சாலட்

தேதி: November 25, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

சாலட் கீரை - 1 கட்டு
கேரட் - 1
வெள்ளரி - 1
வெங்காயம் - பாதி
குட்டி தக்காளி - 10
சோளம் - 1 டின் ( பதப்படுத்தியது)
மயோனைஸ் - 2 ஸ்பூன்
சோயா சாஸ் - 2 ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன்
சீனி - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு


 

சாலட் கீரையை கழுவி சுத்தம் செய்து தண்ணீர் இல்லாமல் வடிகட்டி பின் பொடிதாக அரிந்து கொள்ளவும்.
அதில் துருவிய கேரட்,அரிந்த வெங்காயம்,வட்டமாக வெட்டிய வெள்ளரி,தக்காளி,சோளம் அனைத்தையும் போடவும்.
அதனுடன் மயோனைஸ்,சீனி,சோயா சாஸ்,எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து கிளரவும்.
இதை பார்பிக்யூ செய்யும் போது சாப்பிட ஏதுவாக இருக்கும்.


மேலும் சில குறிப்புகள்