ஓட்ஸ் மோர்க்களி

தேதி: December 3, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

ஓட்ஸ் மாவு இரண்டு கப்
உப்பு தேவையான அளவு
நீர்க்க கரைத்த மோர் ஒன்றரை கப்
தாளிக்க:
ஒரு ஸ்பூன் எண்ணெய்
அரை ஸ்பூன் கடுகு
அரை ஸ்பூன் உளுத்தம் பருப்பு
அரை ஸ்பூன் கடலை பருப்பு
பொடி பொடியாக நறுக்கிய இஞ்சி அரை ஸ்பூன்
பொடி பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் அரை ஸ்பூன்
பெருங்காயம் ஒரு சிட்டிகை
கருவேப்பிலை ஒரு கொத்து


 

ஓட்ஸ் மாவை நீர்க்க கரைத்த மோரில் நன்கு கரைத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைப் போட்டு தாளிக்கவும்.
பிறகு மோரில் கரைத்த ஓட்ஸை அதில் சேர்த்து கட்டியாகிவிடாமல் நன்கு கிளறவும். சிறிது கொதித்தவுடன் உப்பையும் சேர்த்து கெட்டியாகும் வரை நன்கு கிளறவும்.
இப்போது சுவையான ஓட்ஸ் மோர்க்களி தயார்.
தொட்டுக் கொள்வதற்கு எதுவும் தேவையில்லை.


மேலும் சில குறிப்புகள்


Comments

hai super ya

ஐ, இது நல்ல இருக்கே.

Mrs. Komi ma'am,
How are you? Have griefs this moor kaLi? Once after you tried this item you pls give me your feedback pls.
Thankyou
Srividhyamohan

அன்னபூர்ணே சதா பூர்ணே சங்கர பிராண வல்லபே |
ஞான வைராக்ய சித்யர்த்தம் பிக்ஷான்தேஹீ ச பார்வதி||
மா

கண்டிப்பா செய்து பாத்துட்டு எப்படி இருந்ததுன்னு சொல்ரேம்மா. இந்தவாரம் பூராவும் சமைத்துஅசத்தலாமில் ஒரே பிசி. அதனால உடனே பண்ணமுடியலை. ஓ. கே. வா?