பார்ட்டி டிசைன்

தேதி: November 23, 2010

4
Average: 3.8 (28 votes)

 

ஹென்னா கோன்

 

கைகளின் நடுவே ஹார்ட் ஷேப் வரைந்து அதன் அருகே படத்தில் இருப்பது போல் இரட்டை கோடுகள் வரைந்து கொள்ளவும். அதன் உள்ளே வளைவுகள் வரைந்து கொள்ளவும்.
வரைந்த கோட்டின் மேல் பகுதியில் படத்தில் இருக்கும் டிசைனை வரையவும்.
வரைந்த அதே டிசைனை கையின் மேல் பகுதி முழுவதும், விரல்களிலும் வருவது போல் வரையவும். விரல்களை சேர்த்து வைத்து தொடர்ச்சியாக வருவது போல் வரைய வேண்டும்.
கோட்டின் கீழ் பகுதியில் பூக்களும், அதை சுற்றி கொடிகளும், இலைகளும் வரையவும்.
இந்த டிசைன் ஒரு பாதி ட்ரெடிஷனல், ஒரு பாதி ட்ரெண்டி பேட்டர்ன் என பார்க்க வித்தியாசமாக இருக்கும். வரைவதும் மிக சுலபம்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

வனிதா டிசைன் ரொம்ப நல்லா இருக்கு. எப்படி இப்படி எல்லாம் கலக்குறீங்க.

அன்புடன்
மகேஸ்வரி

அன்பு வனிதா,

அழகு! அழகோ அழகு!! நல்ல கற்பனைத் திறன் உங்களுக்கு. மனசில் நினைப்பதை உங்கள் கைகள் நிஜமாக்குவது அற்புதம்.

அன்புடன்

சீதாலஷ்மி

வனிதா என்ன சொல்றது தெரியல உங்க எல்லா டிசைனும் சூப்பர்தான். பேசாம எல்லா மெகந்தி டிசைனும் சேர்த்து ஒரு புக்கா வெளியிட்டு இடலாம்.

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு மிக்க நன்றி. :)

மகேஸ்வரி... நன்றி. எல்லாம் உங்களை போன்ற தோழிகள் ஆதரவு தான்!!!

சீதாலஷ்மி... மிக்க நன்றி. உங்க கை தான் நேரில் கிடைச்சும் கிடைக்காம போயிடுச்சு!!! ;(

வினோஜா.... மிக்க நன்றி. புக் போடும் அளவுக்க்லாம் நமக்கு திறமை பத்தாது. ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

என்ன வனிதா இவ்லோ அழகா நிதானமா சூப்பரா நல்ல டிசைனா வரையரீங்க?நானும் மெஹந்தி போடுவேன்,ஆனால் டிசைன் பார்த்துதான் போடுவேன்,கற்பனை கொஞ்சம் தான் வரும்.நீங்க proffesional designera?நல்லா சிவந்திருக்கே!!!என்ன கோன் use பன்னுறீங்க?

Eat healthy

சொல்ல வார்த்தைகளே இல்லை வனி:))

இதுக்காகவே உங்களை நேரில் பார்க்கணும்னு இருக்கு, கண்டிப்பா என் கைகளில் வரையணும் ஓகே வா!! வாழ்த்துக்கள் வனி:)) நிறையயயயயயயயயயயய பாராட்டுக்கள்:))

அன்புடன்
பவித்ரா

ரசியா... மிக்க நன்றி. ப்ரொஃபஷனல் எல்லாம் இல்லைப்பா.... நானும் உங்களை போல் பல இடங்களில் பார்க்கும் டிசைனை வைத்தே போடுகிறேன்.... பார்த்து பார்த்து போடாமல், பார்த்ததில் மனதில் பதிந்ததை நம் கற்பனை சேர்த்து கொண்டு வருவது தான். எப்போதும் singh தான் பயன்படுத்துவேன். இம்முறை புதிதாக Raj Gold கோன். :)

பவி... மிக்க நன்றி. அவசியம் உங்க கையில் உங்க கல்யாணத்துக்கு போடுடலாம். ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

உங்கள் டிசைன்கள் எல்லாமே அழகாக இருக்கின்றன வனிதா.

