வில்லுப்பாட்டு.!!!

பாடசாலை செல்லும் பெண் பிள்ளைகள் கையடக்கதொலைபேசி ,Facebook பாவிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி..வில்லுப்பாட்டு இயற்றுவதற்கு நல்ல ,ஆக்கபூர்வமான,நகைச்சுவையான கருத்துக்களை கூறுங்கள்...

அதற்குப் பொருத்தமான பாடல்களையும் தெரிவுசெய்து தரமுடியுமா?

plz......................

வில்லுப்பாட்டுக்கு இது நல்லாய் இருக்குமா என்று பாருங்கள் ரகிமா?

(செல்போன் மனம் விட்டு பேசினால் எப்படி இருக்கும்!
செல் போன் பேசும் வார்த்தைகளாகவே எண்ணிப் படிக்கவும்.)

கீய்ங் கீய்ங்.. கீய்ங் கீய்ங்..
(மெசேஜ் ஒன்று வந்தடைகிறது.)

செல் :
நிம்மதியா தூங்க வுடுறாங்களா.. சாமத்துல யாருக்கு என்ன கொள்ளை போகுதுன்னு தெரியல.. இந்த நேரத்துல என்ன மெசேஜ் வேண்டி கிடக்கு? இப்ப இவன் எழுந்து பார்ப்பான். அப்புறம் விடிய விடிய சாட் தான். என்ன பொழப்பு இது! ஆஹா எந்திரிசிட்டான்யா.. என்னை கையில் எடுத்துட்டானே... ஆஹா பொண்டாட்டி தான் மெசேஜ் அனுப்பியிருக்கா!! இன்னும் கல்யாணமே ஆகல, அதுக்குள்ள லவ்வரு நம்பர "பொண்டாட்டி"ன்னு ஸ்டோர் பண்ணி வச்சிருக்கான். ஆமா என்ன அனுப்பியிருக்கா..?

அவள்:
"செல்லம் தூங்கிட்டியாடா?"

செல் :
அடிப்பாவி நடுராத்திரி ரெண்டு மணிக்கு தூங்காம மெகா சீரியலா பார்த்துகிட்டிருப்பாங்க!
ஆஹா பதில் அனுப்ப தொடங்கிட்டாண்டா

அவன்:
"ஆமா செல்லம் இப்ப தான் தூங்கினேன்.கனவுல நீ தான் வந்த. ரெண்டு பேரும் சுவிஸ்ல டூயட் பாடிக்கிட்டிருந்தோம்."

செல் :
டேய்,சத்தியமா சொல்லு உன் கனவில் அவளாடா வந்தா! கடலை முட்டாயிலிருந்து காம்ப்ளான் வரை கடன் சொல்லி வாங்கின கடைக்காரர் + கடன்காரர் கந்தசாமி தான வந்தாரு! ஏன்டா என்னையும் பொய் சொல்ல வக்குற.

கீய்ங் கீய்ங்.. கீய்ங் கீய்ங்..

செல் :
பதில் வந்துடுச்சுடா. அவ இவனுக்கு மேல படுத்துவாளே, என்ன சொல்லியிருக்கா!

அவள்:
"உன் கனவுல நான் என்ன கலர் டிரெஸ் போட்டிருந்தேன்?"

செல் :
ஆமாடி, ரொம்ப முக்கியம்! என்ன டிரெஸ் போட்டிருந்த, லிப்ஸ்டிக் சரியா இருந்திச்சா! எல்லாம் வரிசையா கேளு!

அவன்:
" டார்லிங், நீயும் நானும் ஒயிட் டிரெஸ் போட்டிருந்தோம். நீ தேவதை மாதிரி இருந்த.."

செல் :
டேய் நீ தேவதைய முன்னப் பின்ன பாத்திருக்கியாடா! ஒயிட் டிரெஸ்ல ரெண்டு பேரும் பேய் மாதிரி இருந்திருப்பீங்கடா!

அவள்:
"டேய் புருஷா.. எனக்கு தூக்கம் வர மாட்டீங்கு! நா என்ன பண்ண?"

செல் :
ஆங்.. நல்லா வாயில வருது. ஏதாவது சொல்லிப்புடுவேன். உடம்பு, கீ-பேடுல்லாம் வலிக்குதுடா சாமி! பேயெல்லாம் பிஸியா அலையற நேரத்துல என்னடா ரொமான்ஸ் வேண்டிக் கிடக்கு.. அடங்குங்கடா!

அவன்:
"என் பேரை மந்திரம் மாதிரி சொல்லிக்கிட்டே கண்ணை மூடி தியானம் பண்ணு. அப்படியே தூங்கிடுவ! அப்புறமா உன் கனவுல வந்து உன்னை நான் தாலாட்டுவேன். உம்ம்ம்ம்ம்மா!"

