பனீர் பூரி

தேதி: December 4, 2010

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு.

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

கோதுமை மாவு - 2 கப்
பனீர் - 1 பாக்கெட்
கோவா - அரைகப்
பொடித்த சர்க்கரை - அரைகப்
வனிலா எசன்ஸ் - ஒருஸ்பூன்
நெய் - 2 ஸ்பூன்
பொரிக்க எண்ணை - தேவையான அளவு


 

பனீரைத்துருவி அத்துடன் உதிர்த்தகோவா,பொடித்தசர்க்கரை,வனிலாஎசன்ஸ் சேர்த்து நன்கு கலந்து வைக்கவும்.
மாவில்தேவையான தண்ணீரூற்றி மிருதுவாகப்பிசையவும்,கடைசியில்கையில் ஒட்டாமலிருக்க நெய்ச்சேர்த்துபிசையவும்.
பிசைந்த மாவிலிருந்து சிறு உருண்டைகள்செய்த்து பூரிகளாகத்திரட்டவும். கலந்துவைத்திருக்கும் பனீர் பூரணத்தைபரவலாக வைத்து இன்னொரு பூரியால் மூடி ஓரங்கள்பிரியாமல் தண்ணீரால் ஒட்டவும்.
கடாயில் எண்ணை வைத்து பூரிகளை பொரித்து எடுக்கவும்.


குழந்தைகள்முதல், பெரியவர்வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

மேலும் சில குறிப்புகள்