நட்ஸ் பர்ஃபி

தேதி: November 30, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.5 (2 votes)

 

கன்டென்ஸ்டு மில்க் - 100 கிராம்
கருப்பு பேரீட்சை பழம் - 6
முந்திரி - 10
திராட்சை - 10
பாதாம் - 10
அக்ரூட் - சிறிது
அத்திப்பழம் - 3
பிஸ்தா - சிறிது
வெண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி


 

மேலே குறிப்பிட்டுள்ள உலர்ந்த பருப்பு வகைகளை தயாராக எடுத்து வைக்கவும்.
கருப்பு பேரீட்சைப்பழத்தை பொடியாக நறுக்கவும். திராட்சையை தவிர மற்ற அனைத்தையும் மிக்ஸியில் போட்டு ஒன்று இரண்டாக பொடிக்கவும்.
வெண்ணெயை ஒரு நாண் ஸ்டிக் பாத்திரத்தில் ஊற்றி அதில் நறுக்கிய பேரீட்சம் பழத்தை சேர்த்து மென்மையாகும் வரை வதக்கவும். வதங்கியதும் திராட்சையை சேர்த்து வதக்கவும்.
இதனுடன் கன்டென்ஸ்டு மில்க் சேர்த்து கிளறவும்.
இந்த கலவை பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் போது அடுப்பிலிருந்து இறக்கி விடவும். பிறகு அதில் பொடித்த நட்ஸ் வகைகளை சேர்த்து கிளறவும்.
ஒரு தட்டில் நெய் தடவி இதை கொட்டி அழுத்தி வைக்கவும். சற்று ஆறியதும் ஃபிரிட்ஜில் அரை மணி நேரம் அல்லது ஒரு மணி நேரம் வைத்து எடுத்து விரும்பிய வடிவில் வெட்டவும். மிக சுலபமாக, விரைவில் செய்ய கூடிய, சத்தான இனிப்பு இது.

விரும்பினால் இதில் வறுத்து தோல் நீக்கிய வேர்க்கடலை, பொரி கூட சேர்க்கலாம். இப்படி தட்டில் கொட்டி வெட்டாமல், பட்டர் பேப்பரில் வைத்து உருட்டி ஃபிரிட்ஜில் வைத்து எடுத்ததும் வட்ட வடிவிலும் வெட்டி எடுக்கலாம். அல்லது லட்டு போலவும் பிடிக்கலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

வனி யம்மி ஸ்வீட். நல்ல சத்துள்ள இனிப்பு தான்.

ரெம்ப சிம்பிளா சத்தான குறிப்பு கொடுத்திருக்கிறீங்க, செய்து பார்த்துட்டு பிண்ணோட்டம் தருகிறேன்.வனிதாமேம் அனைத்து கலைகளிலும் அசத்திறீங்க

கைவினைகளில் மருதனை போட்டு அசத்தறீங்க,இங்கே சமையலிலும் அசத்தறீங்க,கண்ணு படப் போகுது,சுத்திப் போடுங்க,ரொம்ப ரிச்சான பொருள்கள் இவை,சத்தும் அதிகம்,குறிப்புக்கு நன்றி,செய்து பார்த்துட்டு சொல்ரேன்.

Eat healthy

வனிதா, நட்ஸ் பர்ஃபி சுப்பர்.
வித்தியாசமா, இனிப்பான ரேசப்பி.
உங்கள் ரேசப்பி எல்லாம் வித்தியாசமாக இருக்கு.
நான் இப்படி இதுவரை சாப்பிட்டது இல்லை.இப்படி இனிப்பான ரேசப்பி நிறைய கொடுங்கள் வனிதா.
ஆமா அக்ரூட் என்றால் என்ன?

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

வனி எங்களுக்கெல்லாம் தீபாவளிசமயம் நிரைய ட்ரைஃப்ரூட்ஸ் பாக்கெட்டா கிடைக்கும் அடுத்த தீபாவளிவரை அது காலியே ஆகாது. இப்ப நல்ல குறிப்பு
கொடுத்திருக்கீங்க. ட்ரை பண்ணிட வேண்டியதுதான்

சூப்பரா இருக்கு பர்ஃபி..

