41/2 மாத குழந்தைக்கு என்ன உணவு கொடுக்கலாம்?im working..pls help.

அன்பு தோழிகளே,

என் மகனுக்கு 4 1/2 மாதம் ஆகிறது.லீவ் இல்லாததால் ஆபிஸ் ஜாயின் பண்ணிட்டேன்.என் குழந்தைக்கு என்ன மாதிரியான உணவுகள் கொடுக்கலாம்?தற்பொழுது ராகி,கோதுமை,ஓட்ஸ் கஞ்சி கொடுக்கிறோம்.ஆப்பிள் தர்றோம்.வேறு என்னனென்ன தரலாம்?ஒரே மாதிரியான உணவு அவனுக்கு வெறுப்பாகி விடுமோ என்று பயமா இருக்கு.Pls help.

Regards,
Meiporul

4 1/2 மாதம் குழந்தைக்கு பால் மட்டும் கொடுங்க ... டாக்டர் advices not to start solids before 6 months... atleast wait for 5 months... what you are giving is more than enough.... still he would not be able taste the food ur giving .. he wont be bored ...

Suganthy

அன்பு மெய்

4 1/2 மாத குழந்தைக்கு ராகி, கோதுமை கஞ்சி குடுக்கலாம்.
ஆப்பிள் 7 மாதத்திற்கு பிறகு வேகவைத்து குடுக்க வேண்டும்.
எந்த உணவும் குழந்தைக்கு போர் அடிக்காது இந்த வயதில்.

முடிந்தால் தாய் பாலை எடுத்து வைத்துவிட்டு அலுவலகம் போங்கள்.
ஒரு நாளைக்கு 2 முறை கஞ்சி கொடுத்தால் போதும்.
ஆனால் 6 மாதம் வரை தாய் பால் மட்டுமே கொடுக்க வேண்டும்
என்பது டாக்டர்களின் அறிவுரை.

முடியாத பட்சத்தில் நீங்கள் உங்கள் டாக்டர் ஆலோசனை பெறுங்கள்.

amutha

தோழியே...உங்கள் குழந்தைக்கு இப்போது நீங்கள் கொடுக்கும் உணவே மிகவும் சத்தானதுதான்.அதையே கொடுங்கள்.தாய் பாலும் கொடுக்கின்றீர்கள் தானே...?ஏனென்றால் அதுதான் உங்கள் குழந்தைக்கு மிக மிக முக்கியம்.
இன்னும் சிறிது நாளில் செரலாக் வீட் ஆரம்பிக்கலாம்.முதலில் எதுவுமே சிறிது சிறிதாக தான் ஆரம்பிக்க வேண்டும்.அது அக்குழந்தைக்கு பிடித்துவிட்டால் அதன் அளவை கொஞ்சமாக கூட்டி கொள்ளலாம்.ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு ஃப்ளேவராக கொடுங்கள்.அது குழந்தைக்கு போர் அடிக்காது.
இப்போது மதியம் பருப்பு தண்ணீர்,கேரட் ஜூஸ் என கொடுக்கலாம்.ஆறு மாதத்திற்க்கு மேல் நாம் சாப்பிடும் சாதமே பருப்புடனோ...வேக வைத்த உருளை,கேரட்டுடனோ மிக்ஸியில் அடித்து ஊட்ட ஆரம்பிக்கலாம்.இப்படியே கொஞ்சம் கொஞ்சமாக ஒரு வயதிற்க்குள் நாம் சாப்பிடும் உணவுகளை குழந்தைக்கு சேர்த்திட வேண்டியதுதான்.
இன்னும் விபரமாக வேண்டுமெனில்....குழந்தை வளர்ப்பு என்று தனியாகவே ஒரு பக்கத்தில் தாளிக்கா அவர்கள் எழுதியிருக்கின்றார்கள்.அதை படியுங்கள். அதன் லின்க் இதோ.....
http://www.arusuvai.com/tamil/node/14968
இது உங்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும் எனக்கு நினைக்கிறேன்.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

ஹலோ மெய் பெட்டெர் நீங்க இட்லி கொடுக்கறது தான். b'coz he cnt easily digest solid fud b4 6 months.

LIVE ND LET LIVE

மேலும் சில பதிவுகள்