கோதுமை ரவை இட்லி&தோசை

தேதி: November 18, 2010

பரிமாறும் அளவு: 2பேர்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (4 votes)

 

கோதுமை ரவை- 1 கப்
இட்லி அரிசி- 1/4 கப்
உளுந்து- 1/4 கப்
வெந்தயம்- 1 தேக்கரண்டி
உப்பு- தேவையான அளவு


 

உளுந்தை தனியாகவும், கோதுமைரவை, அரிசி, வெந்தயம் ஆகியவற்றை ஒன்றாக கலந்தும் 3 மணிநேரம் ஊறவைக்கவும்.
முதலில் உளுந்தை அரைக்கவும்.
உளுந்து பொங்க பொங்க அரைந்ததும் ஊறவைத்த மற்ற பொருட்களை சேர்த்து அரைக்கவும்.
நன்றாக அரைந்ததும் உப்பு கலந்து நான்கு மணிநேரம் புளிக்க விடவும். (சாதாரண இட்லி மாவை விட விரைவில் பொங்கி விடும். சீக்கிரமே புளித்தும் போகும்)
பின்னர் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து விடவும்.
தேவைப்படும் போது இட்லிகளாக செய்யலாம். மிகவும் சாஃப்ட்டாக இருக்கும்.
இட்லி பிடிக்காதவர்கள் சாதாரண தோசை போலவே செய்யலாம்.
எல்லாவகை சட்னி, சாம்பாரோடு சுவையாக இருக்கும்.


ரவையை ஊறவைக்கும் போசு அது மூழ்கும் வரை தண்ணிர் ஊற்றினால் போதும். இல்லையென்றால் மீதமுள்ள தண்ணீரில் விட்டமின்கள் கரைந்து வீணாக போய்விடும்.இந்த மாவு அதிக நாட்களுக்கு இருக்காது. குளிர்சாதனப் பெட்டியில் வைத்து மூன்று நாட்களுக்குள் முடித்து விடவேண்டும். இல்லை என்றால் ரொம்ப புளித்து விடும். இட்லியாக ஊற்றும் போது இட்லி தட்டில் துணி போட்டு ஊற்றினால் சூடாகவே எடுக்க வரும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

கவி ஜலதோஷம் சொல்லி இருந்தீங்களே உடம்பு எப்படி இருக்கு. இப்பதான் பவியோட காய்கறி ரசம் பார்க்கும்போது நீங்க இந்த இட்லியை பற்றி குறிப்பிட்டு இருந்தீங்க. நான் அந்த குறிப்பு எங்க இருக்கு கேட்கறதுக்கு முன்னாடி உடனடியா புதிய குறிப்புகளிலும் கொடுத்து இருக்கீங்க. கோதுமை ரவை சேர்க்கறதுனால இட்லியோட நிறம் மாறும்தானே. இத ரெடிமிக்ஸா செஞ்சு வைச்சுக்கலாமா.

கவி வித்யாசமாக இருக்கு இட்லி நிறம் மாறுமா செய்துட்டு சொல்றேண்டா என் விருப்பட்டியலில் சேர்தாச்சு

கவி, சக்கரை நோயாளிகளுக்கு மிகவும் உகந்தது.

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

நன்றி மஞ்சு! ஆமாங்க சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது. டயட்டிங் செய்பவர்களுக்கும் நல்லது.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

கவி நாளை ஈவ்னிங் ஸ்பெஷல் என் ரெஸ்டாரென்ட்ல் இதுதான்

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

ராயல்டி 50% கொடுத்துடுங்க :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

கவி கண்டிப்பா கொடுதுட்டா போச்சு. கவி உங்க முழு பெயர் என்ன?. என் தங்கை பெயர் கவிதா. உங்களோட பேரை பார்க்கும் போதல்லாம் எனக்கு அவள் ஞாபகம் வரும். நானும் அவளும் பேசமுடியாத ஒரு சூழ்நிலையில் இருக்கிறோம்

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

என் பெயரும் கவிதா தான். என்னை உங்கள் தங்கையாக நினைச்சுக்கோங்க. விரைவில் உங்கள் தங்கையுடன் பேசும் சூழல் உருவாகும் :)

மாவு மட்டும் அதிகம் புளித்து விடாமல் பார்த்துக்கோங்க. கிளைமேட் சூடாக இருந்தா மாவு பொங்கிதும் உடனேயே ஃப்ரிட்ஜில் வச்சிடுங்க. அது ஒன்னுதான் இந்த இட்லியில் கவனிக்க வேண்டிய விஷயம்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நன்றி கவி

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

நன்றி ஃபாத்திமாம்மா! இட்லி நிறம் மாறும். மாவு கூட லேசான இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். கண்டிப்பா செய்து பாருங்க.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

