கிட்ஸ் கிரீன்ரைஸ்

தேதி: December 3, 2010

பரிமாறும் அளவு: 5

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பாசுமதி அரிசி – 2 கப்
புதினா – ஒரு கட்டு
கொத்தமல்லி – ஒரு கட்டு
பச்சை மிளகாய்- 1
பூண்டு – ஒரு பல்
இஞ்சி –ஒரு சிறு துண்டு
பட்டை 1
கிராம்பு- 1
சோம்பு-1/4 டீஸ்பூன்
சின்ன வெங்காயம் -2
தேங்காய் -1டேபிள்ஸ்பூன்
கேரட் துருவல் – ¼ கப்
உருளைக்கிழங்கு- 1
பச்சை பட்டாணி-கால் கப்
உப்பு தேவைக்கு


 

முதலில் பாசுமதி அரிசியை 4 கப் நீரில் ஊறவைக்கவும்
புதினா ,கொத்தமல்லியை கழுவி காம்பு நீக்கி அதனுடன் சோம்பு,பட்டை,கிராம்பு,வெங்காயம்,இஞ்சி,பூண்டு,தேங்காய் ,பச்சை மிளகாயும் சேர்த்து அரைக்கவும்.

பின் வாணலியில் நெய் ஊற்றி அதில் பொடியாக நறுக்கிய உருளைகிழங்கை போட்டு வதக்கவும்.அதில் கேரட் துருவலையும் வதக்கி,பின் அரைத்த விழுதை சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.பச்சை பட்டாணி சேர்க்கவும்.பின் அரிசி ஊறிய நீரை சேர்த்து கொதிக்கவிடவும்.தேவையான உப்பு சேர்க்கவும்.

கொதித்ததும் அதில் ஊறிய அரிசியை போட்டு நன்றாக கலந்து மிதமான தீயில் வைத்து ஒரு விசில் வந்ததும் அடுப்பை அணைத்து அதே சூட்டில் 5 நிமிடம் வைத்து இறக்கவும்


காரம் குறைவாய்,காய்கள் சேர்த்து இருப்பதால் குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸ்க்கு உகந்தது.

மேலும் சில குறிப்புகள்


Comments

எனக்கு புதினா & பூண்டு காம்பினேஷன் ரொம்ப பிடிக்கும்,ஒரு முறை செய்து பார்க்கிறேன்.

Eat healthy