ஆஹா....வழக்கம்போல் மெஹந்தி டிசைனில் கலக்கியிருக்கீங்க வனி.....ரொம்ப அழகா...தெளிவா இருக்கு.
அதை விட அது அழகாக சிவந்த தங்கள் கை மிக அழகாக உள்ளது.
(உங்கள் கை தானே..!!!!!!!!!!!) வைத்த கண் வாங்காமல் சிறிது பார்த்து ரசித்துக் கொண்டிருந்தேன்.
இது போன்ற அழகான மெஹந்தி போட்டு கொள்ளவே உங்கள் வீட்டிற்க்கு வரலாம் என தோன்றுகின்றது.....வனி.

******பாராட்டுக்களும்....,வாழ்த்துக்களும் ************

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

அன்பு வனிதா,
உங்களுடைய மெகந்தி டிசைன் சூப்பர்,நல்லசிவந்து அழகாக இருக்கு,நீங்க எத்தன டிசைபோட்டு காமிச்சுட்டீங்க நான் இன்னும் ஒன்னுகூட போடவில்லை.ஏன்ன எனக்கு இங்கு கோன் கிடைக்கவில்லை.ஊருக்கு போனதும் முதல் வேலைய கோன் வாங்கி எல்லா டிசைனும் போட்டுக்கனும் நீங்க கொடுத்த எல்லா டிசைனும் எளிமையகாகவும்,அழகாகவும் இருக்கு உங்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும்
அன்புடன்
நீமா

Madam,
Really super submit your photo please....

super

சூப்பரா இருக்கு வனிதா......நல்ல கற்பனைத்திறன்.....அதை அப்படியே
பென்சில் வச்சு வரைஞ்சமாதிரி நேர்த்தியா இருக்கு....

எங்கிட்ட நிறைய ஹென்னா இருக்கு......போடத்தான் தெரியல....:(

தொடருங்கள் உங்கள் அழகு கைவினையை......
அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

இந்த டிசைன் புக் எங்கே வாங்கலாம். ஏதேனும் சைடில் இருந்து டவுன்லோட் செய்ய முடியுமா?

ரொம்ப அழகா இருக்கு இந்த டிசைன்ஸ். நன்றி

fantastic for your party desin.i like your mehandi very much.keep it up.by g.gomathi.

வனி ரொம்ப அழகா இருக்கு...செய்றதை திருத்தமா அழகா செய்றீங்க வனி..முன்பு உங்கள் பகுதிகளையும் பார்த்தேன் பின்னூட்டம் தரவில்லை சேர்த்தே சொல்கிறேன் உங்கள் பகுதி எனக்கு ரொம்ப இஷ்டம்

very nice

வனிதா உங்க மெஹந்தி டிசைன் சூப்பர்.பார்த்த உடனே போடணும் போல இருக்கு.நான் இதுவரை ஒரு தடவை கூட ட்ரை பண்ணியதில்லை இப்போ உடனே போட்டு பார்க்கணும்னு தோணுது.அழகான டிசைன் தந்து எங்களை அசர வைத்த உங்களுக்கு வாழ்த்துக்கள்,தொடரட்டும் உங்கள் பணி

வனிதாக்கா அதையே இன்னும் போடவரமாட்டேங்குது.அதுக்குள்ளே இன்னொன்னா எப்படி இப்படி கலக்கிரீங்கலோ.சூப்பராஇருக்கு.எனக்கும் போடூவீங்களா.

wow! unga design super
varsha

very nice henna design..

நண்பனே! நாளைய மழை அறியும் எறும்பாய் இரு..
நேற்றைய மழைக்கு இன்று குடை பிடிக்கும் காளானை இராதே!

வனி, கைய வச்சுட்டு சும்மாவே இருக்க மாட்டீங்களா? ;))) எதையாவது பண்ணிட்டே இருக்கீங்க பா. இனிமே உங்க பேரு வனீ இல்லை தேனீ.. :)) எங்க வீட்ல என் தங்கை இதுபோல போடுவாப்பா. நான் போட்டுக்க மட்டும் தான் கைய நீட்டுவேன். ஹிஹிஹி... ஹென்னா டிசைன் சூப்பரோ சூப்பர் பா. என் கல்யாணத்துக்கு முன்னாடி உங்கள பார்த்திருந்தேன், அவ்வளவு தான். தப்பிச்சீங்க :) வாழ்த்துக்கள் பா :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

சூப்பர் வனி,பார்த்தவுடன் இது உங்களுடைய வேலை தான் என்று நினைத்தேன்,சரியாக இருந்தது.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

வனி,
உங்களோட எல்லா டிசைனைப்போலவே இதுவும் ரொம்ப ரொம்ப அழகா இருக்கு! எத்தனை நேர்த்தியா, திருத்தமா போட்டிருக்கிங்க...,ரொம்ப அருமையான கற்பனை சக்தி உங்களுக்கு. பாராட்டுக்கள் வனி!!

