பட்டிமன்றம் 29 "நம் நாட்டின் இன்றைய சீரழிவுகளுக்கு காரணம் யார்?

அறுசுவை என்னும் அன்புச்சங்கிலியில் இணைந்திருக்கும் எம் அருமைத் தோழிகளுக்கு அன்பான வணக்கங்கள்.

எல்லா தோழிகளும் இணைந்து நடுவராக மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்து விட்டதால் இம்முறை நான் பட்டிமன்ற நாட்டாமையாகி விட்டேன் :).

இம்முறை நான் தேர்ந்தெடுத்திருக்கும் தலைப்பு இன்றைய நம் நாட்டு சூழலில் நாம் அனைவருமே சிந்திக்க வேண்டிய விஷயம். நம் நாட்டின் முன்னேற்றத்திற்கு தடையாக பல காரணங்கள் சொல்லப் பட்டாலும் அதிகாரங்களில் இருக்கும் இரு வர்க்கத்தினர்தான் மிக முக்கியமான காரணம்.

எந்த ஒரு நாடும் முன்னேறுவதும் சீரழிவதும் இந்த இரு வர்க்கத்தினரின் கைகளில்தான். இந்த இரண்டு பேரில் யாரால் நம் நாடு அதிகம் சீரழிகிறது என்பதை நாம் கண்டிப்பாக யோசிக்க வேண்டும்.

சரி சரி யார் அந்த இரண்டு வர்க்கத்தினர்னு கேட்கறீங்களா? அரசியல்வாதிகளும் அரசு ஊழியர்களும்தான் அவர்கள்.

இவ்வார பட்டிமன்ற தலைப்பு இதுதான்

###################
"நம் நாட்டில் இன்று நிலவும் பல சீரழிவுகளுக்கு மிக முக்கிய காரணம் யார்? அரசியல்வாதிகளா? அரசு ஊழியர்களா?
###################

தலைப்பை கொடுத்து உதவிய திரு.M.B.குமார் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் :) ஹி ஹி மகள் தந்தைக்காற்றும் உதவின்னு நினைச்சுடாதீங்க. நான் நடுவராக இல்லாமல் வாதாட வேண்டும் என்று நினைத்த தலைப்பு இது. ஆனால் இன்றைய சூழலில் இதைப்பற்றிய விவாதம் வேண்டும் என்பதால் நானே தேர்ந்தெடுத்து விட்டேன் அவ்வளவுதான்:)

பட்டிமன்றத்தின் பொதுவான விதிமுறைகளோடு இப்பட்டிமன்றத்திற்கு என மேலும் சில விதிகளும் இணைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றையும் தோழிகள் கவனத்தில் கொண்டு வாதாட வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

பட்டியின் விதிமுறைகள்
*******************************
1. பட்டியில் வாதிடுபவர்களை பெயரிட்டு வாதிடக்கூடாது
2. எந்த ஜாதி - மதம் - கட்சி குறித்தும் பேசக் கூடாது
3. இந்த பொதுமன்றத்தில் நாகரீகமான பேச்சே அவசியமான ஒன்று.
4. தமிழில் தரப்படும் வாதங்கள் மட்டுமே ஏற்கப்படும்.
5. பட்டியில் வாதங்கள் மட்டுமே ஏற்கப்படும். அரட்டைகளை அல்ல.
6. நடுவரின் தீர்ப்பே இறுதியானது. அதை குறித்து வாதங்கள்
இருக்கக் கூடாது. கருத்துக்கள் இருக்கலாம்.
7. அறுசுவையின் பொது விதிமுறைகள் பட்டிக்கும் பொருந்தும்.

முக்கியமான விதிமுறை
******************************
தனிப்பட்ட அரசியல்கட்சியைக் குறிப்பிட்டோ தனி நபரைக் குறிப்பிட்டோ அல்லது தனிநபர் வாழ்க்கையை குறிப்பிட்டோ பேசக் கூடாது. பொதுவாக அரசியல்வாதிகள், அரசு ஊழியர்கள் என்றே குறிப்பிட வேண்டும்.

அனைவரும் விதிமுறைகளை கவனத்தில் கொண்டு அனல் பறக்கும் சிந்திக்க வைக்கும் வாதங்களை அள்ளி வீசுங்கள். அள்ளிக் கொள்ள மனக்கூடையுடன் ஆவலுடன் காத்திருக்கிறேன்.

அன்புடன்
இந்த வார நாட்டாமை
கவிசிவா :)

வணக்கம் நடுவரே....நல்ல தலைப்பை கொடுத்த அப்பாவுக்கு நன்றி..!

இன்றைய சீரழிவுக்கு இருவரும் போட்டி போட்டு கொண்டு துணை போனாலும்
பெரிதும் காரணமாக இருப்பது அரசியல்வாதிகள்தான் என்று ஆணித்தரமாய் சொல்கிறேன்....தலை ஆடாம வால் ஆடாது....அதனால சீரழிவுக்கு தலையாய காரணமாய் இருப்பது அரசாங்கம்தான் என்று முதல் பதிவை வைக்கிறேன்..

எங்களணி தாங்கவும்,தாக்கவும் தயாராய் உள்ளோம்

அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

நடுவர் அவர்களே,
இன்றைய கால கட்டத்திற்கு ஏற்ற தலைப்பு.