செல் :
ச்சீ.. தூ.. எச்சி எச்சி! உம்மான்னு அடிச்சா போதாதா.. அந்த எழவை எனக்கு வேற கொடுக்கணுமா, கருமம் கருமம். ஆமா என்ன சொன்ன உன் பேரை மந்திரம் மாதிரி சொல்லணுமா, உனக்கே இது ஓவராத் தெரியல. அதெல்லாம் சொன்னா தூக்கம் வராதுடா, உன்னால தான் தூக்கம் கெட்டுப் போச்சுன்னு வெறுப்புத்தான் வரும். லூசுப்பய! இதுக்கு அந்த மடச்சி என்ன அனுப்புறான்னு பார்ப்போம்.

அவள்:
" ஏய், எனக்கு உன் பேரைச் சொன்னா தூக்கம் வரல, வெட்கம் வெட்கமா வருது!"

செல் :
எனக்கு வேதனை வேதனையா வருது. எப்படா தூங்குவீங்க! தினமும் இதே தலை வேதனையாப் போச்சு! 'கண்ணை படைத்து பெண்ணை படைத்த இறைவனை விட செல்லைப் படைத்து ப்ரீ எஸ்.எம்.எஸ்ஸை படைத்த மனுசன் தான் கொடியவன்'...........போன ஜென்மத்துல ஆந்தையா இருந்துருப்பாங்க போல!

அவன்:
"செல்லம், என்னை உனக்கு எவ்வளவு பிடிக்கும்?"

அவள்:
" உலக வங்கியில இந்தியா வச்சிருக்கிற கடன் தொகையைவிட அதிகமாப் பிடிக்கும். என்னை உனக்கு எவ்வளவுடா பிடிக்கும்?"

செல் :
கடன்காரி, உதாரணம் சொல்ல வேற விஷயமே கிடைக்கலையா, நம்மாளு என்ன சொல்லுறான்னு பார்ப்போம்.

அவன்:
" முதல் டீச்சர். முதல் சம்பளம். முதல் கவிதை. முதல் காதல்... இதையெல்லாம் யாராவது எவ்வளவு பிடிக்கும்னு அளந்து சொல்ல முடியுமாடி! நீதான் என் முதல் காதல்"

செல் :
டேய் அளக்காதடா! ரெண்டு மாசத்துக்கு முன்னாடி இன்னொரு நம்பருக்கும் இதே மெசேஜைத் தான நீ அனுப்புன. நடத்து,நடத்து ! எனக்கு மட்டும் உண்மையை அனுப்புற சக்தி இருந்தா மவனே செத்தடா நீ!

(அரை மணி நேரம் கழித்து, அந்த இளைஞன் ஒன்பதாவது முறையாக குட்நைட் சொல்லிவிட்டு 'சாட்'டை முடிக்கிறான்.)

செல் :
முடிச்சிட்டாங்களா! என்னது இவன் திருப்பி எதோ நோண்டுறான். ஓ.. என்னை எழுப்பச் சொல்லி அலாரம் வக்கப் போறானா.. எத்தனை மணிக்கு? அடப்பாவி உலகத்துலயே பகல் பன்னிரெண்டு மணிக்கு அலாரம் வைச்சு எந்திரிக்கிற ஒரே ஜீவராசி நீதாண்டா! அதுவரைக்கும் 'பொண்டாட்டி' திருப்பி 'சாட்'டுக்கு வராம இருந்தா சரிதான்.

(காலை பதினொரு மணி..)

செல் :
அட என்னமோ குறுகுறுங்குதே.. ஓ எதோ ரிமைண்டர் செட் பண்ணி வச்சிருக்கான்.

" இன்று திங்கள்கிழமை பல் தேய்க்க வேண்டும்."

செல் :
அட நாத்தம் புடிச்சவனே! ரிமைண்டர் சிஸ்டத்தை கண்டுபிடிச்சவருக்கு இந்த விஷயம் தெரிஞ்சா 'ஏன்டா இப்படி ஒரு சிஸ்டத்தைக் கண்டுபிடிச்சோம்'னு தன்னைத் தானே அடிச்சுக்குவான்.விட்டா 'பல் தேய்ச்சதுக்கப்புறம் வாய் கொப்பளிக்க வேண்டும்'னு கூட ரிமைண்டர் வைப்படா நீ! டேய் எவ்வளவு நேரம் தாண்டா கத்துறது. தொண்டை வலிக்குது. எழுந்திரிச்சுத் தொலைடா. அடப்பாவி ரிமைண்டரை ஆப் பண்ணிட்டு தூங்க ஆரம்பிச்சுட்டானே! அப்ப இன்னிக்கும் பல்லைத் தேய்க்க மாட்டான் போல!
டேய் நீ பல்லைத் தேய்க்க வேண்டாம்டா! எனக்கு சாப்பாடு போடு. பேட்டரில சார்ஜ் தீர்ந்துடுச்சு! சார்ஜர்ல போடுறா! இவன் காதுல எங்க விழப்போகுது. சோம்பேறி!