பி.கு. உங்களோட ட்ரண்டி ட்சைன் பார்த்து, நேற்று என் பெண்ணுக்கு கையில் போட்டு விட்டேன். படமும் எடுத்து இருக்கேன், அந்த இழையின் கீழ் இணைக்கிறேன் வனி!

அன்புடன்
சுஸ்ரீ

வனிதா கொள்ளை அழகு....உங்கள் கைவண்ணமும் கையும்....ரொம்பவே பொறுமை வேணும்....அற்புதமா இருக்கு....எனக்கும் போடணும்னு ஆசை....என் பிள்ளைகள் என்னை விடாதே :(

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

நீங்க ரொம்ப அழகா மெகந்தி போடுரீங்க'வெரி குட்

அழகிய முகத்திர்க்கு அணிகலன்கள் தேவை இல்லை..அன்புடன்,

ஸ்ரீ

அறுசுவை தோழிகள் அனைவருக்கும் வணக்கம்,
நான் உங்களுடைய புதிய தோழி.உங்களுடைய அழகிய நட்பு வட்டத்தில் என்னையும் இணைத்துக் கொள்ளுங்கள்.

அழகிய முகத்திர்க்கு அணிகலன்கள் தேவை இல்லை..அன்புடன்,

ஸ்ரீ

ரெம்ப ரெம்ப அழகா இருக்கு வனி. உங்க கையும்தான். இரண்டு வித்தியாசமான டிசைன் போட்டிருப்பது கூடுதல் அழகு.

புனிதா புனிதா.... ரொம்ப ரொம்ப நன்றி. எங்கே உங்க இமாவிடம் போட்டி போடும் குறிப்பு??? சீக்கிரம் அனுப்புங்க :)

அப்சரா... மிக்க நன்றி. என் கையே தான். அவசியம் வீட்டுக்கு வாங்க... உங்க கை முழுக்க ஹென்னா போட்டுடறேன். ;)

நீமா... கவலைபடாதீங்க ஊருக்கு போஇ நிறைய ஹென்னா போட்டுக்கங்க ஆசைதீர. மிக்க நன்றி :)

வென்கடேஷ்வரி.. மிக்க நன்றி.

இளவரசி... மிக்க நன்றி. யாராவது ஒருவர் கையை பிடிங்க... பழகிடலாம் சீக்கிரம் ;)

கண்ணன்... பெயர் சரியா??? மிக்க நன்றி. நீங்க எந்த டிசைன்'கு புக் கேக்கறீங்க??? பொதுவா ஹென்னா டிசைன்னா நிறைய சூப்பர் மார்கெட்ஸ், புத்தக கடைகளில் கிடைக்கும். இந்த அறுசுவை டிசைன்ஸ் புத்தகத்தில் எல்லாம் வருவதில்லை. இங்க பார்த்தே போட வேண்டியது தான் ;)

கோமதி... மிக்க நன்றி. :)

தளிகா.... ரொம்ப நாளைக்கு பின் உங்களை பார்க்கிறேன். மிக்க நன்றி :)

ப்ரியா... மிக்க நன்றி :)

அனுஷாராஜ்... மிக்க நன்றி. ட்ரை பண்ணுங்க... ஒரு முறைக்கு இரண்டு முறை போட்டா எல்லாமே சுலபமா வந்துடும். :)

இனியா... ஒரே டிசைனை திரும்ப திரும்ப போட்டு பார்க்கா வேண்டாம்... ஒரு முறை பேப்பரில் வரைந்து பாருங்க அடுத்த முறை கையில் போடுங்க. புது புது டிசைன்ஸ் ட்ரை பண்ணுங்க. சூப்பரா போட வந்துடும். மிக்க நன்றி :)

அமிர்தவர்ஷினி... மிக்க நன்றி. :)

வனியா... சாரி, பெயர் தெரியலங்க. மிக்க நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கல்பனா... மிக்க நன்றி, பாராட்டுக்கும், புதுசா வெச்ச பெயருக்கும் ;)

ஹய் ஆசியா???? மிக்க நன்றி. எப்படிங்க ரொம்ப நாளைக்கு அப்பறம் என் குறிப்பில் உங்க பதிவை பார்க்கிறேன்.... எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா??? நலமா இருக்கீங்களா???

