ஓட்ஸ் டயட் இட்லி

தேதி: December 3, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.9 (7 votes)

 

சம்பா கோதுமை ரவை 2 கப்
ஓட்ஸ் மாவு ஒரு கப்
உப்பு தேவையான அளவு
புளித்த தயிர் இரண்டு கரண்டி
தாளிக்க:
அரை டீ ஸ்பூன் கடுகு
அரை டீ ஸ்பூன் உளுத்தம் பருப்பு
அரை டீ ஸ்பூன் கடலை பருப்பு
பொடி பொடியாக நறுக்கிய இஞ்சி அரை டீ ஸ்பூன்
பொடி பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் அரை டீ ஸ்பூன்
பெருங்காயம் ஒரு சிட்டிகை
தாளிக்க இரண்டு ஸ்பூன் எண்ணெய்


 

ஒரு கப் ஓட்ஸை மிக்ஸியில் போட்டு நன்கு பொடி செய்து கொள்ளவும்.
அதை இரண்டு கப் கோதுமை ரவையில் போட்டு கலந்து புளித்த தயிராய் சேர்த்து தேவையான அளவுக்கு உப்பு போட்டு, சிறிது தண்ணீரும் ஊற்றி இட்லி மாவு பதத்துக்குக் கரைத்துக் கொள்ள வேண்டும். கரைத்த மாவில், தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களை எல்லாம் தாளித்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
பிறகு வழக்கமாக இட்லி செய்யும் முறையில் ஆவியில் வேக வைத்து எடுக்கவும். சுவையான டயட் இட்லி தயார்.
இதை கொத்தமல்லி மற்றும் புதினா சட்னியுடன் சூடாக சாப்பிட மிக நன்றாக இருக்கும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

அன்பு ஸ்ரீவித்யாமோகன்,

ஓட்ஸ் சேர்க்க சொல்லி எல்லோரும் சொல்றாங்க, ஆனா, அதை வெறும் பாலில் கலந்து குடிக்க பிடிப்பதில்லை. நீங்கள் சொல்லியிருக்கும் குறிப்பு நன்றாக இருக்கிறது.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்புள்ள சீதாலக்ஷ்மி,
கண்டிப்பாக இது உங்களுக்கு பிடிக்கும். முயற்சித்துப் பார்க்கவும். என்னுடைய மற்ற ஓட்ஸ் ஐட்டம்களையும் முயற்சிக்கவும். டயட் உணவைப் போன்ற நினைவே இருக்காது. கண்டிப்பாக வெயிட் குறையும்.

I tried oats idly. It was too good. Thanks for your valuable recipe

ஹாய் ஸ்ரீவித்யா,

இன்று இரவு டின்னருக்கு, உங்களோட ஓட்ஸ் டயட் இட்லி செய்து சாப்பிட்டாச்சு. நிஜமாவே ரொம்ப சூப்பரா இருந்தது!
ஓட்ஸை சேர்த்துக்க ஒரு நல்ல குறிப்பு. என் விருப்ப‌ப் ப‌ட்டிய‌லில் சேர்த்தாயிற்று, இனி அடிக்க‌டி செய்திடுவேன். மிக்க ந‌ன்றி!

அன்புடன்
சுஸ்ரீ