காய்கறி ரசம்

தேதி: November 16, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (2 votes)

 

கேரட்- ஒன்று
பீன்ஸ் - இரண்டு
துவரம் பருப்பு - அரை கப்
ரசப்பொடி - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
சின்ன வெங்காயம் - 4
தக்காளி - ஒன்று
புளி - நெல்லிக்காய் அளவு
கடுகு, எண்ணெய் - தாளிக்க
தேங்காய் - 2 தேக்கரண்டி


 

துவரம் பருப்பை அரை மணி முதல் ஒரு மணி வரை ஊற வைத்துக் கொள்ளவும். தேங்காயை துருவிக் கொள்ளவும்.
புளியை ஒரு பாத்திரத்தில் ஊற வைத்துக் கொள்ளவும்.
பருப்புடன், அனைத்து காய்களையும் போட்டு நன்கு குக்கரில் வேக வைத்து, ஆற வைத்து மிக்ஸியில் 2 சுற்று விட்டு, கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு போட்டு தாளிக்கவும். அதில் அரைத்த விழுதை போட்டு ஒரு கொதி விடவும்.
நன்கு கொதிக்கும் போது புளியை கரைத்து ஊற்றி பெருங்காயம், ரசப்பொடி, உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
பிறகு இறக்குவதற்கு முன், துருவிய தேங்காயை சேர்க்கவும்.
சுவையான காய்கறி ரசம் ரெடி. கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

பவி, புது புது ரெசிப்பி தந்து எங்களை எல்லாம் ஒரு வழி பண்ணனும்னு முடிவு பண்ணிட்டயா? வாழ்த்துக்கள். காய்கறி ரசம் அருமையான முயற்சி. சத்தான முயற்சி. மாம்சுக்கு தினம் தினம் ஒரு சமையல் செய்து அசத்திடுவேன்ல :)) பவி, காய்கறிய வேகவச்சு அரைச்சு வடிகட்டாம அப்படியே போட்டா குழம்பு மாதிரி திக்காய்டாதா?

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் மற்றும் குழுவிற்கு நன்றி.

கல்ப்ஸ், இம்முறையும் நீங்கள் தான் முதல் பதிவு மகிழ்ச்சி, மாம்ஸ் ரெண்டு சுத்து குண்டாயிடனும் இதை சாப்பிட்டு, சரியா? அப்புறம் காய்கள் மிகக் குறைவா தானே சேர்க்கிறோம் அதனால குழம்பு மாதிரி இருக்காது கல்ப்ஸ், பருப்பு ரசம் மாதிரி தான் இருக்கும், தொடர்ந்து வந்து ஊக்கப்படுத்துங்க

அன்புடன்
பவித்ரா

ரசம் சூப்பரா புதுமையா இருக்கு...வாழ்த்துக்கள்.
முதல்முறையாய் உங்கள் வாதத்தை பட்டியில் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது...சூப்பரா பேசுறீங்க..உங்களின் முந்தைய பட்டி பதிவுகள் எதுவும் படிக்கவில்லை.......தொடர்ந்து கலக்குங்க அறுசுவையில்

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

பவி வாவ் ஹெல்தி ரெசிப்பி! நாளைக்கு செய்து சாப்பிட்டுட்டு வந்து நல்லா இருக்குன்னு சொல்றேன் :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

பவித்ரா நல்ல புதுமையான ரெஸிபியை கொடுத்து இருக்கீங்க.
நிச்சயம் நன்றாகவே இருக்கும்.
வாழ்த்துக்களும்,பாராட்டுக்களும்.

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

ஐயோ எனக்கு சமைக்கவே தெரியாது....நான் கல்யாணத்துக்கு முன்னாடி அடுபங்கரை பக்கம் கூட போனதில்லை.....அப்படி சொல்லும் (கல்யாணம் ஆகாத) பெண்களுக்கு மத்தியில் நீங்கள் இப்படி சமைத்து அசத்துவது எனக்கு ரொம்பவே பிடிச்சிருக்கு. நல்லதொரு சத்துள்ள குறிப்பு. நான் காய்கறி வேக வைத்த தண்ணீர் வைத்து ரசம் வைப்பேன்.....நீங்கள் சொல்வது போல் ஒரு முறை அரைத்து வைத்து பார்கிறேன்... வாழ்த்துக்கள்

நன்றி.
லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

பவி,
சத்துள்ள ரசம் ரெசிப்பி.கண்டிப்பா செய்து பார்க்கிறேன்.எப்படி இப்படிலாம் யோசிக்கிறீங்க?நல்ல குறிப்பு.வாழ்த்துக்கள்.

காய்கறி ரசம் நான் இதுவரை கேள்விப்பட்டத்தில்லை. சாம்பார் வைக்கும்போது இந்த ரசத்தையும் சேர்த்து செய்ய வேண்டியதுதான். இதுவும் அம்மா குறிப்பா. நீங்க இப்படி ரெசிப்பி கொடுத்துக்கிட்டு இருந்தீங்க வருங்காலத்துல நல்ல சமையல் எக்ஸ்பர்ட் ஆயிடுவீங்க. தொடர்ந்து 25 ரெசிப்பி கொடுத்துவிடுங்கள் சமைத்து அசத்தலாமில் உங்கள் ரெசிப்பியையும் சமைக்கும் வாய்ப்பு கிடைக்கும் அல்லவா?

இளவரசி, உங்க குறிப்புகள் எனக்கு பிடிக்கும், நீங்க என் குறிப்புக்கு வாழ்த்து சொல்லிருக்கறத பார்க்கும் போது மகிழ்ச்சியா இருக்கு. மிக்க நன்றி. பட்டியை பற்றிய உங்கள் பாராட்டிற்கு நன்றி.

ஹாய் கவி, நன்றி கவி, செய்தீங்களா? அண்ணா ஒண்ணும் அடிக்க வரலையே;((!! உங்களுக்காக வெயிட்டிங், எப்படி இருந்ததுன்னு சொல்லுங்க:))

அப்சரா, மிக்க நன்றி அப்பு. //நிச்சயம் நன்றாகவே இருக்கும்// மகிழ்ச்சி, மகிழ்ச்சி.

லாவண்யா, வாங்க வாங்க.

//அடுபங்கரை பக்கம் கூட போனதில்லை.....அப்படி சொல்லும் (கல்யாணம் ஆகாத) பெண்களுக்கு மத்தியில் // வேற வழியில்லையே, அதான் என் கொடுமையை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்:))

//நான் காய்கறி வேக வைத்த தண்ணீர் வைத்து ரசம் வைப்பேன்// நான் இப்படி ட்ரை பண்ணியதில்லை, ட்ரை பண்ணி பார்க்கிறேன். வாழ்த்துக்கு நன்றி லாவண்யா:))

அன்பு, மிக்க நன்றி, அன்பு. ஒண்ணும் பெரிய யோசனையெல்லாம் இல்லை. வேலைக்கு சேர்ந்த பிறகு நிறைய type of friends கூட இருக்க வாய்ப்பு கிடைத்து, அப்படி கற்றுக் கொண்டது எல்லாம்:))

வினோ, ஒவ்வொரு முறையும் நான் எதிர்ப்பார்க்கும் தோழிகளில் நீங்களும் ஒருவர், ரொம்ப சந்தோஷம். இது அம்மா ரெசிப்பி இல்லை வினோ, தோழியின் ரெசிப்பி. என்னை விட என் தோழி இதை நல்லா செய்வா ;(( 25 குறிப்பா?? சப்பா, இப்பவே கண்ண கட்டுதே, பார்ப்போம் வினோ, ட்ரை பண்றேன்.

//நல்ல சமையல் எக்ஸ்பர்ட் ஆயிடுவீங்க.// ஆஹா, மிக்க நன்றி வினோ:))

அன்புடன்
பவித்ரா

பவி காய்கறி ரசம் செய்துட்டேன். நேற்று மதியம் பூண்டு குழம்பும் , காய்கறி ரசமும் உருளைகிழங்கு பொரியலும்தான் மெனு. சூப்பரா இருந்துச்சு. மீதி இருந்த ரசத்தை கோதுமைரவை இட்லியோடு நான் சாப்பிட்டேன். அவர் தோசையோடு சாப்பிட்டார் :). ரெண்டுக்குமே நல்லா இருந்துச்சு. உங்க தோழிக்கும் நன்றி சொல்லிடுங்க. உங்களுக்கும் நன்றி.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

பவி நல்ல புதுமையான ரெசிபிடா நிச்சயம் நன்றாக இருக்கும் நிறைய குறிப்புகள் தரவாழ்த்துக்கள்(வரப்போற மாப்பிள்ளை குடுத்துவைத்தவர்)அதுக்குத்தான் ட்ரைய்யலா ஜமாய் செய்துட்டு சொல்றேண்டா

பவி பார்க்கவே செய்யனும்னு தோணுது நான் முதலில் சூப் என்று நினைத்தேன். எனக்கு ரசம்னா ரொம்ப பிடிக்கும். அதுவும் எங்க அம்மா வைக்கிற ரசத்த அடிச்சுக்க ஆளே இல்லப்பா. இப்ப நானும் இந்த ரசத்த முயற்சி செய்துட்டு எங்க அம்மாவுக்கு போட்டியா ரசம் வைக்க போறேன். வாழ்த்துக்கள் பவி உங்களோடது எல்லாமே ரொம்ப சிம்பிள் ஆனா நல்ல நல்ல குறிப்புகள் எல்லாருமே செய்து பார்த்துடலாம்ங்கிற மாதிரி தான் கொடுக்கிறீங்க. தொடரட்டும்

/ஒவ்வொரு முறையும் நான் எதிர்ப்பார்க்கும் தோழிகளில் நீங்களும் ஒருவர்/ பவி அப்படி எதிர்ப்பார்த்து பதிலளிக்காமல் இருந்தால் மன்னிப்பு கேட்டுகிறேன். உங்க தோழியிடமிருந்து நிறைய ரெசிப்பி கத்துக்கோங்க. நீங்க அவங்க குறிப்ப செஞ்சு காட்டும்போதே அவங்க ரொம்ப சமைப்பாங்கனு தெரியது. முடிஞ்சா அவங்களையும் அறுசுவைக்கு வரச்சொல்லுங்க. நீங்க இப்பயே 11 ரெசிப்பி கொடுத்து இருக்கீங்க. முடியும்போது ட்ரை பண்ணுங்க இன்னும் 14 ரெசிப்பி தானே .

