பீட்ரூட் கூட்டு

தேதி: November 23, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.8 (6 votes)

 

பீட்ரூட் – இரண்டு (பெரியது)
கடலை பருப்பு – 100 கிராம்
வெங்காயம் – ஒன்று (பெரியது)
தக்காளி – ஒன்று (மீடியம் சைஸ்)
பச்சை மிளகாய் – ஒன்று
மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு – ருசிக்கு தேவையான அளவு
தேங்காய் – இரண்டு பத்தை (துருவியது)
தாளிக்க:
எண்ணெய் – இரண்டு தேக்கரண்டி
கடுகு – அரை தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - இரண்டு
பூண்டு – இரண்டு பல்
கறிவேப்பிலை – சிறிது
சீரகம் – அரை தேக்கரண்டி


 

பீட்ரூட்டை சதுர வடிவமாக பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயம், தக்காளியையும் நறுக்கி வைக்கவும். கடலை பருப்பை 10 நிமிடம் ஊற வைக்கவும்.
குக்கரில் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்.
அடுத்து நறுக்கி வைத்துள்ள பீட்ரூட், மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு தூள் சேர்த்து வதக்கி ஐந்து நிமிடம் தீயின் தனலை சிம்மில் வைக்கவும்.
பிறகு கடலை பருப்பை சேர்த்து கிளறவும்.
ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு குக்கரை மூடி மூன்று விசில் விட்டு இறக்கவும். கடைசியாக துருவிய தேங்காய் சேர்த்து கிளறி கொதிக்க விட்டு இறக்கவும்
சுவையான பீட்ரூட் கடலைபருப்பு கூட்டு ரெடி

ரொட்டி, பூரி, ப்ளெயின் சாதம், தயிர் சாதம் அனைத்துக்கும் பொருந்தும். குழந்தைகளுக்கு மிகவும் சத்தானது, கர்ப்பிணி பெண்களும் அடிக்கடி செய்து சாப்பிடலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

அன்பு ஜலீலா,

பார்க்கறதுக்கு கலர்ஃபுல்லா இருக்கு, சுவையும் நன்றாகவே இருக்கும்.

அன்புடன்

சீதாலஷ்மி

ஜலீலா அக்கா,
பீட்ரூட்டில் கூட்டு கூட செய்யலாமா?வித்தியாசமான குறிப்பு.கண்டிப்பா செய்து பார்க்கிறேன்.வாழ்த்துக்கள்.

நான் இதுவரை எந்த காயிலும் கடலைப்பருப்பு சேர்த்து கூட்டு செய்ததில்லை...
சுவை சரியாக இருக்காது என்று...உங்கள் குறிப்பை பார்த்தவுடன் முயற்சிக்க தோன்றுகிறது....இதற்கு மட்டர் தால் பயன்படுத்தலாமா?

நீண்ட இடைவேளைக்குப்பின் உங்க குறிப்பு பார்ப்பதில் மகிழ்ச்சி..
நீங்களும் பிள்ளைகளும் நலமா?

அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

சீதா லக்ஷ்மி அக்கா நலமா>
இது எங்க அம்மா வாரம் ஒரு நாள் பூரி அல்லது ரொட்டிக்கு காலை உணவாக தயாரிப்பாங்க, சென்னா, ஆலு சப்ஜிக்கு பிறகு இது.
(ஒரு முறை இதுவும் வரும்.) ஆகயால் பீட்ரூட் வாங்கினா. ஸ்வீட், அடுத்து பொரியல் , மீதி இருக்கும் காயில்கடலை பர்ப்பு கூட்டு கண்டிப்பா.செய்வாங்க.
கருத்து தெரிவித்தமக்கு மிக்க ந்ன்றி.
ஜலீலா

Jaleelakamal

இளவரசி
நல்ல இருக்கேன் பா.
மட்டர் தாலில் செய்ய வேண்டா, அது வடை பகோடாவிக்கு தான் நல்ல இருகும். பாசி பருப்பு , மசூர் தால், துவரம் பருப்பில் செய்யலாம்.
குழைய வேகக்கூடாது. நெத்துன்னு இருக்னும்

Jaleelakamal

ஹர்ஷா.
முட்டை கோஸ், சுரக்காயிலும் செய்வோம் நல்ல இருக்கும்.
செய்து பாருங்கள்.

Jaleelakamal

jaleela akka unga blog open agaavillai y.

ஜலீலா... ரொம்ப நாள் இடைவெளி விட்டு உங்க குறிப்புகள் வெளி வருது. பார்க்க மகிழ்ச்சியா இருக்கு. பீட்ரூட் என்றால் பொறியல் தான் என்பது போய் அதிலும் கூட்டு செய்து காட்டி இருக்கீங்க. வாழ்த்துக்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பீட்ரூட்டில் பொறியல், ராய்த்தாதான் பண்ணியிருக்கேன். கூட்டு செய்ததில்லை. உங்க குறிப்பு பாத்ததும் செய்துடலாம்னு தோனுது.

வனி கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி
பீட்ரூட் கூட்டு அடிக்கடி செய்வது தான். குறிப்ப்புகள் நிறைய இருக்கு நேரம் இல்லாததால் அனுப்ப முடியல.
ஜலீலா

Jaleelakamal

மிஸஸ் கோமு , பீட்ரூட்டில் நிறைய வகை ரெசிபிகள் செய்யலாம், எல்லா காயிலும்ரொம்ப பிடித்த காய் பீட்ரூட்தான். செய்து பாருங்கள் நல்ல இருக்கும்.
ஜலீலா

Jaleelakamal