இனிப்பு சீஸ் பஃப்ஸ்

தேதி: November 30, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

பஃப்ஸ் ஷீட் - 6
சிறிய சீஸ்கட்டி - 6
சர்க்கரை - சிறிதளவு
வெண்ணெய் - சிறிதளவு


 

தேவையான பொருட்களை தயார் நிலையில் எடுத்து வைக்கவும்.
ஒரு பஃப்ஸ் ஷீட்டில் சீஸை தடவவும். அதன் மேல் சர்க்கரை சிறிதளவு தூவி விடவும்.
சீஸ்தடவிய பஃப்ஸ் ஷீட்டில் உங்களுக்கு என்ன வடிவம் வேண்டுமோ அதைப் போல் நன்றாக மடித்துக் கொள்ளவும். இதுப்போல் மற்ற பஃப்ஸ் ஷீட்டிலும் தயார் செய்து எடுத்துக் கொள்ளவும். பஃப்ஸ் ஷீட்டை சரியாக மடிக்காமல் வைத்தால் அவனில் வைக்கும் போது சீனி உருகி வெளிவந்துவிடும்.
பின்னர் இதனை ட்ரேயில் அடுக்கி அவனில் 180 டிகிரியில் 10 நிமிடம் வைத்து எடுக்கவும்.
சுவையான இனிப்பு சீஸ் பஃப்ஸ் ரெடி. குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடியது.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ஹாய் ருக்சானாமு ஈஸியான முறைதான் சீஸ் பஃப்ஸ். வெண்ணெய் எப்போ தடவனும். சீஸ் தடவுவதற்கு முன்னாடி தடவனுமா.

பஃப்ஸ் சீட் இருக்கு,சீஸும் இருக்கு செய்து பார்த்துட வேண்டியதுதான்,வெண்ணெய் பற்றி சொல்லவே இல்லையே!

Eat healthy

புதுசு புதுசா இருக்கே.இன்னும் நிறைய ரேசப்பி அனுப்புங்க ருச்சானா.
எனக்கு ஒரு டவுட், உள்ளுக்கு சீஸ் வைக்காமல் காரம் உள்ள பிரட்டல் கறிவைத்தும் செய்யலாமா?

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

ur recipes are superb, i am a new member, so tell me where did the puff sheets can be got..

நான் பப்ஸ் ஷீட்sunbulah தான் யூஸ் பண்ணியிருக்கேன்.ஆனால் மேல முட்டை வெள்ளை சிறிது தண்ணிர் சேர்த்து அடித்து ப்ரஷ் பண்ணுவேன்,கிரிஸ்ப்பியாக கலராக வரும்.இப்படி செய்தால் கிரிஸ்ப்பியா வருமா???

எனது குறிப்பை வெளியிட்டதற்க்கு நன்றி நன்றி மிக மிக நன்றி...

வாழு, வாழவிடு..

அன்பு ருக்‌ஷானா,

நல்ல குறிப்பு. சிம்பிளான செய்முறை.

யோகராணி கேட்டதுதான் என்னுடைய சந்தேகமும். சீஸ் வைக்கறதுக்குப் பதிலாக, கார கலவை வைத்து செய்ய முடியுமான்னு முயற்சி செய்து பார்க்கணும்.

அன்புடன்

சீதாலஷ்மி

நன்றி ..இருவருக்கும்.. அந்த பஃப்ஸ் சீட்டில்தான் ஏற்க்கனவே வெண்ணெய் இருக்கிறதே.. பின் எதர்க்கு வெண்ணெய்.. இங்கு கிடைக்கிற சீட்களில் வெண்ணெய் தடவிதான் வரும்.. பதில் தாமதமாக சொன்னதுக்கு வருந்துகிறேன். பத்து நாட்களாக கம்ப்யூட்டர் ரிப்பேராகி விட்டது.. அதனால்தான்...நன்றி...

வாழு, வாழவிடு..

நன்றி இருவருக்கும்
.. காரகலவை. சிக்கன். முட்டை. எல்லாம் வைத்து . செய்யலாம். நன்றாக இருக்கும்...நன்றி மீண்டும்...

வாழு, வாழவிடு..

சூப்பரா இருக்கு ருக்சானா.என் விருப்ப பட்டியலில் சேர்த்துவிட்டேன்.

ஹசீன்

நன்றி ஹேமா..
பெரிய சூப்பர்மார்க்கெட்டுகளில் கிடைக்கும் ஹேமா தேடிப்பாருங்கள்.....
ரீம் ..நன்றி ஆமாம் நானும் சன்புலாதான் யூஸ் பன்றேன்..நீங்கள் சொன்னதுபோலும் செய்யலாம் ..நான் வேகமாக செய்ததால் மறந்துவிட்டேன்.. நன்றி ரீம்....

வாழு, வாழவிடு..

நன்றி நலமா ஹசீனா.. அரட்டைக்கு வருகிறேன் பேசலாம்.. சூப்பர் பஃப்ஸ் சாப்டுகிட்டே பேசலாம்...

வாழு, வாழவிடு..