www.arusuvai.com
பழக்கூழ் ஜாம்
தேவையானப் பொருட்கள்
- பலாச்சுளை - 6
- நறுக்கிய மாம்பழம் - ஒரு கப்
- துருவிய அன்னாசிப்பழம் - ஒரு கப்
- துருவிய கொய்யாப்பழம் - ஒரு கப்
- சிட்ரிக் அமிலம் - ஒரு தேக்கரண்டி
- பைனாப்பிள் எசன்ஸ் - அரை தேக்கரண்டி
- சீனி - அரை கப்
- சோடியம் பென்சொயேட் - 1 சிட்டிகை
செய்முறை
- பழக்கூழ் செய்யும் முறை:
- பலாச்சுளை மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
- பிறகு அனைத்து பழங்களையும் சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
- அரைத்த கலவையை ஒரு பாத்திரத்தில் ஊற்றி கொதிக்க வைத்து எடுத்துக் கொள்ளவும்.
- பழக்கூழ் ஜாம் செய்யும் முறை:
- முதலில் ஒரு பாத்திரத்தில் பழக்கூழையும் சீனியையும் சேர்த்து போட்டு கொதிக்க வைக்கவும்.
- அதனுடன் சோடியம் பென்சொயேட் சேர்த்து கொதிக்க விட்டு, கலர் தேவையானால் சேர்த்துக் கொள்ளவும்.
- ஒரு துளி உருண்டை, ஜாமை தண்ணீரில் போட்டு, கரையாமல் இருந்தால் ஜாம் பதம் வந்து விட்டது என்பதாகும்.
- நன்கு சூடாக இருக்கும் போதே எடுத்து காற்று புகாத பாட்டிலில் போட்டு சூடு ஆறிய பிறகு மூடி வைக்கவும்.