புதினா போளி

தேதி: December 1, 2010

பரிமாறும் அளவு: 5 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (3 votes)

 

கோதுமை மாவு - 2 கப்
சோயாமாவு - அரை கப்
புதினா இலைகள் - 2 கப்
சர்க்கரை - 1 டேபிள்ஸ்பூன்
வேகவைத்து, மசித்த உருளைக்கிழங்கு - 1 கப்
இஞ்சி பச்சை மிள்காய் விழுது - 2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
நெய் - ஒரு கிண்ணம்
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்


 

புதினாவை நன்கு அலசி பொடிதாக நறுக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி, நறுக்கிய புதினா,இஞ்சி, மிளகாய் விழுதுசேர்த்து நன்கு வதக்கவும்.
பின், வெந்து மசித்த உருளைக்கிழங்கு சேர்த்து சுருள க்கிளறி இறக்கவும்.
கோதுமை மாவுடன் சோயா மாவு சேர்த்து சர்க்கரை, உப்பு சேர்த்து சப்பாத்தி மாவுபோல பிசைந்து கொள்ளவும்.
இந்தமாவை சிறு உருண்டைகளாகச்செய்து, உள்ளேபுதினா,உருளை பூரணத்தை வைத்து மூடிவட்டமாக கனமாக இடவும்.
தோசைக்கல்லை அடுப்பில்வைத்து காய்ந்ததும் போளிகளைப்போட்டு சுற்றிலும் நெய் ஊற்றி சிவக்க வேகவிட்டு எடுக்கவும்.
சூடாகப்பரிமாறவும்.


அனைவரும் விரும்பி சாப்பிடும் சிற்றுண்டி இது. மிகவும் சுவையாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்