சேமியா லட்டு

தேதி: November 26, 2010

பரிமாறும் அளவு: 6 நபர்களுக்கு.

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பாம்பினோ சேமியா - ஒருகப்
சர்க்கரை - ஒரு கப்
நெய் - முக்கால் கப்
ஏலக்காய் - 4
முந்திரிபருப்பு - 25 கிராம்


 

அடுப்பில் வாணலியை வைத்து சேமியாவை சிவக்க வறுக்கவும்.
நன்கு ஆறியதும் மிக்சியில் நைசாகப்பொடிக்கவும்.
சர்க்கரையையும் நன்கு பொடிக்கவும்.
எலாவற்றையும் நன்கு கலந்து ஏலம் பொடிபண்ணிப்போட்டு, முந்திரியும் நெய்யில் வறுத்துப்போட்டு நன்கு கலக்கவும்.
நெய்யை நன்கு சூடு ப்ண்ணி மாவுக்கலவையில் ஊற்றி சூடாக இருக்கும்போதே லட்டுக்களாகப்பிடிக்கவும்.


மிகவும் சுவையான லட்டுக்கள் இவை. அனைவருமே விரும்பி சாப்பிடுவார்கள்.

மேலும் சில குறிப்புகள்


Comments

ஆஹா...மிகவும் புதுமையான ரெஸிபியாக இருக்குங்க கோமு...
செய்முறையும் சுலபமாக தெரியுது.நன்றாக லட்டு போல் பிடிக்க வருமா...?
முடிந்தபோது இந்த வித்தியாசமான குறிப்பை செய்துட வேண்டியதுதான்.
நிறைய அசத்தலான குறிப்பை கொடுத்து கொண்டு இருக்கீங்க.
வாழ்த்துக்களும்,பாராட்டுக்களும் கோமு.

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

வருகைக்கு நன்றி. லட்டு நன்றாகவே பிடிக்க வரும். கொஞ்சம் ச்சூடாக இருக்கும்போதே பிடிக்கனும்.