பருப்பு சூப்

தேதி: April 12, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பருப்பு - 4 கப்
விரும்பிய காய்கறி - ஒரு கப்
ரொட்டி துண்டுகள் - சிறிதளவு
துருவிய பாலாடைக்கட்டி - 4 மேசைக்கரண்டி
நெய் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப


 

வாணலியில் நெய் விட்டு காய்ந்ததும் ரொட்டித்துண்டுகளை பொடிச் செய்து போட்டு வறுத்துக் கொள்ளவும்.
முதலில் ஒரு பாத்திரத்தில் பருப்பை போட்டு வேக வைத்துக் கொள்ளவும்.
வெந்ததும் கெட்டியாக இருந்தால் தண்ணீர் ஊற்றி கடைந்துக் கொள்ளவும்.
அதில் விரும்பிய காய்கறிகளை போட்டு வேக வைத்துக் கொள்ளவும்.
நன்றாக வெந்தபின் வடிகட்டி துருவிய பாலாடைக் கட்டியைப் போடவும்.
பிறகு வறுத்த ரொட்டித்துண்டுகளையும் தூவிக் கொள்ளவும்.
பரிமாறும் போது தேவையான அளவு உப்பு, மிளகு சேர்த்து பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்