(அரை மணி நேரம் கழித்து, இன்கம்மிங் கால் வருகிறது.)

'நந்தவனத்தில் ஓர் ஆண்டி..'(ரிங்க்டோன் ஒலிக்கிறது)

செல் :
அவனவன் என்னன்னமோ லேட்டஸ்ட் டோன் வைச்சு அசத்திக்கிட்டிருக்கான். கஞ்சப் பய! ரிங்டோனைப் பாரு. நந்தவனத்தில் ஆண்டியாம். டேய் போனை எடுடா, யாரோ கூப்பிடுறாங்க! அப்பாடா எழுந்திரிச்சிட்டான்........

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

யோகா உங்க வில்லுபாட்டு(இல்லை காமெடிப்பாட்டு) ரொம்ப சூப்பர்........... எப்படிப்பா ரூம் போட்டு யோசிப்பிங்களா? படிச்சதை விட சிரிச்சதான் அதிகம். ஒன்று செய்யுங்கள், உங்க வீட்டு அட்ரஸ் கொடுங்க வீட்டுக்கே வந்துவிடுகிறேன்.

வாழு இல்லை வாழவிடு

நான் அட்ரெஸ் போட்டா நிட்சயம் வருவீங்களா? நடக்கிற காரியமா சுமிச்செழியன்.நீங்கள் எங்க............. நான் எங்கே!!!!!!...........

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

யோகா, சூப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ர்ர் பா. வெரி... வெரி. சூப்பர்.. உங்க கற்பனை நகைச்சுவை வில்லுப்பாட்டை படிச்சுட்டு ரொம்ப நேரம் சிரிச்சுட்டே இருந்தேன். நீங்க வீட்லயும் இப்படிதான் பேசிட்டு இருப்பீங்களா? உங்க வீட்ல எல்லாருமே குடுத்து வச்சவங்க தான். தொடரட்டும் உங்கள் நகைச்சுவை பணி :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

யோகா எப்படி முடியுது எம்மாடிய்யோ ரூம் போட்டு யோசிப்பிங்களோ நல்லா இருந்தது தொடரட்டும் நகைச்சுவை பணி

யோகராணி.....பிரமாதம் போங்கள்.
இப்பல்லாம் பொண்ணு மாப்பிள்ளை முடிவு பண்ணி,முஹூர்த்தம் வைக்கிறதுக்குள்ள செல் நம்பர்தான் இடம் மாறுது.இரவுப் பேச்சு விடிதல் இல்லாம போயிகிட்டேயிருக்கு.
அம்மாடி..அழகா,நகைச்சுவையா சொல்லிட்டீங்க.
அன்புடன்
தேன்மொழி

சிரிப்பே சிறந்த மருந்து

நலமாயிருக்கிறீங்களா யோகராணி? நல்ல நகைச்சுவையுடன் எழுதியிருக்கிறீங்க ராணி.தொடர்ந்து உங்க திறமையை வெளிப்படுத்தவும்.உங்க கதைகளை வாசித்து பின்னூட்டம் தரமுயற்சிக்கிறேன்.மன்னிக்க.

வாங்க அம்முலு அதிக நாட்களாக உங்களை மன்றத்தில் காண முடியவில்லை.

நேரம் கிடைக்கும் போது எனது கதைகளைப் படியுங்கள். மறக்காமல் விமர்சனம் எழுதுங்கள்.

மீண்டும் வருகைக்கு நன்றி.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

சூப்பூர் பாட்டு. உங்க விட்டில் எல்ல்ரும் குடுத்து வைச்சவுக. சிரிக்க தெரியதவுக குட இந்தா பாட்டா பாடிதல் நல்ல சிரிபாக.

நன்றி யோகா ....
எனக்காக இவ்வளவு அருமையான ,நகைச்சுவையான உரையாடல்கள ,இந்த வில்லுப்பாட்டுக்கு வழங்கி இருக்கீங்க
ரொம்ப நன்றி சகோதரி....
இத வச்சி நானும் கொஞ்சம் ட்ரை பண்றன்...

அன்புடன்

றஹீமா பைஷால்

மேலும் சில பதிவுகள்