரருக்கு மிகவும் பிடித்த டிஸ்.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

லாவண்யா, தொடர்ந்து நல்ல காரசாரமான குறிப்பா தான்பா தர்றீங்க. அத்தனையும் அருமை. இஞ்சி குழம்பு பார்த்தாலே சளி பறந்தோடிடுமே :)என் மாமியார் சுக்கு குழம்பு வைப்பார். காயாத சுக்கில் இதுவரை வைத்தது இல்லை ;) நல்ல ஆரோக்கியமான குறிப்பு. எளிமையான பொருட்களை கொண்டு செய்யலாம். வாழ்த்துக்கள். தொடர்ந்து இதே போன்று நல்ல குறிப்புகளை தரவேண்டும் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

லாவண்யா,
இஞ்சி குழம்பு பார்க்கவே சாப்பிட தூண்டுது. நான் இதுவரை இஞ்சியில் குழம்பு சாப்பிட்டது இல்லை.குளிர்காலத்துக்கு ஏற்ற ரெசிப்பி.வாழ்த்துக்கள்.

லாவண்யா... சூப்பரா இருக்குங்க. கண்டிப்பா செய்து பார்த்துடுவோம்... வாழ்த்துக்கள் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சுதா,
இஞ்சி குழம்பு கொஞ்சம் காட்டமா தான் இருக்கும். இது சளிக்கு ரொம்பவே நல்லது. குளிர் காலத்திற்கு சூடு சாதத்துடன் சாப்பிட அமிர்தமாக இருக்கும்.

யோகராணி
என் வீட்டிலேயும் அனைவருக்கும் பிடிக்கும். ஒரு நாள் செய்து சாதம், இட்லி தோசை என்று எல்லாத்துக்கும் தொட்டு கொள்ளுவோம். (கொஞ்சம் நிறையவே வைத்து மறு நாள் சூடு பண்ணி சுண்ட வைத்து வேற சாப்பிடுவோம்)

கல்பனா
உங்களின் பாராட்டிற்கு மிக்க நன்றி. நாங்களும் சுக்கு குழம்பு செய்வோம். அதை விட எனக்கு இது தான் ரொம்பவே பிடிக்கும். செய்து பார்த்துட்டு சொல்லுங்க....

அன்பரசி,
உங்களின் பின்னூட்டம் கண்டு மிக்க மகிழ்ச்சி. என்னபா இப்படி சொல்லிடீங்க....வீட்டுக்கு வாங்க சாப்பிடலாம்.....இல்லைனா எங்க இருக்கீங்கனு சொல்லுங்க பார்சல் அனுப்பிடறேன்....

வனிதா
உங்களின் பின்னூடத்திற்கு நன்றி. செய்து பார்த்துட்டு சொல்லுங்க...

நன்றி
லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

லாவண்யா,
நேற்று உங்க இஞ்சி குழம்பு செய்தேன்.நல்ல கார,சாரமா இருந்தது.என்னவர் விரும்பி சாப்பிட்டார்.நல்ல அருமையான ரெசிப்பி தந்ததற்கு ரொம்ப நன்றி.

அன்பரசி,

என் குறிப்பை செய்து பார்த்து பின்னூட்டம் தந்ததற்கு மிக்க நன்றி.. உங்களவருக்கு பிடித்ததில் சந்தோஷம்.

நன்றி
லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

hi, i cooked inchi kuambu yesterday it was really good.
thank u.

Indru ungal inchi kulambu seithen migavum arumai nalla karam en kanavaruku cold pidithullathal ikkulambinai seithen intha malai nerathirku yetra kulambu!!! Ungalin intha kuripirku migavum nanry.

na senju pathen rmb supera irunthuchi en kulanthainga rmb virumbi sapitanga