ஓட்ஸ் டயட் ரொட்டி

தேதி: December 2, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.7 (6 votes)

 

3 கப் ஓட்ஸ்
ஒரு கப் ஆட்டா மாவு
உப்பு தேவையான அளவு


 

ஓட்ஸை நன்கு மிக்ஸியில் தண்ணீர் சேர்க்காமல் பொடித்துக் கொள்ளவும்.
பிறகு அத்துடன் ஆட்டா மாவையும் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து, வெந்நீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்குப் பிசையவும். (கவனிக்க: சாதாராணமாக சப்பாத்தி மாவுக்கு ஊற்றும் நீரைவிட சிறிது அதிகமாக ஊற்றி பிசைய வேண்டும்.)
பிசைந்த மாவை,ஒரு மூடி இட்ட பாத்திரத்தில் போட்டு அரை மணி முதல் இரண்டு மணி நேரம் வரை ஊற வைக்க வேண்டும்.
பிறகு மெல்லிய சப்பாத்திகளாக இட்டு தோசை கல்லில் போட்டு சப்பாத்தி செய்ய வேண்டும்.
சூடாக சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக இருக்கும்.
இதை எந்த சப்ஜியுடனும் சேர்த்து சாப்பிடலாம்.


மேலும் சில குறிப்புகள்


Comments

அன்பு ஸ்ரீவித்யா

ஓட்ஸ் டயட் இட்லி குறிப்பும் உங்களுடையதுதான்னு நினைக்கிறேன். அதில் ஓட்ஸை, மிக்ஸியில் பொடியாக ஆக்கிக் கொள்ளும்படி சொல்லியிருக்கீங்க. இதில் மாவு என்று குறிப்பிட்டு இருக்கீங்க, தண்ணீர் ஊற்றி, அரைக்கணுமா, அல்லது ட்ரையாக(பொடியாக) திரித்துக் கொள்ளணுமா?

வெயிட் குறைப்பதுதான் இன்றைக்கு முக்கிய தேவையாக இருக்கு. ஓட்ஸ் குறிப்புகள் மிகவும் உதவும்.

நன்றி

அன்புடன்

சீதாலஷ்மி

அன்புள்ள சீதாலட்சுமி ,
தண்ணீர் எல்லாம் ஊற்றி அரைக்க வேண்டாம். அப்படியே மிக்ஸியில் பொடித்துக் கொள்ள வேண்டும். மொத்தமாக திரித்து வைத்துக் கொண்டுவிட்டால் பிறகு சமைப்பது மிக எளிது. முயற்சி செய்யுங்கள். கண்டிப்பாக வெயிட் குறையும். இது அனுபவ பூர்வமான உண்மை. இப்படி ஓட்ஸை வைத்து அராய்ச்சி செய்ததில், நான் மூன்று மாதத்தில் பத்து கிலோ குறைந்துவிட்டேன்.

ஓட்ஸ் ரொட்டி நன்றாக இருந்தது.. டயட்டில். இருப்பவர்களுக்கு நல்ல உணவு.. நன்றி ஸ்ரீவித்யா..

வாழு, வாழவிடு..

kalakita po

அன்புள்ள காயத்ரி,
என்னுடைய குறிப்பை பார்த்து பின்னூட்டம் அளித்தமைக்கு நன்றி.

உங்களுடைய குறிப்பு அருமை. இதில் தொப்பை கூட குறையுமா? ஆட்டா என்றால் கோதுமை மாவு தானே? இதை தினமும் சாப்பிடலாமா?

shagila

ஷகிலா மேடம்,
வணக்கம். கவலையே படாதீர்கள். கண்டிப்பாக தொப்பை குறையும். ஒரு மாதம் தொடர்ந்து முயற்சித்து வாருங்கள். அத்துடன் காலையிலோ அல்லது மாலையிலோ 30 நிமிடம் நடை பயிற்சியும் மேற் கொள்ளுங்கள். சோபா அல்லது நாற்காலியில் உட்காராதீர்கள். தரையில் அமர்ந்து எழுந்திருங்கள். குளிர் பான வகைகளை தவிருங்கள்.
ஒட்சில் நிறைய நார்ச்சத்து இருப்பதால் அதிக அளவில் தண்ணீர் குடிக்க வேண்டும். வெந்நீராக குடித்தால் இன்னும் விரைவில் கொலஸ்ட்ரால் கரைந்துவிடும். என்னுடைய இரண்டாவது டெலிவரியின் போது என்னுடைய டாக்டர் கொடுத்த டிப்ஸ் இவை. நான் பின் பற்றியதில் மிக நல்ல பலன் கிடைத்துள்ளது. எனவேதான் உங்களுக்கும் தைரியமாக சொல்கிறேன்.
வாழ்த்துக்கள்.
இப்படிக்கு
ஸ்ரீவித்யா

ஆமாம். . ஆட்டா என்றால் கோதுமை மாவுதான். அதை குறிப்பிட மறந்துவிட்டேன்.

ஸ்ரீ வித்யா மேடம்,
மிக்க நன்றி. நான் வேலை முடித்து வீடுக்கு வந்ததும் உடனே அருசுவை திறந்து யாராவது என்னுடைய கேள்விக்கு பதில் போட்டிருக்கிறார்களா என்று தேடினேன். நீங்கள் பதில் போட்டிருந்தீர்கள் . மிக்க நன்றி. நான் முயற்சி செய்து பார்க்கிறேன்

shagila

அன்புள்ள ஷகிலா மேடம்,
தினமும் ஒரே மாதிரி சுவையில் சாப்பிட்டால் போர் அடிக்கும் என்பதால் இரண்டு மூன்று வெரைட்டியில் அதே ஓட்ஸ் ரொட்டியைக் கொடுத்துள்ளேன். என்னுடைய அந்த குறிப்புகளையும் பார்த்து முயற்சிக்கவும்.அவற்றுக்கான டயட் சப்ஜி வகைகளும் கொடுத்துள்ளேன்.ம்முயற்சியுங்கள். வாழ்த்துக்கள்

ஸ்ரீவித்யா..,உங்களுடைய இந்த ரொட்டியை இன்று செய்து சாப்பிட்டேன்.
மிகவும் நன்றாக வந்தது.நல்ல சத்தான குறிப்பை எங்களோடு பகிர்ந்து கொண்டமைக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்....

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

அப்சரா மேடம்,
என்னுடைய குறிப்பைப் பார்த்து சமைத்து பின்னூட்டமும் அளித்துள்ளீர்கள். மிக்க மகிழ்ச்சி.
வெயிட் குறைப்பதுதான் உங்கள் நுகம் என்றால், இந்த டயட் ரொட்டியுடன் கொள்ளு சப்ஜியும் சாப்பிடுங்கள். அந்தக் குறிப்பையும் கொடுத்துள்ளேன். இதை மதிய உணவாகவே கூட எடுத்துக் கொள்ளலாம். என்னுடைய தோழி ஒருத்தி அப்படிதான் செய்தாள். நல்ல பலன் கிடைத்துள்ளது.

oats diet roti romba nalla irunthathu madam.
enakku oats kanchi avvalava pudikathu... aana intha recipe supera irukku:-)

romba nanri.

I am so sorry sowmya ma'am,
I went to India, thats why I was not able to see your comments immediately. Thankyou so much for your feedback.
SrividyamOhan

ungal kurippu megayum arumai,

லாவண்யா மேடம் ,
என்னுடைய குறிப்பை செய்து பார்த்து பின்னூட்டமிட்டமைக்கு மிக்க நன்றி