ஓட்ஸ் பைனாப்பிள் டயட் ரொட்டி

தேதி: December 3, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

ஓட்ஸ் மாவு 4 கப்
ஆட்டா மாவு 2 கப்
பைனாப்பிள் கூழ் ஒரு கப்
உப்பு தேவையான அளவு
சர்க்கரை ஒரு ஸ்பூன்


 

ஓட்ஸை மிக்ஸியில் நன்கு பொடித்துக் கொள்ளவும்.
அத்துடன் ஆட்ட மாவையும் உப்பையும் கலந்து கொள்ளவும்.
நன்கு அரைத்து கூழக்கப் பட்ட பைனாப்பிளையும் சர்க்கரையையும் அத்துடன் சேர்த்து வெந்நீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு நன்கு பிசைந்து ஒரு மூடி போட்ட பத்திரத்தில் அரை மணியிலிருந்து இரண்டு மணி நேரம் வரையில் வைத்து ஊற விடவும்.
பிறகு மில்லிய சப்பாத்திகளாக இட்டு தோசை கல்லில் போட்டு சப்பாத்தி செய்யவும்.
இதை எந்த வித சப்ஜியுடனும் சாப்பிடலாம்.


இப்போது ஓபிசிட்டி பிரச்சினை குழந்தைகளையும் விட்டு வைக்கவில்லை. பெரியவர்களைப் போல் குழந்தைகளை டயட்டில் இருக்க வைப்பது அவ்வளவு எளிதல்ல. எனவே ஏதாவது வித்தியாசமாகவும் சுவையாகவும் அவர்களுக்கு சமைத்துக் கொடுக்க வேண்டும். மேலே குறிப்பிட்டுள்ள முறையில் சப்பாத்தில் செய்து கொடுத்தால் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். இதே முறையில் மாம்பழ கூழை பயன் படுத்தியும் செய்யலாம்.

மேலும் சில குறிப்புகள்