ஈசி தக்காளி சாதம்

தேதி: November 17, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.3 (8 votes)

 

தக்காளி - 2
மிளகாய் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
வெண்ணெய் - ஒரு தேக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி வறுத்து பொடிக்க
உதிரியாக வடித்த சாதம் - இரு கப்
தாளிக்க:
கடுகு - கால் தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - தேவைக்கு


 

தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ளவும். நன்கு பழுத்த தக்காளியாக இருந்தால் நல்லது. புளிப்பும், கலரும் நன்றாக இருக்கும்.
வெறும் கடாயில், ஒரு தேக்கரண்டி கடுகு போட்டு பொரிய விடவும். கடுகு தீயக் கூடாது. பிறகு அதை ஒன்றும், பாதியுமாக பொடிக்கவும்.
தக்காளியை கழுவி, நறுக்கி, சிறிது உப்பு சேர்த்து மிக்சியில் நன்கு அரைத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை போட்டுத் தாளித்துக் கொள்ளவும். இதனுடன் அரைத்து வைத்துள்ள தக்காளி விழுது மற்றும் மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்.
தக்காளி நன்கு வதங்கியதும், உப்பு சரிப்பார்க்கவும். இதனுடன் ஒரு தேக்கரண்டி வெண்ணெய் சேர்க்கவும்.
கடைசியில் வறுத்து, பொடித்த கடுகு தூவி அடுப்பை அணைத்து விடவும்.
இதனுடன் உதிரியாக வடித்து ஆற வைத்த சாதம் சேர்த்து கலந்தால், கிட்ஸ் தக்காளி சாதம் தயார். குழந்தைகளுக்கு லன்ச் பாக்ஸில் வைக்க ஏற்றது. நிமிடங்களில் தயார் செய்து விடலாம்.

பெரியவர்களுக்கு செய்யும் போது, வெண்ணெய் சேர்க்க வேண்டாம். தேவைக்கு ஏற்ப மிளகாய்த் தூள் சேர்த்துக் கொள்ளலாம். விரும்பினால் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை தூவி பரிமாறலாம். இதனுடன் உருளைகிழங்கு வறுவல், வாழைக்காய் பொரியல், உருளைக்கிழங்கு சிப்ஸ் நன்கு பொருந்தும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ஹர்ஷா, உங்கள் தக்காளி சாதம் வெரி ஈசியாக உள்ளது. நான் நாளையே செய்து பார்க்கிறேன். ஆனால் இந்த தக்காளியை விட நாட்டு தக்காளியில் தான் புளிப்பு அதிகம் இருக்கும்பா இங்குஅது தான் கிடைக்கும். ராதா- சாமினாதன்

ஆஹா சூப்பர் அன்பு. எங்கம்மாவும் இப்படிதான் செய்வாங்க,வெண்ணெய், மிளகு இருக்காது. அதையே கொஞ்சம் தண்ணீர் போக சுண்ட வதக்கி செய்வாங்க, தோசைக்கெல்லாம் கூட சூப்பரா இருக்கும். வாழ்த்துக்கள்:))

அன்புடன்
பவித்ரா

அன்பு,

ரொம்ப ஈசியா இருக்கு. நாளைக்கு செய்து பாத்துருவேன்.

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

தக்காளி சாதம் என் பேவரைட் !

மிக்க நன்றி ஹர்ஷா எளிமையான குறிப்புக்கு

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஹர்ஷா, காய்கறிகளில் எனக்கு மிகவும் பிடித்தது தக்காளி தான். நான் செய்யும் முறையில் பெருங்காயம், மிளகாய்த்தூள் மட்டும் சேர்ப்பேன். நீங்கள் தந்த முறை முற்றிலும் வித்தியாசமாகவும், எளிமையாகவும் உள்ளது. இனி வாரா வாரம் தக்காளி சாதம் தான். வாழ்த்துக்கள். தொடர்ந்து குறிப்புகளை அள்ளி விடுங்க :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் அண்ணா மற்றும் அறுசுவை குழுவினருக்கு எனது நன்றிகள்.

ராதா,
இந்த குறிப்புக்கு நாட்டுத்தக்காளி தான் ஏற்றது.எனக்கு அது கிடைக்காது.உங்களுக்கு நாட்டுத்தக்காளி கிடைத்தால் தாராளமாக அதில் செய்யலாம்.பதிவுக்கு நன்றி.

பவி,
இதில் நான் சேர்த்தது மிளகு இல்லை.கடுகு வறுத்து பொடித்தது.சாதத்துடன் கலப்பதால் அதிகம் சுண்ட வைக்கவில்லை.உங்க பதிவுக்கு நன்றி.

மஞ்சு,
ஈசியான ரெசிப்பிதான்.செய்து பாருங்க.உங்க பதிவுக்கு நன்றி.

ஆமி,
எனக்கும் தக்காளிசாதம் ரொம்ப பிடிக்கும்.செய்து பாருங்க.உங்க பதிவுக்கு நன்றி.

கல்ப்ஸ்,
கடுகு வறுத்து பொடி செய்து போட்டால்,இன்னும் வாசனையாக இருக்கும்.செய்து பாருங்க.உங்க அன்பான பதிவுக்கு நன்றி.

ஹர்ஷா,
எப்படி இருக்கீங்க?எங்க வீட்லயும் இப்படித்தான் செய்வோம்.கொஞ்சம் காரமா,உருளைகிழங்கு வறுவலோட சாப்பிட நல்லா இருக்கும்.நல்ல ரெசிப்பிக்கு நிறைய பாராட்டுக்கள்.நன்றி.

அன்புடன்
நித்திலா

தக்காளிசாதம் எனக்கு மிகவும் பிடிக்கும்
மிக்க நன்றி ஹர்ஷா பாசுமதி அரிசியில் செய்யலாமா

நித்திலா,
நான் நலம்.நீங்க எப்படி இருக்கீங்க?இது எங்க மாமியார் பண்ணுவாங்க.ஆனால்,எனக்கு இஞ்சி-பூண்டு சேர்த்து செய்யும் தக்காளி சாதம் தான் ரொம்ப பிடிக்கும்.இது என் பையனுக்கு சில சமயம் செய்து கொடுப்பேன். உங்க பதிவுக்கு நன்றி.

ஃபாத்திமா அம்மா,
நலமா?நான் இதை பாஸ்மதி அரிசியில் செய்தது இல்லை.பொன்னி அரிசியில் செய்தாலே நன்றாக இருக்கும்.உங்க பதிவுக்கு நன்றி.

I tried this receipe. Very easy and tasty

தக்காளி சாதம் நன்றாக இருந்தது..நான் வேறு முறையில் செய்வேன்...நன்றி ஹர்ஸா..

வாழு, வாழவிடு..

ஹர்ஷா,உங்களுடைய ஈசி தக்காளி சாதம் இன்று செய்தேன். மிகவும் நல்லா இருந்தது. வாழ்த்துக்கள்.

Expectation lead to Disappointment

பிரபா,
ஈசி தக்காளி சாதம் செய்துட்டீங்களா?உங்க பின்னூட்டம் கண்டு மகிழ்ச்சி.ரொம்ப நன்றி.

ருக்சானா,
ஈசி தக்காளி சாதம் உங்களுக்கு பிடித்ததில் மிக்க மகிழ்ச்சி.நன்றி.

மீனாள்,
இந்த ரெசிப்பி உங்களுக்கு பிடித்ததில் மிக்க மகிழ்ச்சி.உங்க பதிவுக்கு நன்றி.

ஹர்ஷா,

தக்காளி சாதம் என்னோட ஆல்டைம் ஃபேவரைட்! :)
அதுல இன்னொரு மெத்தெட், அதிலும் இத்தனை சுலபமா?!, சூப்பர்ர்ர்!

இன்று லன்ச்க்கு செய்தேன், ரொம்ப அருமையா இருந்தது. வீட்டில் எல்லோருக்கும் பிடித்து இருந்தது. இனி அடிக்கடி இந்த மெத்தட்லயும் செய்திடுவேன். நன்றி!

அன்புடன்
சுஸ்ரீ