இஞ்சி குழம்பு - 3

தேதி: November 14, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.8 (4 votes)

 

1. இஞ்சி - 50 கிராம்
2. பூண்டு - 1 முழுசு
3. சின்ன வெங்காயம் - 10
4. சாம்பார் தூள் - 2 1/2 தேக்கரண்டி
5. உப்பு - தேவைக்கு
6. வெந்தயம் - 1/4 தேக்கரண்டி
7. எண்ணெய் - 2 மேஜைக்கரண்டி
8. தேங்காய் துருவல் - 4 தேக்கரண்டி
9. புளி - நெல்லிக்காய் அளவு


 

கடாயில் 1 தேக்கரண்டி எண்ணெய் விட்டு காய்ந்ததும் பொடியாக நறுக்கிய இஞ்சி சேர்த்து வாசம் வர வதக்கவும்.
இஞ்சியுடன், தேங்காய் சேர்த்து நைசாக அரைக்கவும்.
அதே கடாயில் மீதம் உள்ள எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெந்தயம் தாளிக்கவும்.
இதில் நறுக்கிய வெங்காயம், பூண்டு சேர்த்து நன்றாக வதக்கவும்.
இதில் சாம்பார் பொடி சேர்த்து பிரட்டி, அரைத்த விழுது, உப்பு சேர்த்து, தேவையான அளவு நீர் விட்டு நன்றாக கொதிக்க விடவும்.
கொதித்து தூள் வாசம் போனதும் புளி கரைசல் சேர்த்து நன்றாக கொதிக்க விட்டு எடுக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

இஞ்சிக்குழம்பு இன்னிக்குத்தான் செய்தேன். ரொம்ப நல்லா வந்தது.
இஞ்சி ஜீரண சக்திக்கும் நல்லதாச்சே.

கோமு... செய்து பார்த்து பின்னூட்டம் தந்தமைக்கு மிக்க நன்றி. :) இஞ்சி ரொம்ப ரொம்ப நல்லது.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா