காளான் கறி

தேதி: November 22, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.8 (13 votes)

திருமதி. தயாபரன் வஹிதா அவர்களின் குறிப்புகளிலிருந்து திருமதி. அன்பரசி பாலாஜி அவர்கள் செய்து பார்த்த குறிப்பு இது.

 

காளான் - 200 கிராம்
பெரிய வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
பச்சை மிளகாய் - இரண்டு
பூண்டு - 4 பல்
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
தனியா தூள் - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
உப்பு - தேவைக்கேற்ப
தாளிக்க:
கடுகு - கால் தேக்கரண்டி
சோம்பு - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - தேவைக்கேற்ப


 

வெங்காயம், தக்காளியை நறுக்கிக் கொள்ளவும். காளானை நன்றாக கழுவி, நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, சோம்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும், சுத்தப்படுத்தி நறுக்கிய காளானை சேர்த்து, சிறிது உப்பு தூவி நன்கு வதக்கவும்.
அதன் பின்னர் தக்காளி சேர்க்கவும்.
அதனுடன் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
தக்காளி நன்கு குழைந்ததும், மேலும் சிறிது உப்பு, மிளகாய் தூள், தனியா தூள் சேர்த்து நன்றாக காளானுடன் சேரும் வரை மெல்லிய தீயில் வைத்து கிளறவும்.
பிறகு சிறிது தண்ணீர் சேர்த்து, கடாயை மூடி வேக விடவும். (விரும்பினால் சிறிது தேங்காய்ப்பாலும் சேர்க்கலாம்.)
காளான் வெந்ததும் உப்பு, காரம் சரிப்பார்த்து, சற்று சுண்ட வைத்து, அடுப்பை அணைத்து விடவும். விரும்பினால், நன்கு நீர் வற்றும் வரை கிளறி, பொரியலாகவும் பரிமாறலாம்.
சுவையான காளான் கறி தயார். இது சாதம், இட்லி, தோசையுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

நாக்கு ஊருது ஹர்ஷா..... உடனே அம்மா கிட்ட செய்ய சொல்லி, சாப்பிட்டு வந்து பின்னூட்டம் தரேன்

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

எனது விளக்கப்படக்குறிப்பை வெளியிட்ட அட்மின் அண்ணா மற்றும் அறுசுவை குழுவினருக்கு எனது நன்றிகள்.

குறிப்பை அளித்த திருமதி.தயாபரன் வகிதாவுக்கும் எனது நன்றிகள்.

சுகந்தி,
கண்டிப்பா அம்மாவை செய்ய சொல்லி சாப்பிடுங்க.பிடிச்சதானு வந்து சொல்லுங்க.உங்க அன்பான பதிவுக்கு நன்றி.

அன்பு,
அதுக்குள்ள அடுத்த ரெசிபியா?என்ன வேகம்!எங்க வீட்டில் காளான் அடிக்கடி செய்வோம்.நீங்க சொல்லியிருக்கபடி செஞ்சு பார்க்கிறேன்.ரொம்ப டேஸ்ட்டா இருக்கும்னு நினைக்கிறேன்.சீக்கிரமா செஞ்சுட்டு சொல்றேன்,அன்பு.நன்றி.வாழ்த்துக்கள்.

அன்புடன்
நித்திலா

நித்திலா,
தொடர்ந்து உங்கள் பதிவுகள் பார்க்க சந்தோஷமா இருக்கு.குறிப்புகளை உடனே,உடனே வெளியிடும் அட்மின் அண்ணாவுக்குதான் நான் நன்றி சொல்லணும்.வகிதாவின் குறிப்பிலிருந்து செய்த காளான்கறி ரொம்ப நல்லா இருந்தது,நீங்களும் செய்து பார்த்துட்டு சொல்லுங்க.உங்க பதிவுக்கு நன்றி.

ஹர்ஷா... எனக்கு மஷ்ரூம் ரொம்ப இஷ்டம். சீக்கிரம் அம்மாவிடம் செய்ய சொல்லிட வேண்டியது தான். ;) மிக்க நன்றி... சுவையான குறிப்பை சுலபமாக செய்ய அழகான விளக்க படம் தந்தமைக்கு. குறிப்பை தந்த வகிதா'கு நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

kaalaan piriyani romba super, edhu pol innamum niriya resipies sollunka
Renuka

யாம் பெட்ற இன்பம் பெருக இவ்வயகம்