அவல் கேசரி

தேதி: November 27, 2010

பரிமாறும் அளவு: 6 நபர்களுக்கு.

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

1
Average: 1 (1 vote)

 

கெட்டி அவல் - ஒரு கப்
துருவிய தேங்காப்பூ - அரை கப்
துருவிய வெல்லம் - முக்கால் கப்
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் - 2
முந்திரி, திராட்சை - அவரவர் விருப்பபடி


 

அவலை நன்கு அலம்பி வடிய வைக்கவும்.
வெல்லத்தில் சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்கவைத்து, கல்,மண்போக வடிகட்டி,திரும்பவும் கொதிக்கவிடவும்.
நன்கு கொதித்ததும்,ஊறின அவல், தேங்காப்பூ போட்டு கிளறவும்.
நன்கு கெட்டியானதும், நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை, பொடிசெய்த ஏலப்பொடி, நெய் சேர்த்து சுருளக்கிளறி இறக்கவும்.
சூடாகப்பரிமாறவும்.


இளம் வயதுக்குழந்தைகளுக்கு உடல் உறுதிக்கும்,எனர்ஜிக்கும்தேவையான
புரதம், இரும்பு,கால்சியம் சத்துக்கள் அடங்கியது இந்த இனிப்பு.

மேலும் சில குறிப்புகள்