ட்ரெண்டி டிசைன் - 1

தேதி: November 16, 2010

5
Average: 4.3 (19 votes)

 

ஹென்னா கோன்

 

கையின் நடுப்பகுதியில் ஒரு புள்ளி வைத்து ஒரு சின்ன வட்டம் வரையவும். அதிலிருந்து சற்று தள்ளி மற்றொரு வட்டம் வரைந்து உள்ளே இடைவெளி விட்டு கோடு வரைந்து கொள்ளவும்.
அந்த வட்டத்தை சுற்றி சின்ன சின்ன வட்டங்கள் வரையவும்.
சிறிய வட்டங்களை சுற்றி மொத்தம் எட்டு பூ இதழ்கள் வரைந்து, உள்ளே மூன்று கோடுகள் வரைந்து கொள்ளவும்
இதழ்களின் நடுவே துவங்கி ஆள்காட்டிவிரலில் வருவது போல் ஒரு கொடி வரைந்து அதில் இலைகளை வரையவும்.
அதே போல் மேலே வரைந்த கொடி டிசைனுக்கு எதிர்ப்புறமாக, அதே டிசைனை மணிக்கட்டு உள்ள கைப்பகுதியில் வரும்படி வரைந்து கொள்ளவும். பின்னர் கொடியின் ஓரங்களில் சின்ன சின்ன புள்ளிகள் வைத்து விடவும்.
விரல்முனைகளில் எல்லாம் சின்ன கொடியும் இலைகளும் வரைந்து முடிக்கவும். அனைவரும் போடக்கூடிய எளிதான ட்ரெண்டி டிசைன் இது.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

very simple ,but அழகா இருக்கு!!!
ஹஜ் பெருநாளுக்கு போடலாம்...!

அன்புடன்

றஹீமா பைஷால்

ஹாய் வனிதா சூப்பரா இருக்கு டிசைன்.

ரொம்ப ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ரொம்ப அழகா இருக்கு வனிக்க கலக்குரிங்க சூப்பர்,,இன்னும் எதிர் பார்கிறோம்

என்றென்றும் அன்புடன் கீதா (விமலகீதா)

நாம் கோபத்தில் பேசும் வார்த்தைக்கு ஒரு அர்த்தம்,,,
பேசாத வார்த்தைக்கு பல அர்த்தம்!!!

வனிதா, மெகந்தி டிசைன் வெரி சூப்பர், நான் இன்றே டிரை செய்கிறேன். ராதா

எனக்கு இதுப் போல சிம்பிள் டிசைன்ஸ் தான் ரொம்ப பிடிக்கும். ரொம்ப அழகா இருக்குகா. ஆனா போட்டுக்க தான் நேரம் இல்லை.

சிம்பிளா அதே சமயம் சூப்பரா இருக்குப்பா

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

எனக்கு மெஹந்திபோட ரொம்ப பிடிக்கும்,ஆன போடவராது,உங்க டிசைனெ பார்த்து நான் ட்ரெய் பண்ணபோரேன்...

வனி ரொம்ப அழகா, நீட்டா இருக்கு. வர கார்த்திகைக்கு போட்டுக்க போறேன். இந்த தீபாவளிக்கு பக்கத்து வீட்டு குட்டிப்பசங்க எல்லாம் மெகந்தி போட்டுக்க வந்தாங்க. உங்க மெகந்தி டிசைன ஞாபகம் வைச்சி போட்டுவிட்டேன். நன்றி வனி

வனி, பாராட்ட வார்த்தைகளே இல்லை வனி. எனக்கு மெஹந்தி போட வரும், ஆனா டிசைன் தான் ஒண்ணும் வராது. ஒரு முறை ட்ரை பண்ணி பார்க்கிறேன். ட்ரெண்டி டிசைன் - 1 என்று போட்டிருப்பதில் இருந்து 2, 3 என்று எதிர்ப்பார்ககலாமா வனி

அன்புடன்
பவித்ரா

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கும், குறிப்புக்கு கை காட்டிய வசு'வுக்கும் நன்றி ;)

ரஹீமா.. மிக்க நன்றி. ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள்.

தஸ்னீம்... மிக்க நன்றி.

ஸ்வர்ணா.... ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி.

விமலா... மிக்க நன்றி. நேரம் கிடைக்கும்போதெல்லாம் அனுப்பிடே இருக்கேன்.

ராதா... நன்றி... அவசியம் போட்டு சொல்லுங்க.

யாழினி... கவலை வேண்டாம், கணக்கு பார்க்கும் வேலை முடிஞ்சதும் போட்டு பாருங்க ;) மிக்க நன்றி.

மஞ்சுளா... மிக்க நன்றி.

ரீனா... நன்றி. ட்ரை பண்ணுங்க ஈசியா போடலாம்.

வினோஜா மிக்க நன்றி. குட்டிஸ் கைல போட பொறுமை ரொம்ப வேணும். கலக்குங்க. நான் போட்ட டிசைன்ஸ் எனக்கே நினைவில் இருக்காது.

பவி... இந்த டிசைன் நானா போடலம்மா, தங்கச்சி பேப்பரில் வரைந்து வெச்சிருந்தா, போட சொல்லி கொடுத்தா, அவ கைக்கு ஏற்ற மாதிரி அதை கொஞ்சம் மாற்றி போட்டேன் அவளுக்கு. ட்ரை பண்ணுங்க. மிக்க நன்றி. 2 கண்டிப்பா வரும்... 3 நேரம் இருந்தா வரும். :(

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

your mahendi simply super.by g.gomathi.

வனி ஃப்ரெண்டுன்னா இப்படித்தான் இருக்கணும். அடுத்த வாரம் இங்கே தீபாவளி செலிப்ரேஷன். மெஹந்தி கடை விரிக்கறதுக்கு டிசைன்ஸ் கலெக்ட் பண்ணிக்கிட்டு இருந்தேன். அழகா நீங்க கொடுத்துட்டீங்க. அசத்திடலாம் :). நன்றி வனி!

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

வனி பக்கத்து வீட்டு பெண் காலேஜ் படித்து கொண்டு இருக்கிறாள். அவளுக்கு இன்று பிறந்தநாள் நேற்று மெகந்தி போட்டுக்க வந்த போது இதே டிசைனைதான் போட்டு விட்டேன். என் கண்ணையே நம்ப முடியவில்லை போட்டு முடித்ததும் அழகாக இருந்ததது. ஒரு சின்ன சந்தேகம் நாம கையில மெகந்தி போடும்போது கோன கையில ஒரசி வரையற மாதிரி போடனுமா. இல்ல கோன சற்று உயர்த்தி வரைய வேண்டுமா.

வனிதா.... ரொம்ப அழகா இருக்கு.
இதுவரை போட்டதில்ல.
இதப்பார்த்தா ஆசையா இருக்கு.
பாராட்டுக்களுடன்
தேன்மொழி

சிரிப்பே சிறந்த மருந்து

வனிதா மிக அழகு
வனி ஆலின் ஆல் அழகுராணி

மிகவும் அழகாக இருக்கு வனி.

simple & vry superb.........continue

Eat healthy

கோமதி... மிக்க நன்றி.

கவிசிவா... அங்கையும் இதெல்லாம் உண்டா... நான் சிரியாவில் இருந்திருந்தா இன்நேரம் மாட்டி இருப்பேன். மிக்க நன்றி... அவசியம் போட்டு அசத்துங்க. :)

வினோஜா... கோன் கையில் ஒரசுவும் கூடாது, ரொம்ப தூக்கவும் கூடாது. அப்ப தான் வெளியே வரும் ஹென்னா சரியா நாம நினைக்கும் இடத்தில் வரைய வரும். முயற்சி செய்து பாருங்க.

தேன்மொழி.... ஈஸியா போடலாம்... முயற்சி செய்து பாருங்க. நன்றி :)

ஃபாதிமா... பாராட்டுக்கு மிக்க நன்றி. ஆல் இன் ஆல் மக்கள் அறுசுவையில் என்னை விட அதிக பேர் இருக்காங்க. இமா, செண்பகா, கவிசிவா, சீதால்ஷ்மி, ஆமினா, கல்பனா.... இப்படி அடுக்கிகிட்டே போகலாம். ;)

அம்முலு... மிக்க நன்றி. நலமா இருக்கீங்களா??? நேரம் கிடைக்கும் போது மெயில் அனுப்புங்க. :)

ரசியா... மிக்க நன்றி. போட்டு பாருங்க. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

HIiii Very Nice Disign

மிகவும் அழகாக இருக்கிறது வனிதா அவர்களே. (நான் வசு கையைச் சொன்னேன்.)
அந்த 'ஆல் இன் ஆல்' ரேஞ்ச்ல புனிதா பேர் வராதா? பாவம் புனிதா. இருங்க நானும் ஒரு குறிப்பு அனுப்பி வைக்கிறேன்.

நன்றாக இருந்தது, தொடர்ந்து அனுப்புங்கள் ருக்சானா,,,,,,,,,,,

வாழு, வாழவிடு..

நான் அறுசுவைக்கு புதிது உங்கள் குறிப்புகள் எல்லாம் சூப்பர்.என் அண்ண்ன் குழந்தைகள் மெகந்தி வைக்க சொன்னால் ஓடி விடுவேன்(ஏன்னா டிசைன் தெரியாது).ஆனால் நீங்கள்தான் simply superra சொல்லிவிட்டீர்கலே.நானும் இதை வரையப்போகிறேன்.நன்றி

சரண்யா... மிக்க நன்றி. :)

புனிதா... நீங்க கதை தான் எழுதுவீங்கன்னு நினச்சேன்... ;) கைவினை பக்கமெல்லாம் வரீங்க!!! கலக்குங்க. எங்க இமா போல் அனுப்பினால் உங்களையும் ஆல்-இன்-ஆல் லிஸ்ட்'ல சேர்த்துக்குவோம். மிக்க நன்றி.

ருக்சானா... மிக்க நன்றி. :)

இனியா... நல்ல பெயர். மிக்க நன்றி. அண்ணன் குழந்தைகள் இனி உங்ககிட்ட தான் மருதாணி போட்டுக்குவேன்னு அடம் பிடிக்கும் அளவுக்கு சூப்பரா போட்டு அசத்துங்க. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதாக்கா போட்டு பார்த்தேன் சுமாராக வந்தது முதல் தடவையல்லவா அதான் அப்படிவந்தது.இருந்தாலும் உங்களை போல் அசத்தமுடியுமா.இனியா நல்லபெயரா மறக்காதீங்க.நன்றி

இனியா நிச்சயம் மறக்க மாட்டேன். முதல் முறை தானே... போட போட வந்துடும். நான் முதலில் தோழிகளுக்கு போட்டப்போ என்ன வரைய போறேன்னு முன்னாடி சொல்லவே மாட்டேன்... இல்லன்னா போட்டு முடிச்சதும் "---- வரையறதா சொன்னியே... அது எங்க??? ஏன் வேற வரைஞ்சன்னு???" கேப்பாங்க. ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

very nice and simple design but very cute

தனலக்ஷ்மி... மிக்க நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta