சர்க்கரை வள்ளிக்கிழங்கு போளி

தேதி: November 23, 2010

பரிமாறும் அளவு: 5 நபர்களுக்கு.

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

சர்க்கரை வள்ளிக்கிழங்கு - அரைக்கிலோ
வெல்லம் - கால் கிலோ
மைதாமாவு - அரைக்கிலோ
நெய் - ஒரு கிண்ணம்


 

சர்க்கரைவள்ளிக்கிழங்கை நன்கு வேகவைத்து தோலுரித்துக்கொள்ளவும்.
வெந்த கிழங்கை நைசாக மசித்துக்கொள்ளவும்.
வெல்லத்தை சிறிது நீர் விட்டு இளக்கி கல்மண்போக வடிகட்டி, கெட்டி பாகு காய்ச்சவும்.
அதில் வெந்து மசித்த கிழங்கைப்போட்டு நன்கு கிளறவும்.
நன்கு கெட்டியானதும் இறக்கி ஆற விடவும்.
ரெடியான பூரணத்தை சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
மைதாவில் தேவையான தண்ணீர் ஊற்றி கெட்டியாகப்பிசைந்து கொள்ளவும்.
மைதாவின் நடுவில் பூரணம் வைத்து போளிகளாக இட்டு தோசைக்கல்லில் போட்டு இருபுறமும் நெய் விட்டு சிவக்க மொறு, மொறுப்பாக எடுக்கவும்.
சூடாக பரிமாறவும்.


இந்த போளி குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். 3 நாட்கள் வரையிலும் கெடாமல் இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்