இனிப்பு அவல் உப்புமா

தேதி: December 3, 2010

பரிமாறும் அளவு: 2 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.7 (3 votes)

 

கெட்டி அவல் -- ஒருகப்
சர்க்கரை -- முக்கால் கப்
முந்திரி பருப்பு -- 10
திராட்சை -- 10
நெய் -- ஒரு குழிக்கரண்டி
துருவியதேங்காய் -- கால்மூடி
ஏலக்கா பொடி -- ஒருஸ்பூன்


 

அவலை நன்கு கழுவி ஒருகப் தண்ணீரில் அரைமணி நேரம் ஊறவைக்கவும்.
கடாயில் நெய் காயவைத்து முந்திரி, திராட்சை சிவக்க வறுக்கவும்.
அதன்மேல் சர்க்கரை போட்டு,கரைந்ததும் ஊறின அவல், தேங்காய்ப்பூ,ஏலப்பொடி போட்டு 5 நிமிடங்களுக்கு நன்கு கிளறி விடவும்.
பொல,பொல என்று ஆனதும் இறக்கி சூடாகப்பரிமாறவும்.


மிகவும் ருசியான உப்புமா இது. குழந்தைகள்முதல் பெரியவர் வரை அனைவரும் விருமி சாப்பிடுவார்கள்.

மேலும் சில குறிப்புகள்


Comments

ஹாய் கோமு,உங்க இனிப்பு அவல் உப்புமாதான் நேத்து எங்க வீட்ல.எங்க வீட்டில் அடிக்கடி அவல் செய்வோம்.ஆனா அது வேற மாதிரி இருக்கும்.உங்களோடது ரொம்ப டேஸ்ட்டா இருந்துச்சு கோமு.நல்ல குறிப்பு கோமு.சுவையான குறிப்பிற்கு நன்றிகளும்,வாழ்த்துக்களும் கோமு.

அன்புடன்
நித்திலா

எனக்கு அவல் என்றால் மிக பிடிக்கும் செய்தேன் சூப்பர் வாழ்த்துக்கள் .

வாழு, வாழவிடு..