மிக்க மகிழ்ச்சி கவி. ரவா தோசையா இருந்திருந்தா இன்னும் அருமையா இருந்திருக்கும் இல்லையா கவி:-) நன்றி கவி

அன்புடன்
பவித்ரா

அம்மா ரொம்ப நன்றி, மருமகனுக்கு நல்லா சமைத்து போட்டு அம்மா பேரை காப்பாத்த வேண்டாமா!

அன்புடன்
பவித்ரா

யாழு, எங்க ஆபீஸ்ல கூட ஒரு முறை என்ன சமையல்ன்னு கேட்டு ரெசிப்பி சொன்னதும் சூப்பை சாப்பிட்டில் போட்டு சாப்பிட்டியான்னு கேட்பாங்க. நன்றி யாழு. எனக்கும் அம்மா ரசம்ன்னா உயிர், அதே ரசப்பொடியில் தான் நானும் செய்வேன், ஆனா வரவே வராது:-( வாழ்த்துக்கு நன்றி

அன்புடன்
பவித்ரா

மன்னிப்பெல்லாம் வேண்டாம், என் தோழியும் அப்பப்ப இங்கு வருவா ஆனா பதிவிடுவதில்லை, அவளுக்கு இடமாற்றம் கிடைத்து விட்டது வினோ, அதனால இனி கத்துக்க முடியாது.

அடுத்த சமைத்து அசத்தலாம்க்கு கணக்கு பிள்ளை ரெடி போலவே, ரொம்ப நன்றி, எனக்கே தெரியாது நான் எத்தனை குறிப்பு கொடுத்தேன்னு, இன்னிக்கு தான் பார்க்கனும்னு நினைத்தேன், என் வேலையை குறைத்திட்டீங்க, நன்றி வினோ

அன்புடன்
பவித்ரா

பவி,
நாளைக்கு எங்க வீட்டில் காய்கறிரசம்தான்.சூப்பரா இருந்ததுனு வந்து சொல்றேன்.காய்கறி சத்தெல்லாம் சுலபமா கிடைச்சிடும்.நல்ல ரெசிப்பி.ரொம்ப நன்றி.நீங்க எல்லா இடத்துலயும் கலக்கறீங்க.தொடர்ந்து கலக்க வாழ்த்துக்கள்.

அன்புடன்
நித்திலா

நித்தி, என்ன ரசம் செய்தீங்களா? யாரும் அடிக்க வரலையே:-( ஆள காணோமேன்னு கேட்டேன், உங்க வாழ்த்துக்கு நன்றி நித்தி, என்ன நித்தி நீங்க நான் ஒண்ணும் பெருசா கலக்கலை, ஏதோ எனக்கு தெரிந்ததை இங்க சொல்றேன், அவ்வளவுதான்:-)

அன்புடன்
பவித்ரா

ஹாய் பவி,இன்னைக்கு ரெண்டாவது தடவையா உங்க ரசம் செஞ்சேன்.அப்பத்தான் ஞாபகம் வந்தது இன்னும் பதிவு போடலைனு.ரொம்ப சூப்பரா இருந்தது,பவி.எல்லாரும் ரொம்ப ரசிச்சு சாப்பிட்டாங்க.சில ஹோட்டல்ல ரசம் டேஸ்ட்டா இருக்கும்.அந்த டேஸ்ட்ல இருக்குனு அம்மா சொன்னாங்க.ரொம்ப நன்றி,பவி.//நான் ஒண்ணும் பெருசா கலக்கலை//இதுக்கு பேருதான் தன்னடக்கம்னு சொல்றாங்களா?

அன்புடன்
நித்திலா

//இன்னைக்கு ரெண்டாவது தடவையா உங்க ரசம் செஞ்சேன்.// நித்தி, அவ்வளவு சுவையா இருந்ததா!!:)) நன்றிப்பா. ரொம்ப சந்தோஷமா இருக்கு. அம்மாவோட பாராட்டுதான் மனதை ரொம்பவே குளிர வைத்து விட்டது:)) அம்மாக்கு என் நன்றியை சொல்லிடுங்க நித்தி.

தன்னடக்கமா எனக்கா??:)))

அன்புடன்
பவித்ரா

எனக்கு இந்த ரசம் ரொம்ப பிடிச்சிருந்தது. நல்ல மணம், டேஸ்ட்டும் அருமையா இருந்தது;-)

Don't Worry Be Happy.

நம்பமுடியவில்லை. எல்லா குறிப்பையும் விடாம செய்திருக்கீங்க போலவே. மிக்க நன்றி ஜெய்.

அன்புடன்
பவித்ரா