நான் "அரசியல்வாதிகள் தான்" காரணம்

என்னும் தலைப்பில் வாதிடலாம் என இருக்கிறேன்.
அரசியல்வாதிகளால் தான் அரசுஊழியர்கள்
இயங்குகிறார்கள்.
இது முதல் தடவை- பிழைகள் இருந்தால் மன்னிக்கவும்.

ஹசீன்

வாங்க பவி! தலைப்பை நல்லா துவைச்சு அலசி எந்தப்பக்கம் சரின்னு முடிவு செய்துட்டு சீக்கிரம் வாங்க :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

வாங்க சீதாம்மா!
//மனசில் இருக்கிற ஆதங்ககளையும், கருத்துக்களையும் கொட்டித் தீர்க்க, ஒரு மேடை கிடைச்சிருக்கே, எத்தனையோ நாளாக சொல்ல நினைத்ததை எல்லாம் சொல்லிடலாம். //

நீங்களுமா! கொட்டுங்க கொட்டுங்க அப்படியே நானும் என் ஆதங்கத்தை தீர்த்துக்கறேன்.

நியாயம் தர்மம் மக்கள்சேவை இதெல்லாம் என்னங்க? இப்போ சாதாரணமக்கள் பலருக்கும் கூட அது இல்லை :(

//மன்னன் எவ்வழி, மக்கள் அவ்வழி! இவங்க செய்யும் முறைகேடுகளினால் அத்தனை அரசு ஊழியர்களும் மௌன சாட்சியாக இருப்பதோடு, பல சமயங்களில் பலியாடுகளாகவும் ஆகி விடுகிறார்களே, இந்தக் கொடுமைய என்னவென்று சொல்ல//

அய்யய்யோ அப்போ நம்ம நாட்டுல ஜனநாயக ஆட்சி இல்லையா? கவி டெய்லி நியூஸ்பேப்பர் படி பை ன்னு சொன்னா கேட்கறியா :(

அரசியல்வாதிதான் எல்லாத்துக்கும் காரணம்னு சீதாம்மா ஆணியடிச்ச மாதிரி சொல்லி ஆரம்பிச்சுட்டாங்க.

எதிரணி என்ன சொலப் போறாங்களோ! வாங்க வந்து சொல்லுங்க

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

வாங்க கண்ணன்! நீங்க ரெண்டுபேருமேதான் காரணம்னு சொல்றீங்களா. தலைப்பிலும் அதை சொல்லியிருக்கிறேனே :). இந்த ரெண்டு பேரில் யாரால் சீரழிவு அதிகம் என்றுதான் கேட்கிறோம். அதாவது பெட்டியால் சீரழிவு அதிகமா அல்லது கட்டுகளால் சீரழிவு அதிகமா? வந்து ஏதாவது ஒருபக்கம் உங்கள் வாதங்களை எடுத்து வையுங்கள்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

வாங்க தீபா அர்விந்த்! தலைப்பை சூடா கொடுத்திட்டு நடுவர் இப்போ குளிரில் நடுங்கிக் கொண்டிருக்கிறேன். எந்தப்பக்கம் இருந்து எப்படித் தாக்குதல் வருமோன்னு பயமா இருக்கு :).

அரசியல்னாலே குப்பைன்னு சொல்லிட்டீங்களா! அதான் புத்திசாலி இளையதலைமுறை அரசியலுக்கு வர மறுக்கிறதோ!

இன்னும் விரிவான வாதங்களை அள்ளிக் கொட்டுங்கள்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நடுவரே
நல்லாகேட்டுக்கோங்க.அரசியல்வாதியிடம் காசு கொடுத்துதான் அரசாங்க வேலை வாங்க வேண்டியிருக்கு.மேல ஊழல் பெருகி,அருவியா கொட்டும் போது,அடியில இருக்கிறவன் என்ன செய்ய முடியும்?
ஆணவம்,அகங்காரம்,ஆடம்பரம்- இத்தனையின் மொத்த உருவம் அரசியல்.
நம்பதான் உருக்குலைந்து அவதி அடைகிறோம்.

சிரிப்பே சிறந்த மருந்து

வாங்க சுந்தரி! அப்பாவிடம் உங்கள் நன்றியை சொல்லி விடுகிறேன் :). விரைவில் எந்த பக்கம்னு முடிவு செய்து வாதங்களை எடுத்து வையுங்கள். காத்திருக்கிறோம்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

வாங்க தேன்மொழி! அப்படியே திரும்பி பாருங்க. அங்கே ஒரு டேபிள் இருக்கு பாருங்க அதில் சோடா ஜூஸ் இளநீர் எல்லாமே இருக்கு. எடுத்து குடிச்சுட்டு வந்து பொங்கி பொங்கி பேசுங்க :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

வாங்க இளவரசி! நீங்களும் அரசியல்வாதிதான் காரணம்னு சொல்றீங்களா?!
//எங்களணி தாங்கவும்,தாக்கவும் தயாராய் உள்ளோம்//

உங்க அணி இப்போ தாக்கத்தான் செய்யுது. எதிரணி இன்னும் உருவாகவே இல்லையே அப்புறம்தானே தாங்கறதைப் பற்றி யோசிக்கணும். அதுவரைக்கும் சும்மா பூந்து விளையாடுங்க. எதிரணி வந்த பின் தாக்கியும் தாங்கியும் விளையாடுங்க :). நடுவரை மட்டும் செத்து செத்து விளையாடலாமான்னு கூப்பிடாதீங்க :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

மேலும் சில பதிவுகள்