ஆலு கோபி கறி

தேதி: November 26, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.8 (4 votes)

 

காலிஃப்ளவர் - ஒன்று (சிறியது)
உருளைக்கிழங்கு - ஒன்று
சீரகம் - ஒரு தேக்கரண்டி
பச்சை மிளகாய் - இரண்டு
தாளிக்க:
கடுகு, எண்ணெய் - தேவைக்கு
உப்பு - தேவையான அளவு


 

தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
காலிஃப்ளவரை சிறியதாக நறுக்கி உப்பு, மஞ்சள் தூள் கலந்த நீரில் வேக வைக்கவும்.
உருளைக்கிழங்கை சிப்ஸ்க்கு வெட்டுவது போல நீளமாக, அதே சமயம் மெல்லியதாக நறுக்கி வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு வெடிக்க விட்டு, சீரகம் போட்டு அது பொரிந்ததும் பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
மிளகாய் வதங்கியதும், நறுக்கின உருளையை சேர்த்து வேகும் வரை உப்பு சேர்த்து வதக்கவும்.
உருளை ஓரளவிற்கு வெந்ததும், ஏற்கனவே வேக வைத்த காலிஃப்ளவரை போட்டு தண்ணீர் வற்றும் வரை வதக்கவும்.
சுவையான ஆலு கோபி கறி தயார். சப்பாத்தி, ரொட்டிக்கு மிகவும் ஏற்ற சைட் டிஷ்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ஹாய் பவி மசாலாதூள் இல்லாத ஆலு கோபி கறியா. சாதத்துக்கு பொரியலா கூட சாப்பிடலாம் போல் இருக்கே. உருளைக்கிழங்கு ஸ்லைஸா வெட்டி இருக்கறது நல்லா இருக்கு. சமைத்து அசத்தலாமில் உங்க முறை வரும்போது செய்து அசத்த வேண்டும்.

பவி,
சூப்பர் ரெசிப்பி கொடுத்திருக்கீங்க.காலிஃப்ளவர், உருளைகிழங்கு ரெண்டுமே எனக்கு ரொம்ப பிடிக்கும்.ரெண்டுமே டேஸ்ட்டானது.பார்த்தாலே சாப்பிடனும் போல இருக்கு,பவி.விருப்ப பட்டியல்ல சேர்த்துட்டேன்,பவி.சீக்கிரமா செஞ்சு பார்த்துட்டு வந்து அருமையா இருக்குனு சொல்றேன்,பவி.

அன்புடன்
நித்திலா

பவி எல்லாமே எளிதில் செய்து விட கூடியதாவே கொடுக்குறீங்கபா.வாழ்த்துக்கள். உருளை நறுக்கி இருப்பதே ரொம்ப அழகா இருக்கு. பச்சைமிளகாய் மட்டுமே காரமா பவி? இன்னும் நிறைய குறிப்புகள் கொடுக்க வாழ்த்துக்கள்

இன்னிக்கு சப்பாத்தி தாலுடன் உங்கபாஜிதான் சைட் டிஷ். ரொம்ப் நல்லா வந்தது.

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவிற்கு என் நன்றிகள்:))

அன்புடன்
பவித்ரா

முதல் ஆளாக வந்து பதிவு போட்டிருக்கீங்க நன்றி வினோ. சாதத்துக்கு பொரியலா நான் ட்ரை பண்ணினதில்லை. சப்பாத்திக்கு மட்டும் தான் ரொம்ம்ம்ப பிடிக்கும். எனக்கு காய் கட் பண்ணுவதுன்னா ரொம்ப பிடிக்கும் வினோ. அம்மா ஏதாவது தடிமனா கட் பண்ணனும் என்றால் என்கிட்ட தரமாட்டாங்க, சரியா வராது, மெல்லியதா என்றால் நமக்கு ஓகே:))

அன்புடன்
பவித்ரா

ரொம்ப நன்றி நித்தி. உங்களுக்கு மிகவும் பிடித்த ரெசிப்பி கொடுத்ததில் எனக்கும் மகிழ்ச்சி நித்தி. விருப்ப பட்டியல்ல சேர்த்ததுக்கு மிக்க நன்றி. சீக்கிரம் என்றில்லை, மெதுவாவே செய்து பார்த்துட்டு சொல்லுங்க,எப்படி இருந்ததுன்னு.

அன்புடன்
பவித்ரா

வாங்க யாழு. ரொம்ப நன்றி. எளிமையானது தான் எனக்கு பிடிக்கும் யாழினி. ரொம்ப மெனக்கெட வேண்டாம் பாருங்க:))

பச்சைமிளகாய் மட்டுமே போதுமானது தான். வாழ்த்துக்கு நன்றி.

அன்புடன்
பவித்ரா

ஹாய் பவி உங்கள் ஆலு கோபி கறி சிம்பிளி சூப்பர்ப்.
மசாலாக்கள் இல்லாமல் நன்றாக கொடுத்துள்ளீர்கள்.
நானும் விரைவில் செய்து பார்த்துட்டு சொல்கிறேன்.
வாழ்த்துக்கள் பவி....

