கத்தரிக்காய் சாலட்

தேதி: December 4, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கத்தரிக்காய் - 2
வெங்காயம் - 1
பூண்டு - 2 பல்
மல்லி இலை - கொஞ்சம்
மிளகாய் தூள் - சிறிது
மஞ்சள் தூள் - சிறிது
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 1
உப்பு - தே.அளவு
எலுமிச்சை சாறு - கொஞ்சம்
எண்ணெய் - சிறிது (கத்தரிக்காய் பொரிக்க)


 

கத்தரிக்காயை வட்ட வடிவில் அறுத்து அதனுடன் மிளகாய் தூள்,மஞ்சள் தூள்,உப்பு சேர்த்து பிரட்டி வைக்கவும்.
ஒரு கடாயில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி அதில் கத்தரிக்காயை போட்டு 2 பக்கமும் பொரித்து எடுக்கவும்.
மிக்ஸியில் வெங்காயம்,பூண்டு,பச்சை மிளகாய்,மல்லி,தக்காளி இவை அனைத்தையும் போட்டு ஒரு சுற்று விட்டு எடுக்கவும்.
இதனுடன் எலுமிச்சை சாறு,உப்பு சேர்க்கவும்.
பொரித்த கத்தரிக்காயை ஒரு தட்டில் பரவலாக அடுக்கி அதன் மீது இந்த சாற்றை ஊற்றவும்.
பிரியாணிக்கு தொட்டுக்கொள்ள சூப்பராக இருக்கும்.தயிர் சட்னிக்கு பதிலாக இதை செய்து பாருங்கள்.


மேலும் சில குறிப்புகள்