45 நாள் கர்ப்பம்

திருமணம் முடிந்து 3 வருடம் கழித்து கர்ப்பம் ஆகி இருக்கிறேன்.நான் 45 நாள் கர்ப்பம்.34th day blood test positive என்று வந்தது.இன்று 45 வது நாள் ஆனால் வாந்தி,மயக்கம்,மலசிக்கல்,மார்பகம் வலித்தல்,வெள்ளை படுதல் போன்ற எந்த அரிகுறியும் இல்லை.சிறுநீர் கழிக்க வேண்டும் போல் இருக்கும் அதுவும் இப்போது இல்லை.50வது நாள் வர சொல்லி இருக்காங்க.நான் இத்தனை நாள் மல்லாந்து தான் படுத்து இருந்தேன்.இதனால் எதாவது problem வருமா? அறிகுறிகள் தெரியாமல் இருப்பது ஏதாவது problemமா?

எனக்கு இப்ப ரெண்டு குழந்தைகள்...எனக்கு முதல் குழந்தைக்கு அசைவு தெரியும்வரை சந்தேகமாவே இருக்கும்..தப்பா சொல்லிட்டாங்களோ எல்லாம் நல்லா தான் நடக்குதோன்னு இருக்கும்..சிலருக்கு அப்படி தான் ஒரு ப்ரச்சனையும் இருக்காது..கொடுத்துவச்சவங்கன்னு நெனச்சுக்குங்க

PLEASE DNT WORRY ABOUT THAT.THATS NORMAL .K.TAKE CARE .BEEEEEEEEEEEE HAAAAAAAAAAAAPPPPPPPPPPPPPPPPPPPPPYYYYYYYYYYYYYYYYYYY

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

தளிகா,அஸ்வதா ரொம்ப நன்றி பா.எனக்காக வேண்டிக்கொள்ளவும்.

dont worry about that u earn good child quickly "ALL THE BEST"

congrats
i have a kid...even i dont had any symptoms..its normal only

நன்றி ரம்யா,ஷர்மி. அசைவு எப்போது தெரியும்

Dear Friend, First Congrads ..Then கர்ப்பம் தரித்தவுடன் ஹார்மோனில் மாற்றங்கள் ஏற்படும். அந்த மாற்றங்களை ஒரு சிலரது உடல் ஒத்துக்கொள்ளும்.அவர்களுக்கு எந்த அரிகுறியும் தென்படாது. ஹார்மோனில் மாற்றங்களை உடல் ஒத்துக்கொள்ள முடியாத பட்சத்தில் தான் வாந்தி மயக்கம் எல்லாம் ஏற்படும். ஆகையால் கவலை கொள்ள வேன்டாம்.. உங்களது உடல் அந்த ஹார்மோனில் மாற்றங்களை ஏற்றுக்க் கொண்டுவிட்டது..ALL the Best.Take care

அனிதா சுஜி
” உன்னுடைய கண்ணீருக்கு அருகதை உடையவர்கள் யாரும் இல்லை. அந்த அருகதை உள்ளவர்கள் உன்னை கண்ணீர் சிந்த விட மாட்டர்கள் ”

நன்றி அனிதா நீங்க எல்லாம் சொல்வதை கேட்டால் மனதிற்கு நிம்மதியாக இருக்கிறது. இருந்தாலும் ஒரு பக்கம் பயமாக இருக்கிறது.ஏனென்றால் ஒரு வருடத்திற்கு முன் கருத்த்ரித்து அந்த குழந்தைக்கு இதய துடிப்ப் கூட வரவில்லை தானாகவே கலைந்து விட்டது அதனால் தான்.குழந்தை அசைவு எப்போது தெரியும்?

உங்க பேர் என்னப்பா. நம்பர் சொல்லி கூப்பிட முடியல பா. அதான் கேட்டேன், துடிப்பு 6 மாதத்தில் தான் பா தெரிய தொடங்கும். ஸ்கேன் பார்த்த பிறகு ஏன் பயம் கொள்கிரீஹல். தைரியமாக இருங்கள், கடவுளை வணங்குங்கள். அதை பற்றி நினைத்துக் கொண்டு இருக்காமல், உங்களது கவனத்தை திசை திருப்புங்கள். நெட் கைல இருக்கு என்பதற்காக இது பற்றி தேடி கொண்டு இருக்காமல், நல்ல புக்ஸ் படிங்க பா.

அனிதா சுஜி
” உன்னுடைய கண்ணீருக்கு அருகதை உடையவர்கள் யாரும் இல்லை. அந்த அருகதை உள்ளவர்கள் உன்னை கண்ணீர் சிந்த விட மாட்டர்கள் ”

நாலரை மாதத்தில் தெரியும்

மேலும் சில பதிவுகள்