சுலபமான பால் பாய்சம்

தேதி: November 25, 2010

பரிமாறும் அளவு: 8 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.2 (5 votes)

 

பால் - ஒரு லிட்டர்
அரிசி - ஒரு கைப்பிடி அளவு
சர்க்கரை - 150 கிராம்
நெய் - 50 மில்லி
ஏலக்காய், முந்திரிபருப்பு, கிஸ்மிஸ் - அவரவர் விருப்பப்படி


 

அரிசியை நெய்யைவிட்டு சிவப்பாக வறுக்கவும்.
ஒர்லிட்டர்பாலை ஒருபாத்திரத்தில்விட்டு வறுத்த அரிசியைப்போட்டு குக்கரில் வைத்து, ஒரு விசில் பெரிதாக வந்ததும் அடுப்பை சிம்மில் 40 நிமிடங்களுக்கு வைக்கவும்.
ஆறியதும் திறந்து சர்க்கரைசேர்த்து 5 நிமிடங்களுக்கு சிம்மில்வைத்துக்கிளறவும்.
ஏலம் பொடித்து சேர்த்து, முந்திரி, த்ராட்சை நெய்யில் வறுத்து போடவும்.


குக்கரில் வைப்பதால் பாயசத்தின் அளவு கொஞ்சம்கூட குறையாமல் இருக்கும். நல்ல ரோஸ்கலரிலும் இருக்கும். குழந்தைகள்முதல் பெரியவர்வரை
அனைவரும் விரும்பி சாப்பிடு வார்கள்.

மேலும் சில குறிப்புகள்


Comments

எளிய குறிப்பு!

செய்துட்டு சொல்றேன் கோமு

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ரொம்ப நாள் கழித்து அறுசுவைல பேசிக்கரோம். செய்துபாருங்க. உங்க மகன்
விரும்பி சாப்பிடுவார்,.

அன்பு கோமு,

பால் பாயசத்துக்கு பாலை நன்றாக குறுகக் காய்ச்ச நேரம் ஆகும். பக்கத்தில் இருந்து, பால் பொங்கி விடாமல், கிளறிகிட்டே இருக்கணும். இந்த சிரமம் எல்லாம் இல்லாம, சுலபமாக செய்ய சொல்லிக் கொடுத்திருகீங்க. நன்றி.

அன்புடன்

சீதாலஷ்மி

வந்து கருத்துசொன்னதுக்கு நன்றிம்மா. இது ரொம்பஈசியாகவும் இருக்கும்
மிக டேஸ்ட்டாகவும் இருக்கும். அவசியம் செய்து பாருங்க.

கோமு அக்கா ஏன் இப்படி????? படிக்கும் போதே வாய் ஊறுது,,, இப்பவே சாப்டனும் போல இருக்கு ரொம்ப நல்லா இருக்கும் போல கண்டிப்ப செய்வேன்க என்ன அரிசி சேக்கனும் சொலுங்க எனக்கு தெரியாது அதான் கேடேன்,,,, தப்ப நினைக்காதீங்க, பாத்திரத்தில் போட்டு குக்கரில் வைக்கனும,,, அப்போ குக்கரில் தண்ணீ உற்றனுமா வேண்டாம??? அடுத்து பால் வைக்க போதும்மனதா இருந்தாபோதும??? இல்லை பால் வைக்கும் பாத்திரம் பெரியதாய் இருக்கனும?? எனக்கு தெரியாது அதான் கேடேன் ரொம்பா ஆசையா இருக்கு,,, இதே முறையில் அதாவது குக்கரில் பாத்திரம் வைக்கு முறையில் காய்களையும் வேக வைக்கலாம ????? தப்ப நினைக்காதீங்க தெரியாம தான் கேடேன்

என்றென்றும் அன்புடன் கீதா (விமலகீதா)

நாம் கோபத்தில் பேசும் வார்த்தைக்கு ஒரு அர்த்தம்,,,
பேசாத வார்த்தைக்கு பல அர்த்தம்!!!

யாருமே பதில் சொல்லையா தெரியாமால் தான் கேட்கிரேன் சொல்லுங்க பா

என்றென்றும் அன்புடன் கீதா (விமலகீதா)

நாம் கோபத்தில் பேசும் வார்த்தைக்கு ஒரு அர்த்தம்,,,
பேசாத வார்த்தைக்கு பல அர்த்தம்!!!

குக்கரில் தண்ணீர் ஊற்றித்தான் பாத்திரத்தை வைக்கணும்மா. பால் பொங்கி வழியாம இருக்கணும் இல்லியா கொஞ்சம் பெரிய பாத்திரமாகவே வைக்கனும்.
இதுபோல காய்களையும் வேக வைக்கலாமே. பண்ணிப்பாருங்க. அப்பரம் அடிக்கடி செய்யத்தோனும்.

கண்டிபாக செய்வேன் மிக்க நன்றி ,,,,,, தண்ணிர் உள்ளே வைக்கும் பாத்திரத்தில் பாதி அளவு இருந்தால் நல்லதா? அதே போல அரிசி ஒரு கை பிடி இருந்தால் போதுமாக்கா? நிறைய கேள்வி கேட்கிறேன்னு நினைக்காதீங்க எனக்கு படிக்கும் போதே மிகவும் பிடித்து விட்டது அதான் விடாமல் கேட்கிரேன்,,,,மறக்காம என்ன அரிசினு சொல்லுங்க

என்றென்றும் அன்புடன் கீதா (விமலகீதா)

நாம் கோபத்தில் பேசும் வார்த்தைக்கு ஒரு அர்த்தம்,,,
பேசாத வார்த்தைக்கு பல அர்த்தம்!!!