தேங்காய் மிளகு வறுத்து அரைத்த நண்டு

தேதி: April 12, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

1
Average: 1 (1 vote)

 

நண்டு - அரை கிலோ
மிளகாய் தூள் - அரைத் தேக்கரண்டி
மிளகு - ஒன்றரை தேக்கரண்டி
எண்ணெய் - கால் கிலோ
இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
கரம் மசாலாப் பொடி - அரை தேக்கரண்டி
வெங்காயம் - 2
தக்காளி - கால் கிலோ
சோம்பு - சிறிது
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
தேங்காய் - ஒரு மூடி


 

நண்டை சுத்தம் செய்து கழுவி நீரை வடித்து இஞ்சி, பூண்டு விழுது, மஞ்சள் தூள் சேர்த்து 10 நிமிடம் ஊற விடவும்.
வெங்காயம், தக்காளி இரண்டையும் நறுக்கிக் கொள்ளவும்.
தேங்காயை பூப்போல் துருவிக் கொள்ளவும்.
வெறும் வாணலியில் தேங்காய் துருவல், மிளகு இரண்டையும் தனித்தனியாக வறுத்துக் எடுத்துக் கொள்ளவும்.
ஊற வைத்த நண்டில் வறுத்த தேங்காய் துருவல், மிளகு சேர்த்து மறுபடியும் பத்து நிமிடம் ஊறவிடவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் சோம்பு போட்டு தாளிக்கவும்.
தாளித்ததும் வெங்காயம், தக்காளி, உப்பு சேர்த்து வதக்கி பிறகு அதனோடு மிளகாய் தூள், கரம் மசாலாப் பொடி சேர்த்து வதக்கவும்.
ஒன்றாக வதங்கியதும் நண்டைச் சேர்த்து வதக்கி தேவையான எண்ணெய் விட்டு சிவக்க வறுத்து எடுக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

All website has picture, actually great pics.. Especially food blogs.. eg http://www.saffronhut.blogspot.com/, http://aayisrecipes.blogspot.com/,http://pusiva.blogspot.com/ - All by amateurs and south indian food.
So I guess in order for people to come to your site you should have relishing great pics.

தங்களது கருத்துக்கு மிகவும் நன்றி. நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை. படங்கள், அதுவும் தரமான படங்கள் இல்லை என்பது அறுசுவையின் முக்கிய குறை. மற்றவர்களிடம் இருந்துதான் தற்போது குறிப்புகள் பெறப்பட்டு வெளியிடப்படுகின்றன. குறிப்புகளை எளிதாக வாங்கும் அளவிற்கு படங்களை வாங்க இயலுவதில்லை. இருப்பினும் எங்களால் ஆன அனைத்து முயற்சிகளையும் செய்து வருகின்றோம். கூடிய விரைவில், படிப்படியான செய்முறை விளக்கப் படங்களுடன் கூடிய சமையல் குறிப்புகளுக்கென ஒரு பகுதி வெளியிட உள்ளோம். சமையல் பற்றி எந்த முன் அனுபவமும் இல்லாதவர்கள்கூட மிக எளிதாக சமைப்பதற்கு அந்த பகுதி உதவவேண்டும் என்பது எங்கள் எண்ணம். தங்களது கருத்தினை மிகவும் முக்கியமானதாக எடுத்துக் கொண்டுள்ளோம். விரைவில் இந்தக் குறை நீங்கும் என்று நம்புகின்றோம்.

அன்புள்ள அண்ணா

நேற்று என் கணவர் பிரஷ் நண்டு கிடைத்தது உன் அறுசுவையை நம்பி வாங்கிவந்துவிட்டேன் என்று என்னிடம் கொடுக்க நான் ஒன்றும் புரியாமல் முழித்தேன்.காரணம் என் புகுந்தவிட்டிரும் செய்ததில்லை என் பிரந்தவீட்டிலும் செய்ததில்லை.என் கணவருக்கு அவர் நன்பர் வீட்டில் சாப்பிட்டு பழக்கம் அவ்வளவே.சரி என்று ஒரு வழியாய் இந்த ரெசிப்பி செலக்ட் செய்து தேங்காய் மட்டும் கொஞ்ஜமாக சேர்த்தேன்.(அவருக்கு தேங்கா வாடை பிடிக்காது )என் கணவரும் சாப்பிட்டு என்னை மிகவும் பாராட்டினார்.

அந்த பாராட்டெல்லாம் உங்களுக்கும் நமது சகோதரிகளுக்கும் அண்ணா.

நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை நண்டெல்லாம் செய்து பழகுவேன் என்று.உங்கள் அறுசுவை தளத்தால் உண்மையில் பயனடைந்தேன் .

உங்களுக்கும் சகோதரிகளுக்கும்
நன்றி சொல்ல வார்த்தைகள் என்னிடம் இல்லை அண்ணா!