முருங்கக்கீரை சாம்பார்

தேதி: November 30, 2010

பரிமாறும் அளவு: 4

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (1 vote)

 

முருங்கக்கீரை - 2 கப்
துவரம் பருப்பு - 1/2 கப்
சின்ன வெங்காயம் - 5
தக்காளி - 1
மிளகாய் தூள் - 1/2 tsp
தனியா தூள் - 1/2 tsp
மிளகு சீராக தூள் - 1/2 tsp
மஞ்சள் தூள் - 1/4 tsp
தேங்காய் துருவல் - 1 tbsp
உப்பு - தேவையான அளவு
கடுகு, பெருங்காயம், கருவேப்பில்லை, எண்ணெய் - தாளிக்க


 

துவரம்பருப்பை குழைவாக வேக வைத்து எடுத்து கொள்ளவும்.
மிளகு சீராக பொடி இல்லாவிடில் 1/4 ஸ்பூன் மிளகு 1/4 ஸ்பூன் சீரகம் சேர்த்து பொடித்து வைக்கவும்.
எண்ணெய் சூடாக்கி தாளிக்க கொடுத்துள்ளதை தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
தக்காளி சேர்த்து குழைவாகவும் வரை வதக்கி 1 கப் தண்ணீர் சேர்த்து மிளகாய் தூள், தனியா தூள் , மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்க்கவும்.
ஒரு கொதி வந்ததும் சுத்தம் செய்துள்ள கீரையை சேர்க்கவும்.
கீரை முக்கால் பாகம் வெந்தவுடன் வேகவைத்த பருப்பை 1 கப் தண்ணீர் சேர்த்து குழம்பில் ஊற்றவும்.
கீரை வெந்ததும் மிளகு சீராக தூள் தேங்காய் துருவல் சேர்த்து இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

நாங்க இருக்கும் இடத்தில் முருங்கை கீரை கிடைக்காது. குறிப்பு பாத்ததும் பண்ணலாம்னு தோணித்து.கிடைக்கும்போது செய்துபாத்துட்டு சொல்ரேன்.

எங்களுக்கும் இங்கே எப்போவாவது ஒரு முறை தான் கிடைக்கும். அப்பொழுது விலை அதிகம் இருந்தாலும் நிறைய வாங்கிடுவேன். ஒரு நாள் சாம்பார், போரியல் கூட்டு என்று வைத்து என் ஆசை தீர சாப்பிடுவேன். எல்லாத்தையும் விட எனக்கு இந்த சாம்பார் தான் ரொம்ப இஷ்டம். கிடைக்கும் போது செய்து பார்த்துவிட்டு சொல்லுங்க...

நன்றி
லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!