வினோ ஜலதோஷம் இன்னும் சரியாகலை :(

ஆமாப்பா இட்லி வெள்ளையா இருக்காது. கோதுமைரவையின் நிறத்தில்தான் இருக்கும். ஆனால் சுவையா இருக்கும். ரெடிமிக்சா பண்ண முடியுமான்னு தெரியலைப்பா. இதை மிக்சியிலேயெ அரைச்சுக்கலாம். காலையில் அரைத்தால் இரவில் இட்லி செய்யலாம்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ஹாய் கவிசிவா எப்படியிருக்கீங்க? பேசி ரொம்ப நாளாச்சு.
எனக்கு இதுல பல சந்தேகம் இருக்கு கொஞ்சம் தீர்த்து வைங்க!
இது போல நான் பல முறை ட்ரை செய்து விட்டேன்...ஆனால் சரியா வரவில்லை ஒரு முறை கூட!!!!
அரிசி சேர்த்ததில்லை, ரவை நாலு பங்கு உளுந்து ஒரு பங்கும் தான் சேர்த்தேன், ஓவர் நைட் புளிக்கவச்சுட்டேன்னு நினைக்கிறேன்.
கோதுமையை வருக்க வேண்டாமா? நானும் பச்சையா ஊறவச்சு தான் செய்தேன். என்ன தவறுன்னே இதுவரைக்கும் தெரில, கண்டிப்பா உங்க முறையில செய்துட்டு மறக்காம பின்னூட்டம் கொடுக்கிறேன்.
தோசை கூட கொஞ்சம் கஷ்ட்டப்பட்டு தான் வந்தது. ரொம்ப ரொம்ப சாஃபட்டாக இருந்தது மாவு அது ஏன்னு தெரியுமா?
முடியும் போது பதில் சொல்லுங்க...உடனே ட்ரை பண்ணிடுறேன்.

ஹாய் உமா நான் நல்லா இருக்கேன்பா. நீங்க எப்படி இருக்கீங்க?

நானும் அரிசி சேர்க்காமல் செய்த போது நீங்கள் சொன்னமாதிரி இட்லி சரியாக வரவில்லை. பிசுபிசுப்பாக இருந்தது. ஆனால் தோசை ரொம்ப சாஃப்டா நல்லா வந்துச்சு. ஒரு கப் ரவைக்கு கால் கப் இட்லி அரிசி சேர்த்து செய்யும் போது ரொம்ப நல்லா வருது.

மாவு அதிகமா புளிச்சாலும் சரியா வராது. வார்ம் கிளைமேட்டில் நான்கு மணிநேரம் வெளியில் வைத்து விட்டு அல்லது பொங்கியதும் ஃப்ரிட்ஜில் வைத்து விட்டு அடுத்தநள் செய்யும் போது நல்லா வரும். நான் அப்படித்தான் செய்யறேன்.

நான் ரவையை வறுக்காமல்தான் செய்கிறேன்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

கவி நானும் ரவையும் உளுந்தும் மட்டும் சேத்து செய்யும்போது இதுபோல
ஆச்சு. நான் இருக்கும் இடத்தில் இட்லி ரவை கிடைப்பதில்ல. சாதா பச்சை
அரிசி சேத்துதான் செய்து பாக்கணும். தோசையாவது நான் ஸ்டிக்கில் சரியாக
வந்துடும், இட்லி சாஃப்டா இல்லைனா தொடவே மாட்டாங்க.

கோமு இட்லிஅரிசி கிடக்கலேன்னா சாப்பாட்டுக்கு பயன்படுத்தும் அரிசி சேர்த்து செய்து பாருங்க.

நான் அரிசி சேர்க்காமல் இதே போல் மாவு அரைத்து சாதாரண இரும்பு தோசைக்கல்லில் ஊற்றினால் நன்றாகவே வந்ததுப்பா. இட்லிதான் வராது.

கருத்துக்கு நன்றி கோமு!

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நல்ல குறிப்பு. ஒரு நேரத்துக்கு ஒருவருக்கு என்றால், அளவு என்ன என்று கொஞ்சம் சொல்லுங்களேன்:))

அன்புடன்
பவித்ரா

அரை கப் கோதுமை ரவைக்கு கால் கப்பிலும் பாதி அளவு உளுந்து அதே அளவு அரிசி, 1/2 தேக்கரண்டி வெந்தயம் சேர்த்து செய்யுங்க பவி. உளுந்து குறைந்தாலும் பரவாயில்லை கூடி விடாமல் இருந்தால் போதும்.

இன்னொரு ஈசியான அளவு 6 மேசைக்கரண்டி (குவிந்த அளவு) கோதுமை ரவைக்கு 1 1/2மேசைக்கரண்டி உளுந்து 1 1/2மேசைக்கரண்டி அரிசி 1/2தேக்கரண்டி வெந்தயம் சேர்த்து செய்யுங்க.

ஹி ஹி நீங்க எவ்வளவு சாப்பிடுவீங்கன்னு எனக்குத் தெரியாதே! மீ எஸ்கேப் :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நன்றி கவி. நீங்க சொன்ன கப் முறையே ஈஸியா இருக்கு:))

நான் என்ன கவி அண்டா அண்டாவா சாப்பிட போறேன் ஒரு மூணு இல்லைன்னா 4 தோசை தான்;((

அன்புடன்
பவித்ரா