Udal alosanai

எனக்கு சுக பிரசவத்தில் குழந்தை பிறந்து 3மாதஙள் ஆகிறன.இன்னும் என் வயிறு உப்பி குறையாமல் சுருக்கங்களாக உள்ளது.வயிறும்,சுருக்கங்களும் மறைய என்ன வழி?

தோழி தரணி...தாங்கள் அருசுவைக்கு புதுசா...
வருக வருக....
குழந்தை உண்டாகி இருக்கும் போது ஏழு மாதம் இருக்கும் போதே வயிற்றில் தடவிக்கொள்ள க்ரீம் வகைகள் உள்ளன.அதை உபயோகித்திற்க்கலாம்.(இது அடுத்த தடவை உபயோகபடும் அல்லவா...அதற்க்காக சொன்னேன்.)

உங்களுக்கு சுக பிரசவம் தானே ஆகியுள்ளது.நிச்சயம் நீங்கள் குழந்தைப் பிறந்து இரண்டாம் நாளிலேயே பெல்ட்டோ....அல்லது நல்ல காட்டன் புடவை துணியில் பாதியை நன்கு வயிற்றில் இறுக்க கட்டி கொள்ளலாமே....அவ்வாறு எந்நேரமும் கட்டி இருப்பின் வயிறு அமுங்கும் வாய்ப்பு உள்ளது.
இப்பவும் பரவாயில்லை பெல்ட்டை குளிக்கும்,சாப்பிடும் நேரம் தவிர மற்ற நேரங்களில் போட்டு கொள்ளுங்கள்.சுருக்கத்திற்க்கு ஆலிவ் ஆயிலை தினமும் தடவி வரலாம்.முற்றிலும் குறையும் என்று சொல்ல முடியாது.அதிக படியாக தெரியாமல் மறையும் அவ்வளவுதான்.முயன்று பாருங்கள்.

எனக்கு தெரிந்தவற்றை சொல்லி விட்டேன்.இன்னும் நிறைய தோழிகள் வந்து நிச்சய்ம் பயனுள்ள தகவலை தருவார்கள்.

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

வயிறும் சரி விழுந்திருக்கும் ஸ்ட்ரெச் மார்க்ஸும் சரி நாளாக ஆக குறையும்..ஒரு வருடத்திற்குள் ஸ்ட்ரெச் மார்க்ஸ் நல்லாவே மங்கிவிடும்..தாய்ப்பால் கொடுப்பவர்களுக்கு வயிறு நல்ல சுருங்கும்..கூடவே கொழுப்பான உணவுகளை தவிர்ப்பது மற்றும் உடற்பயிற்ச்சி அல்லது அன்றாடம் செய்யும் வீட்ட்டு வேலைக்கே கூட வயிறு குறையும்..

Thangal alosanaiku miga nandri.appadiyae seikiren

IDUVUM KANDANDU POGUM

மேலும் சில பதிவுகள்