பட்டிமன்றம் 29 "நம் நாட்டின் இன்றைய சீரழிவுகளுக்கு காரணம் யார்?

அறுசுவை என்னும் அன்புச்சங்கிலியில் இணைந்திருக்கும் எம் அருமைத் தோழிகளுக்கு அன்பான வணக்கங்கள்.

எல்லா தோழிகளும் இணைந்து நடுவராக மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்து விட்டதால் இம்முறை நான் பட்டிமன்ற நாட்டாமையாகி விட்டேன் :).

இம்முறை நான் தேர்ந்தெடுத்திருக்கும் தலைப்பு இன்றைய நம் நாட்டு சூழலில் நாம் அனைவருமே சிந்திக்க வேண்டிய விஷயம். நம் நாட்டின் முன்னேற்றத்திற்கு தடையாக பல காரணங்கள் சொல்லப் பட்டாலும் அதிகாரங்களில் இருக்கும் இரு வர்க்கத்தினர்தான் மிக முக்கியமான காரணம்.

எந்த ஒரு நாடும் முன்னேறுவதும் சீரழிவதும் இந்த இரு வர்க்கத்தினரின் கைகளில்தான். இந்த இரண்டு பேரில் யாரால் நம் நாடு அதிகம் சீரழிகிறது என்பதை நாம் கண்டிப்பாக யோசிக்க வேண்டும்.

சரி சரி யார் அந்த இரண்டு வர்க்கத்தினர்னு கேட்கறீங்களா? அரசியல்வாதிகளும் அரசு ஊழியர்களும்தான் அவர்கள்.

இவ்வார பட்டிமன்ற தலைப்பு இதுதான்

###################
"நம் நாட்டில் இன்று நிலவும் பல சீரழிவுகளுக்கு மிக முக்கிய காரணம் யார்? அரசியல்வாதிகளா? அரசு ஊழியர்களா?
###################

தலைப்பை கொடுத்து உதவிய திரு.M.B.குமார் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் :) ஹி ஹி மகள் தந்தைக்காற்றும் உதவின்னு நினைச்சுடாதீங்க. நான் நடுவராக இல்லாமல் வாதாட வேண்டும் என்று நினைத்த தலைப்பு இது. ஆனால் இன்றைய சூழலில் இதைப்பற்றிய விவாதம் வேண்டும் என்பதால் நானே தேர்ந்தெடுத்து விட்டேன் அவ்வளவுதான்:)

பட்டிமன்றத்தின் பொதுவான விதிமுறைகளோடு இப்பட்டிமன்றத்திற்கு என மேலும் சில விதிகளும் இணைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றையும் தோழிகள் கவனத்தில் கொண்டு வாதாட வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

பட்டியின் விதிமுறைகள்
*******************************
1. பட்டியில் வாதிடுபவர்களை பெயரிட்டு வாதிடக்கூடாது
2. எந்த ஜாதி - மதம் - கட்சி குறித்தும் பேசக் கூடாது
3. இந்த பொதுமன்றத்தில் நாகரீகமான பேச்சே அவசியமான ஒன்று.
4. தமிழில் தரப்படும் வாதங்கள் மட்டுமே ஏற்கப்படும்.
5. பட்டியில் வாதங்கள் மட்டுமே ஏற்கப்படும். அரட்டைகளை அல்ல.
6. நடுவரின் தீர்ப்பே இறுதியானது. அதை குறித்து வாதங்கள்
இருக்கக் கூடாது. கருத்துக்கள் இருக்கலாம்.
7. அறுசுவையின் பொது விதிமுறைகள் பட்டிக்கும் பொருந்தும்.

முக்கியமான விதிமுறை
******************************
தனிப்பட்ட அரசியல்கட்சியைக் குறிப்பிட்டோ தனி நபரைக் குறிப்பிட்டோ அல்லது தனிநபர் வாழ்க்கையை குறிப்பிட்டோ பேசக் கூடாது. பொதுவாக அரசியல்வாதிகள், அரசு ஊழியர்கள் என்றே குறிப்பிட வேண்டும்.

அனைவரும் விதிமுறைகளை கவனத்தில் கொண்டு அனல் பறக்கும் சிந்திக்க வைக்கும் வாதங்களை அள்ளி வீசுங்கள். அள்ளிக் கொள்ள மனக்கூடையுடன் ஆவலுடன் காத்திருக்கிறேன்.

அன்புடன்
இந்த வார நாட்டாமை
கவிசிவா :)

எனது முந்தைய பதிவில் மது அருந்தியது அரசு அதிகாரிகள் தான். தவறாக அரசியல்வாதிகள்னு சொல்லிட்டேன்.

நடுவரே, அரசியல் என்பது ஒரு சாக்கடை, அதில் முத்தெடுக்க எதிரணியினர் முயற்சி செய்கின்றனர். இது நடக்காத காரியம் என்பதை அவங்களுக்கும் கொஞ்சம் எடுத்து சொல்லுங்க நடுவர் அவர்களே!

இன்று அரசு அலுவலகங்களில் ஏதாவது ஒரு வேலை ஒரு நாளில் முடியுதான்னு சொல்லுங்க. சுதந்திர போராட்ட தியாகிக்கே பென்ஷன் அவர் இறந்த பின் தான் கிடைக்கிறது என்றால் மற்றவர்களின் நிலையை எண்ணி பாருங்கள், அந்தோ பரிதாபம்.

சொந்த காசை போட்டு காரை வாங்கி அதுக்கு ரெஜிஸ்ட்ரேஷன் அது இது அழுவுற காசுல இன்னோரு காரே வாங்கிடலாம். ரெண்டு ஜோடி செருப்பு தேய்ந்ததுதான் மிச்சம், உடனே நீங்க பேரகான் ஆபீஸ் செப்பல் போடறதில்லையான்னு அசட்டுத்தனமா கேட்கக்கூடாது, அப்புறம் நான் அழுதுடுவேன்.

அன்புடன்
பவித்ரா

என்ன யோகா இப்படி கவுத்திட்டீங்க :(. கைவலின்னு சொல்றதுனால சும்மா விடறோம். இல்லேன்னாலும் ஒன்னும் பண்ண முடியாது. காங்கோ ஸ்டைலில் பார்சல் வேணும்னா அனுப்பியிருப்போம் :). விரைவில் குணமடைந்து பட்டிகளில் கலக்க பிரார்த்திக்கிறோம்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

வாங்க வினோஜா! சிங்கம் மாதிரி குதிச்சு வந்து எதிரணி கணக்கை ஆரம்பிச்சுட்டாங்க. விரைவில் விரிவான வாதங்களுடன் வாங்க.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நடுவர் அவர்களே நானும் பவி சொன்னதை வழிமொழிகிறேன்.

இந்த// நாடு அழிய காரணம் அரசு அதிகாரிதான்//.

இப்போது வண்டி லைசன்ஸே எடுத்துக்கொள்ளுங்கள், லஞ்சம் கொடுத்து லைசன்ஸ் வாங்கிவிடுகிறார்கள், பின்பு எவ்வள்ளவு ஆகிசண்ட் ஆகிறது.

நீங்களே பார்த்துயிருப்பீர்கள் ரோட்டோரமா எவ்வள்ளாவு அரசு அதிகாரி லஞ்சம் வாங்கி கொண்டுயிருக்கிறார்கள். அதை யாராலும் தடுக்க முடிகிறாதா?

ஒரு அரசு அலுவத்துக்குள்ளே போனால் லஞ்சம் இல்லாமல் ஒரு வேலை நடக்கிறதா?

அவ்வள்ளவு ஏன் அரசு ஆஸ்பித்திரில்(கீழ் நிலையிருந்து மேல்நிலை வரை) அரசு அதிகாரிகள் எல்லோரும் லஞ்சம் வாங்கிகொண்டே இருக்கிறார்கள்.அதை தடுக்க ஏதும் வழியிருக்கிறதா?

இங்கு பெட்டிசன் கொடு அங்கு பெடிசன் கொடு என்று அலை கழிக்கிறார்களே தவிர வேலை ஏதும் நடக்கிறதா?

வாழு இல்லை வாழவிடு

//நமக்கு மேலே உள்ளவனே வாங்குறான். அப்ப நாம்ம வாங்குனா தப்பே இல்லைன்னு அதிகாரிகள் நினைக்கிறாங்க. தலை இல்லாமல் வால் ஆடாதே! அதுனால தான் அரசுஅதிகாரிகள் தாராளமாகவே லஞ்சம் வாங்குகிறார்கள். அதனால் தான் நலப்பணி திட்டங்கள் செயல்படாமல் சீரழிகிறது//

அதானே தலை சரியா இருந்தாத்தானே வால் சரியா இருக்கும். ஹி ஹி ஆமினா நடுவருக்கு வால் இல்லை. குட்டித்தலை மட்டும்தான் இருக்கு :)

//ஒரு பாலம் கட்டணும்னு கையெழுத்தாகி அதிகாரிக்கு தள்ளப்படுது. கையெழுத்துபோட்டவன் ஒழுங்கா பணம் கொடுத்தாதானே அவன் அங்கே பாலம் கட்டுவான். பாதி பணத்த அமுக்கி மிச்ச பணத்த தூக்கி போட்டா? அதான் கட்டுன 2 வருஷத்துலையே பாலம் இடிஞ்சு போயிடுது. //

அதான் நம்ப ஊர்ல பாலமெல்லாம் இடிஞ்சு போகுதா. நான் கூட இந்த எஞ்சினியர்கள்தான் சரியில்லையோன்னு தப்பா நினைச்சுட்டேன். தெளிவு படுத்திட்டீங்க ஆமினா. ஆனா இந்த எதிரணிக்காரவுங்க இதுக்கு என்ன சொல்லி என்னை குழப்புவாங்கன்னு தெரியலியே :(

டெல்லி கட்டிட இடிபாடு... ரொம்ப சோகம் ஆமினா :(

எதிரணியினரே ஓடிவந்து இதுக்கு சரியா பதில் சொல்லி நடுவரை குழப்புங்க. நீங்க எல்லாரும் குழப்பற குழப்புல எங்க வீட்டுல குழம்பி செலவு அதிகமாகணும் :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

வாங்க ஸ்ரீமதி! நீங்களும் ஆமினா கட்சியா? விரைவில் வாதங்களுடன் வாங்க!

அய்யோ சத்தியமா நான் எந்த அரசியல் கட்சியையும் சொல்லலை. ஆமினா துவங்கி வைத்து அரசியல்வாதிகளேங்கற அணியாங்கறதைத்தான் சுருக்கமா அப்படி கேட்டுட்டேன்.நான் பட்டிமன்ற விதையை மீறலை மீறலை மீறலை அக்காங்

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ஆஹா எதிரணியில் ரெண்டாவது சிங்கம் வந்திடுச்சு.

//காந்தி ஜெயந்தியன்று காந்தியின் இல்லத்திலேயே அமர்ந்து மது அருந்திய அரசு அதிகாரிகளை என்னவென்று சொல்லுவது// ஹி ஹி நீங்க சொன்ன மாதிரி அரசு அதிகாகள்னு திருத்திட்டேன்

அதானே அங்க அரசியல்வாதியா தண்ணியடிச்சாங்க. அரசுஅதிகாரிதானே செய்தாங்க. எதிரணி என்னப்பா பதில் சொல்லப் போறீங்க?

//அதுவும் இந்த அரசு பள்ளியில் வேலை செய்யும் ஆசிரியர்கள் இருக்காங்களே அப்பப்பா சொல்லி மாளாது. குழந்தைகள் பள்ளிக்கு 9 மணிக்கே வந்திடுவாங்க, ஆனா இவங்க வருவது மதியம் தான். அதுமட்டுமின்றி தன்னிடம் தனியாக டியூசன் படிக்க வரும் மாணவனுக்கே மார்க், என்ன கொடுமை நடுவரே இது//

ஆமாமா நான் கூட ஒரு மேகசினில் படித்தேன். அரசுப்பள்ளி ஆசிரியை தன்னிடம் படிக்கும் மாணவிகளை வைத்து தன் வீட்டுவேலைகள் அவ்வளவையும் செய்கிறாராம். எதிரணியினரே என்ன கொடுமை இது? வந்து நியாயத்தை நீங்களே சொல்லுங்க.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

//சர்வதேச ஊழல் மதிப்பீட்டு அமைப்பு உலகத்திலேயே அரசியல் கட்சிகள்தான்(4.6) அதிக அளவில் ஊழல் புரிகின்றன என்று சுட்டிகாட்டியுள்ளது..//

ஹி ஹி இதுலயாவது முதல் இடத்தில் இருக்கோமேன்னு சந்தோஷப் படுவீங்களா அதை விட்டுட்டு குறை சொல்றீங்களே :). நம்ப ஊர்லதான் அரசியல்கட்சிகளின் எண்ணிக்கை அதிகம் அதான் அப்படி இருக்கு.

இடுக்கண் வருங்கால் நகுக ன்னு வள்ளுவர் சொல்லியிருக்காரே அதன் வெளிப்பாடுதான் முந்தைய பத்தி :(. நம்ப நாட்டு அரசியல் வாதிகளை என்ன செய்யலாம்? இதுக்கு பதில் சொல்லுங்க எதிரணியினரே!

//பிரிட்டனிடம் ஏராளமாக கல்வி உதவித்தொகை பெறுவது இந்தியாதானாம்...ஆனால் கோடிகளாக உதவித்தொகை வந்தும் அதை சரியாக
பயன்படுத்தாமல் தனது ஆடம்பர செலவுக்காக அரசாங்கம் பயன்படுத்திகொண்டதால்..பீகார் போன்ற மாநிலங்களில் இன்றும் மரத்தடி பள்ளிகூடங்கள்....கட்டிடங்களின்றி...பரிதாபமாய காட்சியளிக்கின்றன...//

இயற்கையோடு ஒன்றி மாணவர்களுக்கு கல்வி சொல்லிக் கொடுப்பதுமா தப்பு? இப்படி எல்லாத்தையும் தப்புன்னு சொன்னா நாங்க சாப்பாட்டுக்கு எங்க போவோம்னு சத்தியமா நான் கேட்கலை அரசியல்வாதி கேட்பானே :(. வந்து பதில் சொல்லுங்கப்பா எதிரணியினரே!

//லஞ்சம் வாங்காமல் சரியான நபரை பள்ளி வேலையில் நியமிக்கவும் சட்டங்களை கண்டிப்பாகவும் போடாதது அரசாங்கமே..//

அதானே ஒழுங்கான ஆட்களை அரசுப்பணிகளில் நியமித்திருந்தால் அவன் சரியா இருந்திருப்பான். செய்வதை எல்லாம் இந்த அரசியல்வாதி செய்துட்டு அப்பாவிங்களை குறை சொல்றது என்னப்பா நியாயம். என்னான்னு வந்து சொல்லுங்கப்பா!

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

கட்சி ஆரம்பிக்கறதுல இருந்து என்னென்ன ப்ரச்சினைகள் இருக்குன்ன் ஒரே மூச்சில் சொல்லிட்டாங்க தேன்மொழி! அந்த கூட்டம் இருக்கற வரை நிம்மதியே இல்லைன்னு பெருமூச்சு விட்டுட்டாங்க

தேன் பட்டியில் எதிரணித் தோழிகளின் பெயரை தனிப்பட்டு குறிப்பிடக் கூடாது என்பது பட்டி விதிமுறை. தலைப்பில் கூட அது வேண்டாம். பெயர் சொல்லும் உரிமை நடுவருக்கு மட்டுமே :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

என்ன பவி இறந்த ஒருவரால் ஓட்டுப் போட முடியும் போது இறந்த பின் பென்ஷன் வாங்க முடியாதா என்ன? எப்படியோ பென்ஷன் கிடைச்சுதா இல்லையா? அரசு அதிகாரி நினைச்சா உயிரோடு இருப்பவனுக்கே இறப்புச் சான்றிதழ் கொடுப்பாங்க இதுவும் ஒரு மேகசினில் படிச்சதுதான்.

//சொந்த காசை போட்டு காரை வாங்கி அதுக்கு ரெஜிஸ்ட்ரேஷன் அது இது அழுவுற காசுல இன்னோரு காரே வாங்கிடலாம்//

கார் வாங்கிட்டீங்களா பவி :). ஆமாமா இந்தியன் படத்துல பார்த்தோமே அந்த ஆப்பீசர் பன்னி(ர்)செல்வம் (செந்தில்) பண்ணுன அலப்பறைய :(

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

மேலும் சில பதிவுகள்