நல்ல குறிப்பு

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

அட போங்க வனிதா,
எப்படி இப்படி எல்லாம்....முகப்பை மொத்த குத்தகை எடுத்துள்ளீர்களா??? கைவியினில் உங்கள் குறிப்பை தவிர வேற வருவதே இல்லை இப்பொழுதெல்லாம்.
ரொம்பவும் சத்துள்ள ரெசிப்பி. இப்படி செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்......கொடுத்து பார்த்து விட்டு சொல்கிறேன்....

நன்றி
லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

வனிக்கா சூப்பர் ரெஸிப்பி. ரொம்ப சத்தானதும் கூட.

வனி அக்ரூட் என்றால் வால்னட்டா?சுவையானதாக இருக்கும் என நினைக்கிறேன் வனி

நலமா?
condensed milk மட்டும் தான் இல்லை வாங்கியவுடன் செய்து பார்த்து சொல்கிறேன் நீங்க sweetened condensed milk சேர்த்து செய்தீங்களா?

வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு முதல் நன்றி :)

வினோஜா... முதல் ஆளாய் வந்து பதிவிட்டமைக்கு மிக்க நன்றி. செய்து பாருங்க. :)

மனோ பாரதி... மிக்க நன்றி. அவசியம் செய்து பார்த்துட்டு பின்னூட்டம் கொடுங்க... அப்படி கொடுக்கும்போது "வனிதா"னே கூப்பிடுங்க... ;) "மேம்" தோழிகளுக்கு நடுவே வேண்டாம்.

ரசியா.. மிக்க நன்றி. ஒரு பர்ஃபி சாப்பிட்டாளே வயிறு ஃபுல். சத்தும் கூட. அவசியம் செய்து பாருங்க. :)

யோகராணி... மிக்க நன்றி. நான் இதை டிவி'யில் பார்த்து கத்துகிட்டேன். செய்து கொடுத்தா வீட்டில் எல்லாருக்கும் பிடிச்சுது, அதான் அடிக்கடி செய்யறோம். நீங்களும் செய்து பாருங்க பிடிக்கும். :) அக்ரூட் என்றால் வால்நட் தான்.

கோமு... அப்படியே வரும் நட்ஸ் பாக்கெட்டை அறுசுவை தோழிகளுக்கு அனுப்பிடுங்க... மிக்க நன்றி :)

இளவரசி... மிக்க நன்றி :)

லாவண்யா... பாருங்க கைவினையில் என் குறிப்பை காணோம் ;( கண்டிப்பா குழந்தைகளுக்கு பிடிக்கும். செய்து பாருங்க :)

யாழினி... மிக்க நன்றி :)

தளிகா... மிக்க நன்றி. வால்னட்டே தான். :)

கவிதா... மிக்க நன்றி. ஸ்வீட்டன்ட் தான் பயன்படுத்திருக்கேன். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

தோழி என் குழந்தைக்கு ஒன்னறை வயது தான் ஆகுது அவனுக்கு நட்ஸ் வகை கொடுக்கலாமா பிறகு கன்டென்ஸ்டு மில்க் சேர்க்கலாமா இல்லை அதற்க்கு பதில் பிரெஷ் மில்க் சேர்க்கலாமா சொல்லுகள் தோழி

சுமிதா... தாமதமான பதிலுக்கு மன்னியுங்கள். இன்றே கவனிக்கிறேன். ஒன்னரை வயதாயிடுச்சே தாரளமா கண்டென்ஸ்டு மில்க் கொடுக்கலாம். நான் முன்பிருந்த நாட்டில் கண்டென்ஸ்டு மில்க் சின்ன பேக் வரும், டிபார்ட்மென்டல் ஸ்டோர்களில் குழந்தைகள் அதை சப்பிகொண்டே வரும்.... ஒரு வயது கூட ஆகாத குழந்தைகள் கூட. கவலை வேண்டாம் சேர்க்கலாம். நட்ஸ் வகையும் சேர்க்கலாம். ஆனால் எல்லாமே அளவோடு சேர்த்து பழகி பின் கொடுக்க ஆரம்பியுங்கள். ஜீரணத்துக்கு பழக வேண்டும் இல்லையா.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா