தயிர் குருமா

தேதி: April 12, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

புளித்த கொட்டித் தயிர் - ஒரு கப்
நறுக்கிய காரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு - ஒரு கப்
பெரிய வெங்காயம் - 2
பச்சைமிளகாய் - 5
இஞ்சி, பூண்டு விழுது - ஒரு மேசைக்கரண்டி
தனியா - அரை தேக்கரண்டி
கசகசா - அரை தேக்கரண்டி
பட்டை, ஏலம், கிராம்பு, முந்திரி - தலா 5 கிராம்
கடுகு - தேவைக்கேற்ப
கறிவேப்பிலை - தேவைக்கேற்ப


 

முதலில் காய்கறிகளை கழுவி சுத்தம் செய்து நறுக்கி உப்பு போட்டு வேக வைக்கவும்.
வெங்காயத்தை நீளமாக நறுக்கி வைக்கவும்.
மிக்ஸியில் இஞ்சி, பூண்டு விழுது, தனியா, கசகசா, முந்திரி, எண்ணெய், உப்பு, ஆகியவற்றை போட்டு அரைக்கவும்.
தயிருடன் அரைத்தவற்றை போட்டு கலக்கி வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், கறிவேப்பிலை போட்டு வதக்கி அதையும் தயிருடன் சேர்க்கவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு வதக்கிக் கொள்ளவும்.
பிறகு காய்கறிகளையும், தயிர் கலவையையும் வதக்கியவற்றுடன் ஊற்றி ஒரு கொதி வந்ததும் இறக்கி வைத்து தேவையான உப்பு போட்டுப் பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்