சுஸ்ரீ.... ரொம்ப ரொம்ப சந்தோஷம்பா. மிக்க நன்றி. டிசைன் அண்ணா இணைக்க மாட்டார்.... இப்போ அப்படி இணைப்பதில்லையாம், புது தளம் மாற்றும் போது பிரெச்சனை வருதாம். அதனால அனுப்பி விடுங்க, அண்ணா மெதுவா அதுக்கு ஒரு இழை போடமுடியுமான்னு பார்த்துட்டு இருக்கார். ;)

லாவண்யா... மிக்க நன்றி. என் பிள்ளைகளும் விடுவதில்லை. ;( ஆனா தூங்கின பிறகு போட்டுட்டு 1 மணி நேரத்தில் எடுத்துடுவேன்.

ஸ்ரீ... மிக்க நன்றி. :) தோழியாக இணைத்து கொண்டோம். அரட்டை பக்கம் போங்க.... எல்லாரும் பேசுவாங்க.

அம்முலு அம்முலு அம்முலு.... நலமா இருக்கீங்களா??? மிக்க நன்றிங்க. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதாக்கா அடிப்படை எம்ப்ராய்டிங் தையலில் நீங்கள் சொன்னfrench not_ல் நூலைமேலே இழுத்தவுடன் முன் நூலை இரன்டு சுத்துசுத்தி பின் கையால் இழுத்துபிடித்து கொன்டு முதலில்நூல்வந்த இடத்தின் அருகில்குத்தி இழுக்கவும் என்ரு சொல்லிருந்தீர்கள்.ஆனால்நூலை கையாலிழுத்துபிடித்துக்கொன்டுநூலைகீழே குத்தினால்வர மாட்டேங்குது.ஊசியில்நூலைசுத்தி மருபடிகையாலிழுத்துஎன்ன பன்னனும்னு சொல்லுங்க.pls help me

இனியா.... அந்த நாட் போடுவது சுலபம். நீங்க முன் நூலை துணியை ஒட்டி சுத்துங்க. அதாவது கீழே இருந்து குத்தி மேலே இழுத்த பின் ஊசியில் துணியை ஓட்டி இருக்கும் பகுதியில் நூலை இரன்டு சுற்று சுற்றவும். சுறி விட்டு அந்த சுற்றியை பகுதி(நாட்) அதை கையால் பிடித்துக்கொள்ளவும். நீங்க சுத்திய பின் நீண்டு இருக்கும் நூலை இழுக்காதிங்க..... நூலை லேசாக இழுத்து பிடித்து நாட்டை நன்றாக பிடிங்க. அப்பதான் நாட் அவிழாது. இப்போ ஊசியை முதலில் குத்திய இடத்துக்கு அருகே குத்தி கீழே இழுங்க. முதலில் போட்ட நாட்டை கட்டினது போல் வரும். புரிந்ததா??? போட்டு பாருங்க, சந்தேகம் வந்தா கேளுங்க. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதாக்கா உடன்பதிலுக்கு நன்றி.இதெல்லாம் நான்8_ம்வகுப்பில் தொழில் பிரிகவில் படித்தது.அப்புரம் மரந்துடுத்து.உங்க புன்னியத்தால் அதெல்லாம் தெரிந்துவிட்டது,ரொம்ப நன்றி.அதில் "ப"தையல் எப்படின்னு கொஞ்சம் சொல்லிதாங்க.தொந்தரவுக்கு மன்னிக்கவும்.அப்புரம் எம்ப்ராய்டிங் பொருள்கள்ஸ்டோன்,மற்ற பொருள்கள்(எந்த கடைகளில்) எங்கேகிடைக்குமென்ரும் சொல்லுங்கல் எனக்கு ஒன்றும்தெரியாது தயவு செய்து சொல்லுங்கள்.நான் இந்தியாவில் இருக்கிரேன்.

Hi வனிதா ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு. அழகா போட்டு இருக்கீங்க.Super

சத்யா... மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

hai friends

Fantastic vanitha akka,,,,,,,,,,,,,you have a more talents.i really like your talents like cooking,mehandhi etc,,,eppadi akka ungaluku matum ivlo talents?god bless you,,,,,.

இதுவும் கடந்து போகும்.

மிக்க நன்றி. இங்க என்னைவிட டேலண்ட்டான மக்கள் அதிகம்... ;) அவங்க கூட பார்த்தா நான் இன்னும் கத்துகுட்டி தான். உங்க வாழ்த்துக்கு மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta