முருங்கை சூப்

தேதி: April 12, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

முருங்கைக்காய் - 2
வெங்காயம் - ஒன்று
தக்காளி - 3
துவரம்பருப்பு - கால் கப்
இஞ்சி - ஒரு துண்டு
பூண்டு - 2 பல்
மிளகாய்த்தூள் - அரை தேக்கரண்டி
மிளகு - கால் தேக்கரண்டி
சோம்பு - கால் தேக்கரண்டி
சீரகம் - கால் தேக்கரண்டி
தனியா - ஒரு தேக்கரண்டி
மஞ்சள்தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
மல்லி - சிறிதளவு


 

முருங்கைக்காயைத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
வெங்காயம், தக்காளி இரண்டையும் நறுக்கிக் கொள்ளவும்.
இஞ்சி, பூண்டு இரண்டையும் நசுக்கிக் கொள்ளவும்.
வெறும் வாணலியில் மிளகு, சீரகம், சோம்பு, தனியா ஆகியவற்றை போட்டு வறுத்து பொடித்து வைக்கவும்.
இவை அனைத்தையும் ஒன்றாகக் கலந்து இவற்றுடன் மற்ற பொருட்களையும் சேர்த்து 3 டம்ளர் தண்ணீர் ஊற்றி குக்கரில் வேக வைக்கவும்.
3 விசில் வந்ததும் இறக்கி வைத்து ஆறியதும் வடிகட்டி கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை தூவி பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்