ரிப்பன் பேப்பர் ரோஸ்

தேதி: November 20, 2010

5
Average: 4.2 (12 votes)

 

ரிப்பன் பேப்பர் - ரோஸ், மஞ்சள், பச்சைநிறம்
பெவிக்கால்
வெள்ளைநிற நூல்
பேனா
கோல்டுநிற கம்பி - 10 செ.மீ
பச்சைநிற கம் டேப்
காட்டன்
கத்தரிக்கோல்
செயற்கை இலைகள்

 

முதலில் தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.
ஒரு முழு ரிப்பன் பேப்பரில் 3 செ.மீ நீளத்துக்கு மடித்துக் கொள்ளவும். அதே அளவை மையாக வைத்து பேப்பரை வரிசையாக மடித்துக்கொண்டு வரவும். மடித்த பேப்பரின் மேல் படத்தில் உள்ள வடிவத்தை பேனாவால் வரைந்து கத்தரிக்கோலால் நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.
நறுக்கிய பின் தனித்தனி இதழ்களாக கிடைக்கும். 3 செ.மீ அளவில் நறுக்கிய இதழ்களில் மொத்தம் 24 இதழ்கள் எடுத்துக் கொள்ளவும். இது சிறிய ரோஜா பூவுக்கான அளவுகள். (பெரிய பூ வேண்டுமானால் இதழ்களின் எண்ணிக்கையை அதிகமாக வைத்து செய்யவும்)
அதிலிருந்து மூன்று இதழ்கள் எடுத்து சுருட்டி அடியில் கால் இன்ச் அளவு இடைவெளிவிட்டு வெள்ளைநிற நூலால் துடைப்பம் போல் கட்டிக்கொள்ளவும்.
நூல் கட்டிய இடத்திலிருந்து அடி வரைக்கும் கோல்டுநிற கம்பியை சுற்றிக்கொள்ளவும்.
பின்னர் ஒவ்வொரு இதழ்களாக எடுத்து கம்பி சுற்றிய இடத்தில் வைத்து நூலால் ஒரு சுற்று சுற்றி பூ கட்டுவது போல் முடிச்சு போட்டுக் கொள்ளவும். முதலில் எதிரெதிர் புறமாக மூன்று இதழ்களை வைத்து கட்டவும். அடுத்து அதன் ஒவ்வொரு இடைவெளியிலும் இதழை வைத்துப் பூத்தொடுப்பது போல் கட்டவும். 3,5,7,9 என்ற எண்ணிக்கையில் இதழ்களை வைக்கவும்.
எல்லா இதழ்களையும் சுற்றி முடித்து நூலால் நன்கு முடிச்சுப் போட்டுக் கொள்ளவும். காட்டனை சிறிதளவு எடுத்து கம்பி அளவுக்கு மெல்லியதாக திரட்டி கம்பியில் சுற்றி விடவும். பிறகு அதன் மேல் பச்சைநிற கம் டேப்பை பூவின் அடியிலிருந்து நுனி வரைக்கும் சுற்றி முடிக்கவும்.
பச்சைநிற ரிப்பன் பேப்பரை படத்தில் உள்ளது போல் "V" வடிவில் நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.
செய்து வைத்திருக்கும் ரோஸின் அடியில் இந்த பேப்பரை சுற்றி பெவிக்கால் தடவி ஒட்டி விடவும்.
பூவின் காம்பு வழியாக செயற்கை இலையை சொருகி வைக்கவும். ரிப்பன் பேப்பர் ரோஸ் ரெடி. இதுப்போல் விரும்பிய நிறங்களில் ரோஸ் செய்து ப்ளவர் வேஸில் வைத்து அலங்கரிக்கவும். இதழ்களை நூலால் கட்டுவதற்கு பதிலாக பெவிக்கால் வைத்தும் ஒட்டலாம்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

your ribbon paper rose looks like a real rose .super. by g.gomathi.

வாவ் ரொம்ப சூப்பரா இருக்கு நான் கண்டிப்பாக செய்து பார்க்கிறேன். நிஜ ரோஸ் மாதிரியே இருக்கு...நன்றி.......ருக்சானா.

வாழு, வாழவிடு..

நீங்கள் செய்து காட்டிய ரோஜாக்களும் அழகு. எனக்கு மஞ்சள் நிறத்தில் ஒரு 100 பூக்கள் தேவையாக இருக்கிறது. ஆர்டர் ஏற்றுக் கொள்வீர்களா?

பத்மா, ரேவதி... சம அழகு!!!! Cute roses. பேபர்லயே பூந்து விளையாடறீங்க. சூப்பர்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நான் செய்துட்டேமன். சூப்பரா வந்துச்சு!

நன்றி

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

அழகாக செய்து காட்டியிருக்கீங்க. பச்சை இலைகளும், மஞ்சள், ரோஸ் நிறமும், நன்றாகப் பொருந்தி வந்திருக்கு

அன்புடன்

சீதாலஷ்மி

ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta