பட்டிமன்றம் 29 "நம் நாட்டின் இன்றைய சீரழிவுகளுக்கு காரணம் யார்?

அறுசுவை என்னும் அன்புச்சங்கிலியில் இணைந்திருக்கும் எம் அருமைத் தோழிகளுக்கு அன்பான வணக்கங்கள்.

எல்லா தோழிகளும் இணைந்து நடுவராக மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்து விட்டதால் இம்முறை நான் பட்டிமன்ற நாட்டாமையாகி விட்டேன் :).

இம்முறை நான் தேர்ந்தெடுத்திருக்கும் தலைப்பு இன்றைய நம் நாட்டு சூழலில் நாம் அனைவருமே சிந்திக்க வேண்டிய விஷயம். நம் நாட்டின் முன்னேற்றத்திற்கு தடையாக பல காரணங்கள் சொல்லப் பட்டாலும் அதிகாரங்களில் இருக்கும் இரு வர்க்கத்தினர்தான் மிக முக்கியமான காரணம்.

எந்த ஒரு நாடும் முன்னேறுவதும் சீரழிவதும் இந்த இரு வர்க்கத்தினரின் கைகளில்தான். இந்த இரண்டு பேரில் யாரால் நம் நாடு அதிகம் சீரழிகிறது என்பதை நாம் கண்டிப்பாக யோசிக்க வேண்டும்.

சரி சரி யார் அந்த இரண்டு வர்க்கத்தினர்னு கேட்கறீங்களா? அரசியல்வாதிகளும் அரசு ஊழியர்களும்தான் அவர்கள்.

இவ்வார பட்டிமன்ற தலைப்பு இதுதான்

###################
"நம் நாட்டில் இன்று நிலவும் பல சீரழிவுகளுக்கு மிக முக்கிய காரணம் யார்? அரசியல்வாதிகளா? அரசு ஊழியர்களா?
###################

தலைப்பை கொடுத்து உதவிய திரு.M.B.குமார் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் :) ஹி ஹி மகள் தந்தைக்காற்றும் உதவின்னு நினைச்சுடாதீங்க. நான் நடுவராக இல்லாமல் வாதாட வேண்டும் என்று நினைத்த தலைப்பு இது. ஆனால் இன்றைய சூழலில் இதைப்பற்றிய விவாதம் வேண்டும் என்பதால் நானே தேர்ந்தெடுத்து விட்டேன் அவ்வளவுதான்:)

பட்டிமன்றத்தின் பொதுவான விதிமுறைகளோடு இப்பட்டிமன்றத்திற்கு என மேலும் சில விதிகளும் இணைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றையும் தோழிகள் கவனத்தில் கொண்டு வாதாட வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

பட்டியின் விதிமுறைகள்
*******************************
1. பட்டியில் வாதிடுபவர்களை பெயரிட்டு வாதிடக்கூடாது
2. எந்த ஜாதி - மதம் - கட்சி குறித்தும் பேசக் கூடாது
3. இந்த பொதுமன்றத்தில் நாகரீகமான பேச்சே அவசியமான ஒன்று.
4. தமிழில் தரப்படும் வாதங்கள் மட்டுமே ஏற்கப்படும்.
5. பட்டியில் வாதங்கள் மட்டுமே ஏற்கப்படும். அரட்டைகளை அல்ல.
6. நடுவரின் தீர்ப்பே இறுதியானது. அதை குறித்து வாதங்கள்
இருக்கக் கூடாது. கருத்துக்கள் இருக்கலாம்.
7. அறுசுவையின் பொது விதிமுறைகள் பட்டிக்கும் பொருந்தும்.

முக்கியமான விதிமுறை
******************************
தனிப்பட்ட அரசியல்கட்சியைக் குறிப்பிட்டோ தனி நபரைக் குறிப்பிட்டோ அல்லது தனிநபர் வாழ்க்கையை குறிப்பிட்டோ பேசக் கூடாது. பொதுவாக அரசியல்வாதிகள், அரசு ஊழியர்கள் என்றே குறிப்பிட வேண்டும்.

அனைவரும் விதிமுறைகளை கவனத்தில் கொண்டு அனல் பறக்கும் சிந்திக்க வைக்கும் வாதங்களை அள்ளி வீசுங்கள். அள்ளிக் கொள்ள மனக்கூடையுடன் ஆவலுடன் காத்திருக்கிறேன்.

அன்புடன்
இந்த வார நாட்டாமை
கவிசிவா :)

மூணாவது சிங்கமும் வந்திடுச்சு :). வாங்க சுமி!

//இப்போது வண்டி லைசன்ஸே எடுத்துக்கொள்ளுங்கள், லஞ்சம் கொடுத்து லைசன்ஸ் வாங்கிவிடுகிறார்கள், பின்பு எவ்வள்ளவு ஆகிசண்ட் ஆகிறது.//

மறுக்க முடியாத உண்மை. 18 வயசு ஆகறதுக்கு உள்லயே நண்டு சிண்டு எல்லாம் ரோட்டில் டூவீலரில் பறக்குதுங்க :(

//நீங்களே பார்த்துயிருப்பீர்கள் ரோட்டோரமா எவ்வள்ளாவு அரசு அதிகாரி லஞ்சம் வாங்கி கொண்டுயிருக்கிறார்கள். அதை யாராலும் தடுக்க முடிகிறாதா//

ஹிஹி அது லஞ்சம் இல்லை. அன்பளிப்பு. ஏய் தடுக்க முடியுதா? முடியுதா?

எங்கிட்டு போனாலும் அஞ்சக் கொடு பத்தக் கொடுன்னு தலையை சொறிஞ்சா என்னங்க பண்ரது. வந்து பதில் சொல்லுங்க எதிரணியினரே

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

மக்களே பட்டி இன்னும் சரியா சூடு பிடிக்க மாட்டேங்குதே ஏன்? அனல் பறக்கும் வாதங்கள் வரவேண்டாமா?

என் கை விறு விறுன்னு வருது. ரெண்டு பக்கமும் பல பாய்ண்டுகள் இன்னும் யாரும் தொடவே இல்லை :(

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

கவிசிவா யாரும் இல்லைனதும் வந்து உடனே ஆதரவு கரம் நீட்டினங்க பாருங்க நீங்க இந்த பட்டிமன்றம் என்ன இன்னும் பல நூறு பட்டிமன்றங்களை சமாளிச்சுடுவீங்க அந்த wiil power உங்க கிட்ட இருக்கு. (ஏற்கனவே நடுங்கி போய் இருக்கேன் நீ வேற ஐஸ் வைக்காதனு சொல்றது கேட்குது இது ஐஸ் இல்லை உணமை). இப்ப கொஞ்சம் பரபரப்பா இருக்கேன், ச.அ முடிவு டைப் செய்துட்டு இருக்கேன். காலையிலயே நான் முடிவு பண்ணிட்டேன் எந்த பேசலாம்னு ஆனா வந்து சொல்ல தான் நேரம் இல்லை.
மூவருடன் நால்வராக இணைய போகிறேன் இப்போ புரியுதா எந்த கட்சி என்று ஆங் கரைக்ட், அரசு அதிகாரிகளே என்ற பக்கத்தில் வாதாட வந்துள்ளேன். இன்னும் சிறிது நேரத்தில் வருகிறேன்.
எந்த பக்கம்னு சொல்லிட்டு போகலாம்னு வந்தேன்.

மக்களே மக்களுக்காக மக்களால் நடத்தும் ஆட்சி மக்களாட்சி" இது ஆபிரகாம் லிங்கன் கூறியது. அவர் அழகாக சொல்லிட்டு போயிட்டார். நம் நாட்டுக்காக தேர்ந்தெடுக்கும் தலைவர் பொறுப்பு நம்ம கையில் தான் உள்ளது. நாம அதை ஒழுங்காக செய்கிறோமா இல்லையே. ஒரு அரசியல்வாதி ஐந்து வருடம் கட்சியில் இருந்து ஊழல் செஞ்சு மறைத்துவைத்துவிட்டு திரும்பவும் தேர்தலில் போட்டியிடும் போது அவரைப்பற்றி நன்கு தெரிந்து இருந்தும் திரும்பவும் அவர்கே ஒட்டு போட்டு ஜெயிக்கவைக்கறாங்களே, யார் முக்கிய காரணம் வகிக்கிறாங்க இந்த அரசு அதிகாரிகள்தான். ஊழல்வாதிகள் ஆட்சி செய்யும்போது (வறுமையில் வாடும்) அரசு அதிகாரிகளெல்லாம் ஊதிய உயர்வை உயர்த்திக்கொண்டே இருந்தால் பணத்தின் மீது ஆசை வந்துவிடுகிறது. இவர்கள் ஆட்சியில் இருந்தால் நமக்கு வறுமையில்லை. எப்பவும் நம் கையில் பணம் புழக்கம் இருந்துகொண்டே இருக்கும். தட்டிக்கேட்பதற்கு ஆட்கள் இல்லை. இவர்கள் ஆட்சியில் இருந்தால் நம் வீடு செழிக்கும் என்ற சூழ்நிலையில் ஊழல் சென்று கொண்டு இருக்கிறது.

இன்னைக்கு அரசு சார்ந்த அத்தனை துறைகளில் ஊழல் இல்லாமல் எதுவும் நடப்பதில்லை. எம்ப்ளாய்மெண்ட் ஆபிஸ் எடுத்துக்கோங்க வசதி குறைவாக எத்தனைப்பேர் நன்கு படித்து, நல்ல திறமையுடன் தாங்கள் கற்ற கல்வியை பதிவு செய்கிறார்கள். உண்மையான தகுதியுடையவர்களுக்கு அந்த அரசாங்க வேலைக்கிடைக்கிறதா, கிடைக்காது. அரசாங்க வேலை கிடைக்க வேண்டுமானால் ஒன்று அந்த லஞ்சம் வாங்கும் நபரை காக்காப்பிடித்து வைத்துக் கொள்ளவேண்டும். இல்லையெனில் நேரே அவர் வீட்டில் அவரை விசாரிப்போல் மஞ்சள் பையில் பழங்களுக்கு பதிலாக பணத்தை நிரப்பி அன்பளிப்பா கொடுத்தால் அலைச்சல், இண்ட்ர்வீயூ எதுவும் இல்லாமல் வெகு சுலபமாக வேலையை வாங்கிவிடலாம். பணம் கொடுத்து அரசுப்பள்ளியிலும், கல்லூரியிலும் ஆசிரியர்களாக சேர்ப்பவர்கள் கல்வியை ஏனோதானோ என்று கற்பிக்கிறார்கள். ஏன் தான்கற்ற கல்வியை முழுமையாக, முறையாக சொல்லிக்கொடுப்பதற்கு மனமிருக்காது எப்படியாவது இந்த வேலைக்காக போட்ட முதல்ல அசல்வட்டியோட பெறனும் என்ற நோக்கோடு செயல்படுகிறார்கள்.

//பத்து பேர் கொண்ட குழுவுக்கு மாணவ தலைவன் எதற்காக? அந்தமாணவ தலைவனின் பேசுக்கு அனைவரும் கட்டுபட்டு நடக்க தானே?// எப்படி பத்துபேர் சேர்ந்து ஒரு தலைவனை தேர்ந்தெடுத்து அவன் தவறான செயலில் ஈடுப்பட்டால், அவன் செய்வது தவறு என்று தெரிந்த அந்த பத்துபேரும் சேர்ந்து அவன் தலைவன் பதிவியை நீக்கிவிடமுடியுமல்லவா. ஏன் செய்வதில்லை நமக்கு ஏன் தேவையில்லாதப் பிரச்சனை என்று ஒதுங்கிவிடுவதுதான்.

அப்புறம் நடுவரே டெல்லில ஒரு காமன்வெல்த் போட்டி நடக்கறது முன்னாடி ஒரு மேம்பாலம் இடிச்சுவிழுந்தேச்ச அதுப்பேரு என்ன தெரியுமா?

மீண்டும் வருகிறேன்.....

நடுவர் அவர்களுக்கும், தோழிகளுக்கும் வணக்கம்!

நான் பட்டியில் முதல் முறையாக வாதாடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.அதற்கு வாய்ப்பு அளித்த கவிசிவா அவர்களுக்கு நன்றியை தெரிவித்துகொண்டு இன்றைய சீரழிவிற்க்கு காரணம் அரசு அதிகாரிகளே என்று வாதாடப் போகிறேன்.

நடுவர் அவர்களே! நமது எதிர் அணியினர் பலருக்கும் அரசியல்வாதிகள் செய்யும் ஊழல் வெளிபடையாக அனேகருக்கு தெரிகிறது ஆனால் அரசு ஊழியர்கள் செய்யும் ஊழல் அதிக பேருக்குத் தெரிவதில்லை.

இன்றைய கால கட்டத்தில் எதற்கு எடுத்தாலும் லஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளது. அரசு வேலை வேண்டும் என்றால் அரசு ஊழியர்களுக்கு லஞ்சம் கொடுத்தால்தான் வாங்க முடியும். இதை யாராலும் மறுக்க முடியுமா?

நடுவர் அவர்களே! எங்கள் கிராமப்புறங்களில் நடக்கிற உண்மையை சொல்லுகிறேன்.ஒரு சாதிச்சான்றோ,வருமானச்சான்றோ வாங்குவதற்குஎத்தனை முறை அலைய வேண்டியுள்ளது? ஆனால் ஐம்பதோ நூறோ கொடுத்தால் உடனே வாங்கி வந்துவிடலாம்.

இன்னும் சொல்லப்போனால் இலவசமாகப் பள்ளிகளில் வழங்கப்படும் சைக்கிள்களைப் பெறுவதற்குக்கூட லஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளது. நாம் அதைத் தட்டிக்கேட்டால் அதை ஏற்றிக்கொண்டு வந்ததற்குக்கூலி என்று சமாளிக்கிறார்கள்.

எனவே இன்றைய சமூகச்சீரழிவுகளுக்குக் காரணம் அரசு ஊழியர்களே!

உன்னை போல பிறரையும் நேசி.

நடுவர் அவர்களே,

இப்பொழுது கூட நாம் போன் கனக்ஸன் வாங்க ஈசியா பணம் கட்டிவிட்டு வந்துவிடுவோம், ஆனால் அதை வந்து கனக்ஸன் கொடுக்க வருபவர்களுக்கு அவர்கள் கேட்க்கும் பணம் கொடுக்கவேண்டியுள்ளது.

இல்லையென்றால் ரிப்பேர் ஆனால் உடனே வந்து சரிசெய்யமாட்டார்கள்.

அவ்வள்ளவு ஏன் என் அண்ணன் இன்டெர்நெட் கனசன் போது பணம் கொடுக்காமல் விட்டுவிட்டது அதற்காக கனசனை கட் செய்துவிட்டு அண்ணன் பணம் கொடுத்தவுடன் கனக்சன் கொடுத்தார்கள், இதை எங்கே போய் சொல்லவது?

அவ்வளவு ஏன் ஒரு பாஸ்போட்டோ வாங்க எவ்வள்ளவு லஞ்ச்ம் கொடுக்க வேண்டியுள்ளது.

இதிலிருந்து உங்களுக்கு புரியும்.யாரால் இந்த நாடு சீர் அழிகிறது என்று.

வாழு இல்லை வாழவிடு

ஒரு குழந்தை பிறந்த உடன் அதற்கு birth certificate ஆரம்பித்து அது வளர்ந்து பெரியவனாகி வாழ்ந்து இறந்ததும் death certificate வாங்கும் வரை இந்த அரசு ஊழியர்களின் பங்களிப்பு என்பது அதிகம் இருக்கிறது. அரசு என்பது யாருக்காக மக்களுக்காக தானே ஆனால் அப்படி தெரியவில்லை அரசு அலுவகங்களில் வேலை செய்யும் ஊழியர்களுக்காக தான் நடத்தப்படுகிறது. ஆமாம் பின்ன என்னங்க அரசு கொடுக்கும் சம்பளம் பத்தாதுனு மக்கள் கிட்டயும் பிடுங்கில சாப்பிடுறாங்க. அப்போ சொல்லுங்க அந்த இந்த அரசு யாருக்காக செயல்பட்டு வருது.
பொது மருத்துவமனை என்பது ஏழை எளிய மக்களுக்கும் வறுமையில் வாடுபவர்களுக்கும், பணம் கொடுத்து தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுக் கொள்ள முடியாதவர்களுக்கும் தானங்க. ஆனா அங்கே இருப்பவர்களோ பணம் பிடுங்கும் பேய்களாக இருக்கிறார்கள். பிரசவத்துக்கு இவ்வளவு, x rayக்கு இவ்வளவு, scanக்கு இவ்வளவுனு வசூல் செய்துக் கொண்டிருக்கிறார்கள். கடவுளுக்கு அடுத்தப்படியாக ஜனங்கள் மதிப்பது டாக்டர்களை அங்கு பணிபுரிபவர்களையும் தான் அப்படி ஒரு உயர்ந்த நிலையில் இருப்பவர்களே இப்படி நடந்துக் கொண்டால் மக்களின் நிலை என்ன தான் ஆவது.
எத்தனை அரசு அலுவகங்களில் சரியான நேரத்திற்கு அலுவலகத்துக்கு சென்று வேலை செய்கிறார்கள் போவதே 11 மணிக்கு அதுகுள்ள 11.30 க்கு டீ டைம் வந்துடும் உடனே கிளம்பிட வேண்டியது. டீ குடிக்க அது ஒரு அரை மணி நேரம் ஆகும். வந்து உட்கார்ந்து ஒரு பைல் பார்க்கறதுகுள்ள 1 மணி ஆகிடும். அடுத்து என்ன சாப்பாடு தான் அது முடிந்து வந்தால் தூக்கம் தான் வரும் அடுத்து எங்க வேலை செய்றது. அப்படியே ஊர் உலகத்து கதையை பேசி முடிக்க 4.30 ஆகும் கிளம்பி வீடுக்கு செல்ல வேண்டியது தான். ஆனா மற்றவர்களுக்கு என்னமோ இவங்க அப்படியே ரொம்ப சின்சியரா வேலை பாக்குற மாதிரி ஒரு சீன் போட்ற வேண்டியது. அதையும் எல்லாரும் நம்பிடுறாங்க வேற என்ன செய்ய. இதுல நடுவுல தெரிந்தவர்கள் யாராவது வந்துடுவாங்க அவங்க கிட்ட ஏதாவது கனிசமான ஒரு தொகையை வாங்கிட்டு அவர்களுக்கு மட்டும் உடனே வேலை செய்து கொடுத்துட வேண்டியது.
அரசு வேலை கிடைக்கும் வரும் வரை அதற்காக போராட வேண்டியது அது கிடைத்த அப்பறம்? அது எப்படி நமக்கு கிடைத்தது எவ்வளவு போராட்டங்களுக்கு நாம் வாங்கினோம்றதுலாம் மறந்துட்டு செயல்படுறாங்க.

ஏற்கெனவே நடுங்கிக்கிட்டு இருக்கேன். இதுல இம்பூட்டு ஐசையும் என் தலையில் கொட்டினா நான் என்னாவேன் :)

மூவரணி நால்வரணி ஆயிடுச்சா. வாங்க வாங்க சீக்கிரம் வாதத்தை எடுத்து விடுங்க!

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

வாதத்தோட வந்துட்டீங்களா வினோஜா! யம்மாடியோவ் யார் ஆட்சியில் இருக்கணும்னு முடிவு செய்யறதே இந்த அரசு அதிகாரிகளின் வாக்குகள்தானாம். அதுசரி திருடன் திருடன் கூடத்தானே சேருவான்

பணம் கொடுத்தாத்தான் அரசு வேலை கிடைக்கும் போது போட்ட பணத்தை எடுக்க அவனும் வேற என்னதாங்க பண்ணுவான். பாவம் பொழைச்சு போகட்டும் விட்டுடுங்க. வேலை கொடுக்க காசு வாங்கினவன் குற்றவாளியா இல்லை வேலை வாங்க காசு கொடுத்தவன் குற்றவாளியா? இவன் கொடுத்ததால் அவன் வாங்கினானா? அவன் கேட்டதால் இவன் கொடுத்தானா? முட்டையிலிருந்து கோழியா கோழியிலிருந்து முட்டையா? அய்யோ மண்டையை பிச்சுக்க வைக்கறாங்களே! பட்டியின் முடிவில் விடை தெரிஞ்சிடும் :)

தலைவன் சரியில்லைன்னா அவனை நீக்கும் அதிகாரம் மக்கள்கிட்ட இருக்கே... இதை நான் சொல்லலை இந்த அணியினர்தாம்பா சொல்றாங்க. எதிரணி வந்து என்ன பதிலடி கொடுக்கப் போறீங்க?

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

வாங்க தேவி! பட்டியின் கன்னி வாதமா? வாழ்த்துக்கள்!

அதானே அரசியல்வாதி செய்யற ஊழல் ஒருநால் இல்லைன்னா இன்னொரு நாள் வெளிய வந்துடுது. எதிர்க்கட்சிக்காரன் போட்டுக் கொடுத்துடுவான். ஆனா இந்த அரசு அதிகாரிகள் பண்றது வெளிய வரது ரொம்ப கஷ்டம்தான். இதுக்கு என்னப்பா சொல்லப் போறீங்க?

//சாதிச்சான்றோ,வருமானச்சான்றோ வாங்குவதற்குஎத்தனை முறை அலைய வேண்டியுள்ளது? ஆனால் ஐம்பதோ நூறோ கொடுத்தால் உடனே வாங்கி வந்துவிடலாம்.//

இப்போ ரேட்டை ஏத்திப்புட்டாங்கலாம். போர்டு மட்டும்தான் வைக்கலை :(

//இன்னும் சொல்லப்போனால் இலவசமாகப் பள்ளிகளில் வழங்கப்படும் சைக்கிள்களைப் பெறுவதற்குக்கூட லஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளது. நாம் அதைத் தட்டிக்கேட்டால் அதை ஏற்றிக்கொண்டு வந்ததற்குக்கூலி என்று சமாளிக்கிறார்கள்.//

சாமி கொடுத்தாலும் பூசாரி கொடுக்க மாட்டேங்கறாரு என்பது இதுதானோ! சரி சரி தானம் கிடைக்கற மாட்டை பல்லைப் புடிச்சு பார்க்கலாமா :)

எதிரணி பாடு திண்டாட்டம்தான்.
அரசுஅதிகாரிகளை திட்டற அணி லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா கருத்துக்களை அள்ளிக் கொட்டறாங்கப்பா

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

மேலும் சில பதிவுகள்