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

கோம்ஸ், அதுக்குள்ள செய்தே பார்த்திட்டீங்களா. ரொம்ப ரொம்ப சந்தோஷம். நன்றி கோம்ஸ்:))

அன்புடன்
பவித்ரா

வாங்க அப்சரா,
ரொம்ப ரொம்ப நன்றி. எனக்கு காலிஃப்ளவர் அவ்வளவா பிடிக்காது;((, இப்படி செய்தால் ஒரு பிடி பிடிப்பேன்:))
செய்து பார்த்துட்டு சொல்லுங்க. நன்றி.

அன்புடன்
பவித்ரா

பவி, ஆலூ கோபி கறி குறைவான பொருட்களை வைத்து நல்லா சத்தான குறிப்பு தந்திருக்கே பா. மாம்சுக்கும் இப்படி தான் மசாலா குறைவா பிடிக்கும். காலிபிளவர் ரொம்ப நல்லா பிடிக்கும். சாதாரணமா உருளைகிழங்கை சிறு துண்டுகளாக்கி வெட்டி போட்டோ வேக வைத்தோ செய்வேன். இது போல நீள நீளமாக அரிந்து செய்திருப்பது வித்தியாசமாகவும், பார்க்க நன்றாகவும் உள்ளது.எல்லா வித ரெசிப்பி தந்தும் கலக்குற பவி. நான் பொய் சொல்லாம செய்து பார்த்துட்டு உனக்கு பதில் சொல்றேன் பா :) வாழ்த்துக்கள். கல்யாணத்துக்குள்ள நூறு குறிப்பாவது தந்துடனும் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

பவி,
எளிய,சுவையான ரெசிப்பி.பிரசன்ட்டேஷனும் நல்லா இருக்கு.இன்னும் நிறைய குறிப்புகள் கொடுத்து,விரைவில் கூட்டாஞ்சோறுக்கு வாங்க.வாழ்த்துக்கள்.

எப்படி இப்படி எல்லாம்.....கலக்குங்க......ரொம்பவே நல்லதொரு ரெசிபே....Simply superb

வாழ்த்துக்கள்
லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

கல்ப்ஸ், வாங்க வாங்க. மாம்ஸ்க்கு கண்டிப்பா செய்து கொடுங்க (இந்த முறையாவது).

//எல்லா வித ரெசிப்பி தந்தும் கலக்குற பவி. //ரொம்ப சந்தோஷம் கல்ப்ஸ்:))

//எல்லா வித ரெசிப்பி தந்தும் கலக்குற பவி. //என் கல்யாணத்துக்கு இன்னும் அவ்வளவு நாளா ஆகும் ;((((((.

தொடர்ந்து வந்து ஊக்கப்படுத்துங்க கல்ப்ஸ். என்னை விட நீங்க நல்லாவே சமைப்பீங்க. ஒரு குறிப்போடு நிறுத்திட்டா எப்படி?? இன்னும் நிறைய குறிப்பு நீங்களும் தரணும்:))

அன்புடன்
பவித்ரா

நன்றி அன்பு:))

கூட்டாஞ்சோறுக்கு வரணும்னு ஆசைதான். இப்பவே யோசித்து யோசித்து தான் ரெசிப்பி கொடுக்கிறேன். சமையல் கடலில் இப்பதான் நீச்சல் கத்துட்டு இருக்கேன்:))

அன்புடன்
பவித்ரா

//எப்படி இப்படி எல்லாம்.....கலக்குங்க......//ரொம்ப சந்தோஷம் லாவண்யா. உங்க குறிப்புகளை பார்ப்பேன், பதிவு போடதான் முடியலை. நன்றி

அன்புடன்
பவித்ரா

ஹாய் பவி,
இன்று உங்க ஆலு கோபி கறி செய்தேன். குறைவான பொருட்களை வைத்து, நிறைவான ஒரு குறிப்பா இருந்தது. நானும் இந்த காம்பினேஷன்ல கறி செய்து இருக்கேன். ஆனால், உருளைக்கிழங்கை இந்த மாதிரி மெல்லிதா கட் செய்து போட்டது ரொம்பவே அழகா இருந்தது, சீக்கிரமாவும் காய் வெந்தது. சுவையும் அருமை! குறிப்புக்கு நன்றி பவி.
(அப்புறம் ஒரு விஷயம் சொல்லட்டுமா? நானும் உங்களமாதிரிதான், சின்ன வயதிலிருந்தே காய் வெட்டுவதென்றால் எனக்கு அப்படி ஒரு இஷ்டம்!. என் ஸ்கூல், காலேஜ் டேஸ்ல அம்மாவுக்கு செய்யற ஒரு உதவி இதுதான்!:))

அன்புடன்
சுஸ்ரீ