குடைமிளகாய் சாதம்

தேதி: November 17, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.1 (8 votes)

திருமதி. லாவண்யா அவர்களின் குறிப்பினை பார்த்து சிறு சிறு மாற்றங்களுடன் இந்த குடைமிளகாய் சாதத்தினை வனிதா வில்வாரணிமுருகன் அவர்கள் நமது அறுசுவை நேயர்களுக்காக செய்து காட்டியுள்ளார்.

 

குடைமிளகாய் - 3 சிறியது (சிகப்பு, மஞ்சள், பச்சை)
கடுகு - அரை தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 4
தனியா - ஒரு தேக்கரண்டி
வேர்க்கடலை - 3 தேக்கரண்டி
கரம் மசாலா - அரை தேக்கரண்டி
மிளகு - ஒரு தேக்கரண்டி
சாதம் - 2 கப்
எண்ணெய் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
தேங்காய் துருவல் - 2 தேக்கரண்டி [விரும்பினால்]


 

எண்ணெய் இல்லாமல் கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய், தனியா, வேர்க்கடலை மற்றும் மிளகை வறுத்து எடுக்கவும். குடைமிளகாயை நறுக்கி வைக்கவும்.
வறுத்த பொருட்களை கொரகொரப்பாக பொடித்து கரம் மசாலா சேர்த்து கலந்து வைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கின குடைமிளகாய் சேர்த்து வதக்கவும். 3 நிமிடம் வதக்கி உப்பு மற்றும் மசாலா பொடியை சேர்த்து வதக்கவும்.
குடைமிளகாய் முக்கால் பாகம் வெந்ததும் இறக்கி சாதத்துடன் கலந்து 10 நிமிடம் மூடி வைக்கவும்.
விரும்பினால் கடைசியாக தேங்காய் துருவல் சேர்த்து எடுக்கலாம். வடை, ரைத்தா போன்றவையுடன் சூடாக பரிமாறலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

பார்க்கவே சாப்பிடனும் போல இருக்கு, வாழ்த்துக்கள்:)) லாவண்யாவுக்கும் நன்றி

அன்புடன்
பவித்ரா

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கும், குறிப்பை தந்த லாவண்யாவுக்கும் நன்றி :)

பவி... மிக்க நன்றி. ருசியும் சூப்பரா இருக்கும்... செய்து பாருங்க. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இதுவரை பச்சை கலர் குடைமிளகாயில் தான் செய்துருக்கேன். கலர் கலரா செய்யணும்!

குறிப்புக்கு நன்றி அக்கா

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

வனி, எங்க வீட்டுக்கு காய்கறிகாரர் எப்ப காய்கறி கொண்டு வந்தாலும் நான் முதல்ல எடுக்கறதே இந்த குடைமிளகாயை தான். அப்ப ஆத்துக்காரர் முகம் போற போக்கை பார்க்கனுமே, அவருக்கு குடை மிளகாய் என்றாலே அலர்ஜி. குடை மிளகாய் சாதம் இருந்தா பிரியாணிய கூட ஓரம்கட்டிடுவேன். அவ்வளவு பிரியம் :) குறிப்பு, விளக்கப்படங்களுடன் மிகவும் தெளிவாக தந்துள்ளீர்கள். இதை கண்டிப்பா செய்து பார்த்துருவேனே. வாழ்த்துக்கள். லாவண்யாவுக்கும் தான். :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

வனி நீங்கள் என்னுடைய குறிப்பை எடுத்து செய்து விளக்கப்படத்துடன்....என்ன சொல்றதுனே தெரியலை....ரொம்ப சந்தோஷமா இருக்கு.....நன்றியும் வாழ்த்துக்களும்.....

நன்றி
லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

வனிதா,
லாவண்யாவின் குறிப்புகள் எப்பவும் கலர்ஃபுல்லா இருக்கும்.அதை அழகா செய்து காட்டி கலக்கிட்டீங்க.வாழ்த்துக்கள்.

