புதினா மல்லி சட்னி

தேதி: November 23, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.4 (7 votes)

 

வெங்காயம் - 2
தக்காளி - 2
தேங்காய் துருவியது - கால் கப்
கொத்தமல்லி - கால் கட்டு
புதினா - கால் கட்டு
இஞ்சி - சிறிதளவு
பச்சை மிளகாய் - ஒன்று
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தாளிக்க


 

புதினா மற்றும் மல்லி தழைகளை சுத்தம் செய்து ஆய்ந்து வைத்துக் கொள்ளவும். மற்ற தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்து கொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு பொரிந்ததும், உளுத்தம் பருப்பு போட்டு வறுக்கவும் .
தேவையான பொருட்கள் அனைத்தையும் வாணலியில் போட்டு நன்கு வதக்கவும்.
நன்கு வதங்கியதும் ஆற வைத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். புதினா மல்லி சட்னி தயார். இட்லி, தோசைக்கு சுவையாக இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ரம்யா, வித்தியாசமான சத்தான குறிப்பு. செய்து பார்த்து விடுகிறேன். வாழ்த்துக்கள் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் அவர்களுக்கு நன்றி.

கல்பனா உங்கள் வருகைக்கு நன்றி. செய்துபாருங்கள். இட்லி, தோசைக்கு மிக பொருத்தமான சட்னி. அதிக பேருக்கு அரைக்கும் போது சிறிது பொட்டுக்கடலை சேர்த்து அரைத்தால் நிறைய காணும்.சுவையிலும் பெரிதாக மாற்றம் இருக்காது.

ஹாய் ரம்யா,எங்க வீட்டில் அடிக்கடி செய்யற சட்னி இதுதான்.நல்ல டேஸ்ட்டான சட்னி,சீக்கிரமாவும் செஞ்சுடலாம்.டேஸ்ட்டான ரெசிப்பியா கொடுத்திட்டே இருக்கீங்க.வாழ்த்துக்கள்.

அன்புடன்
நித்திலா

ரம்யா,
உங்க புதினா,மல்லி சட்னி வித்தியாசமா இருக்கு.கண்டிப்பா செய்து பார்க்கிறேன்.வாழ்த்துக்கள்.

சட்னி சூப்பரா இருக்கு..நானும் இதுபோல் மைக்ரோவேவில் செய்வேன்....அழகான தெளிவான படங்கள்...
வாழ்த்துக்கள்

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

நன்றி கல்பனா, நித்திலா, அன்பரசி,elu செய்துபாருங்கள்.

ரம்யா... பார்த்தாலே சாப்பிட தோணுது... அழகா படம் எடுத்து சுவையான குறிப்பு கொடுத்திருக்கீங்க. மிக்க நன்றி. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

தெளிவான விளக்கப்படக் குறிப்புகள் பாத்து செய்வது ஈசியா இருக்கு. பண்ணியும் பாத்தாச்சு. நல்லா இருந்தது.

really very nice.