மைசூர் பாகு

தேதி: November 24, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.1 (25 votes)

 

கடலை மாவு - ஒரு கப்
சீனி - ஒரு கப்
எண்ணெய் - 2 கப்
நெய் - 5 ஸ்பூன் + ஒரு ஸ்பூன்
உப்பு - ஒரு சிட்டிகை
தண்ணீர் - 6 ஸ்பூன்


 

மைசூர் பாகு செய்ய தேவையான பொருட்களை தயார் நிலையில் எடுத்து வைக்கவும்.
ஒரு நாண் ஸ்டிக் கடாயில் ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி மாவை லேசாக வறுக்கவும்.
வறுத்த கடலைமாவை மற்றொரு பாத்திரத்தில் கொட்டி வைத்துக் கொண்டு, அதே கடாயில் சீனியுடன் தண்ணீர், உப்பு சேர்த்து அடுப்பில் வைத்து கரைக்கவும்.
சீனி கரைந்ததும் அதனுடன் எண்ணெயையும், நெய்யையும் ஊற்றி கலக்கவும்.
கலவை கொதிக்க ஆரம்பிக்கும் முன்பு வறுத்த மாவை கொட்டி கைவிடாமல் கிளறவும்.
கடலைமாவு கலவை கெட்டியாகி சட்டியில் ஒட்டாமல் எண்ணெயை வெளியிடும்போது அடுப்பை அணைக்கவும்.
இதனை ஒரு சதுரமான தட்டில் கொட்டி சமப்படுத்தி விடவும். லேசாக ஆறியதும் துண்டுகள் போடவும்.
சுவையான, சூப்பரான மைசூர் பாகு ரெடி.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

மிக மிக தாமதமாக பதில் தந்தமைக்கு மன்னிக்கவும்,பழைய குறிப்புகளுக்கு பதிவுகள் வருவதை அறிந்து கொள்ளமுடியவில்லை,இப்போதுதான் பார்த்தேன்.
தரனிபாபு....உங்க கேள்விக்கு பதில் அளிக்கும் முன் நீங்களே மறுபடியும் செய்து பார்த்து நன்றாக அமைந்ததற்கு வாழ்த்துக்கள்.
சலாம் பாத்திமா...பச்சை வாடை அடிக்குதென்றால் இன்னும் கொஞ்ச நேரம் வருக்கவும்,பொறி பொறியாக வரும்போது மைசூர்பாகை எடுத்து விடவும்,இதுதான் பதம்.தரனி போல் நீங்களும் திரும்ப செய்து பார்த்து பதிவிட்டதற்கு நன்றி பாத்திமா.
ஹாய் ஜெயா....என் அளவுகள் எல்லாம் சரிதான்,மீண்டும் செய்து பாருங்க,சரியா வரும்.
சசிபிரபு....அடுப்பை மெதுவாக வைத்து பச்சை வாசம் போகும் வரை வருத்தால் போதும்,ரொம்ப கருக விடாதீங்க.

Eat healthy