கலக்கல் ராணி வனி
குடைமிளகாய் சாதம் ரெசிபி சூப்பர் செய்துட்டு சொல்றேண்டா

this recepie tempt me to eat, when i read it

ஆமினா.. மிக்க நன்றி. அவசியம் செய்து பாருங்க. நானும் நிரைய வகை கேப்சிகம் சாதம் முயற்சி செய்திருக்கேன்... இது தான் எனக்கு பிடித்தது. :)

கல்பனா... கண்டிப்பா செய்து பாருங்க, ஆனா வீட்டில் குறிப்பு தந்தவரை போடு குடுத்துடாதிங்க ;) நன்றி.

லாவண்யா... பல குறிப்புகள் குடைமிளகாயில் முயற்சி செய்து இது மனதுக்கு பிடித்ததால் இதை படம் எடுத்து அனுப்பினேன்... நல்ல குறிப்புக்கு நானே நன்றி சொல்ல வேண்டும். மிக்க நன்றி :)

ஹர்ஷா... உண்மை தான் கலரா மட்டுமில்லாம ரொம்ப ருசியாவும் இருந்தது. :)

ஃபாதிமா... மிக்க நன்றி. அவசியம் செய்து பாருங்க, கண்டிப்பா பிடிக்கும். :)

உமா சித்ரா... மிக்க நன்றி. செய்து பாருங்க. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா,
உங்க குடைமிளகாய் சாதம் இன்று செய்துட்டேன்.உங்க ரெசிப்பி பார்த்ததில் இருந்து,செய்ய வேண்டும் என்று நினைத்து,இன்று தான் செய்ய முடிந்தது.பச்சை மற்றும் சிவப்பு குடைமிளகாய் மட்டும் தான் கிடைத்தது.சுவையும் ரொம்ப அருமை.குறிப்பை கொடுத்த லாவண்யாவுக்கும்,உங்களுக்கும் நன்றி.

ஹர்ஷா செய்துட்டீங்களா.... மிக்க நன்றி. செய்து பார்த்து பின்னூட்டம் வந்தா அது ஒரு தனி மகிழ்ச்சி தான்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

vanitha madam migavum superaga itunthathu.veru kai vaithu siyalama?

Hi Vanitha,
Tried this today and came out well :)

Thanks.

Bindu

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

வனிதா,
உங்கள் குடைமிளகாய் சாதம் குறிப்பை பார்த்து சமைத்து விட்டு, பதிவு போடலாம் என்று வந்தேன்... ஏற்கனவே இதே குறிப்பில் நான் மெசேஜ் போஸ்ட் செய்திருப்பது சற்றே அதிர்ச்சி + ஆச்சர்யம் தான்:) இருந்தாலும் டைப் செய்ததை ஏன் வீணாக்குவது :)

ரொம்ப சிம்பிளான சூப்பரான குறிப்பு... சுவையும் சூப்பர் தான்.. செய்ய தேவை படும் நேரமும் குறைவு தான்.. மிக்க நன்றி :)

மிளகாய் மட்டும் ஒன்றாக குறைத்து செய்தேன்... என்னுடைய மகள் ரொம்பவே விரும்பி சாப்பிட்டாள்.. உலக மஹா அதிசயம் தான்.. நன்றி :)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

மிக்க நன்றி. நான் இதுவரை வேறு காயில் ட்ரை பண்ணல. நம்ம லாவண்யா குறிப்பு, அவங்களை கேட்டா தெரியும். கேட்டு சொல்றேன் ராதிகா. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நல்லது நீங்க பதிவு போட்டது ;) இப்ப தான் நான் முந்தைய பதிவையே பார்க்கிறேன். ஹிஹிஹீ. தேன்க்ஸ்.

நம்ம லாவி குறிப்பு தான்... அதனால் தேன்க்ஸ் அவங்களுக்கு தான் :) எனக்கும் ரொம்ப பிடிச்ச குறிப்பு இது. பார்ட்டி நேரங்களில் கலர்ஃபுலாவும் இருக்கும், செய்யவும் சுலபமா இருக்கும். செய்து பார்த்து மீண்டும் பதிவிட்டமைக்கு நன்றி பிந்து :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பார்க்கவே நன்றாக இருக்கிறது...இன்று செய்து பார்க்கவுள்ளேன்....செய்து பார்த்து விட்டு சொல்கிறேன்....

அருமையிலும் அருமை....என் கணவர் பாத்திரத்தை காலி பண்ணீட்டார்....மிக்க நன்றி

Nice