சீனி அவரைக்காய் பொரியல்

தேதி: November 14, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

1. சீனி அவரைக்காய் - 1/4 கிலோ
2. வெங்காயம் - 1/2
3. சாம்பார் தூள் - தேவைக்கு
4. உப்பு - தேவைக்கு

தாளிக்க:

1. கடுகு
2. சீரகம்
3. உளுந்து
4. கடலைப்பருப்பு
5. எண்ணெய்


 

கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்கவும்.
இதில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
பின் நறுக்கிய சீனி அவரைக்காய் சேர்த்து பாதி வதக்கி, தூள் சேர்த்து பிரட்டவும்.
உப்பு சேர்த்து தேவையான அளவு நீர் சேர்த்து மூடி வேக விடவும்.


விரும்பினால் கடைசியாக தேங்காய் துருவல் சேர்க்கலாம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

கொத்தவரங்கா தான் சீனி அவரைன்னு சொல்ரீங்களா? செய்துபாத்துட்டு சொல்ரேம்பா.

கோமு... ஆமாம் கொத்தவரையே தான். செய்து பார்த்து சொல்லுங்க. மிக்க நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா